Written by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஒவ்வொரு கோயில்களிலும் கருவறையில் தெய்வ சிலையின் பாதத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பாள் கோயிலில் அம்மன் சிலைக்கு கீழே அல்லது எதிரே ஸ்ரீசக்கரம் இருக்கும். முருகன் கோயிலில் முருகனின் பாதத்தில் யந்திரம் இருக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவற்றுக்குரிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு யந்திரத்திற்கும் வெவ்வேறு மந்திரங்கள் உண்டு. அந்த யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம்தான் உயிர் நாடி. மந்திரம் மாறுப்பட்டால் யந்திரத்தின் சக்தி […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் விரைவில் திருமணம் செய்து பேரன், பேத்திகளை பார்க்க ஆசைப்படுவார்கள். அந்த காலத்தில் பிள்ளைகளுக்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்ததால் காலகாலத்திலேயே திருமணம் தடையில்லாமல் நடைபெற்றது. அந்த காலத்தில் மேட்ரிமோனி மையங்கள் இல்லை. கல்யாண தரகர்களும் அதிகம் இல்லை. ஆனால் இன்றோ தடுக்கி விழுந்தால் மேட்ரிமோனி மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெருகிவிட்டது. எத்தனை மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்தாலும் பலருக்கு […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வெற்றி பெற வேண்டும் என்றால் சகிப்புதன்மை இருக்க வேண்டும். ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்பதைபோல, சாதிக்க வேண்டுமானால், நம், கொள்கையின் இலக்கை எட்ட வேண்டுமானால் அத்தகைய நேரமும், காலமும் அமையும்வரையில் காத்திருந்தால் வெற்றிதான். இதைதான் நம் முன்னோர்கள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார்கள். முல்லா வாழ்வில் நடந்த ஒரு சுவரஸ்யமான கதை இது. முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது […]
Written by NIRANJANA வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அவசரம் – பரபரப்பு என்பது இந்த காலத்தில் மட்டுமல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அனைவருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. கண்ணகியின் சிலம்பில் ஒன்றை கோவலன் விற்க சென்றான். அந்த நேரத்தில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு காணாமல் போய் இருந்ததால், அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள் என்று அரசர் உத்தரவிட்டு இருந்தார் அந்த நேரத்தில் தான் கோவலனின் விதி விளையாட தொடங்கியது. ஆம். […]
ஹரி ஓம் – அறிவோம்! புதிய பகுதி விஜய் கிருஷ்ணாராவ் எதற்கெடுத்தாலும் டென்ஷன்-டென்ஷன் என்கிறோமே, எனக்கு தெரிந்து டென்ஷன் ஆகாத தெய்வம் விநாயகர் மட்டும்தான். அன்பே சிவம் என்றாலும் சிவபெருமான் கோபக்காரர். காக்கும் கடவுள் என்று மகாவிஷ்ணுவை சொன்னாலும், அவதாரம் எடுத்து வந்து அழிப்பார். முருகப்பெருமான் யுத்த கடவுள். இப்படி எந்த கடவுளை நீங்கள் கவனித்தாலும் அவர்கள் ஒருவிதத்தில் கோபம்கொண்டவர்கள்தான். ஆனால் விநாயகப்பெருமான், “டேக் இட் ஈசி” என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுபோல, எதையும் சாதாரணமாக […]