Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: உலக செய்திகள்

பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவு திறந்திருந்ததால் பயணிகள் அச்சம்

சவுதி அரேபியாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று விண்ணில் பறந்துக்கொண்டிருந்தப்போது அதன் கதவு சரியாக மூடப்படவில்லை என எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று சவுதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு ஐதரபாத் வழியாக மும்பைக்கு வர இருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் ஒரு கதவு சரியாக […]

அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை போல் வீட்டை மாற்றிய ஆசாமி

டெக்சாஸ்: அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டை ரூ.1.5 கோடி செலவு செய்து வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் லாங்வியூ என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரோன் வாடோ (63). இவருக்கு லாரா (36) என்ற மனைவியும், வாலன்டினா (16), லாரா (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் ரூ.1.5 கோடி செலவு செய்து ஒரு குட்டி வெள்ளை மாளிகை போல் மாற்றியுள்ளார். […]

900 கோடி ரூபாய்க்கு விலைபோன ஓவியம்

அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் வசித்த பிரபல ஓவியர் வரைந்த ஓவியம் சுமார் 900 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஓவியர் பிரன்சிஸ் பேகான் அவரது நண்பர் லுகியன் பிராய்டை 1969 ஆம் ஆண்டு மூன்று கோணங்களில் படம் வரைந்தார். மூன்று கோணங்களில் வரையப்பட்ட இந்த ஓவியம் ஓவியர் பேகானின் தலைச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஓவியம் ஏலம் விடுவதற்காக நியூயார்க் ஏல மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக 85 மில்லியன் டாலருக்கு விற்கும் என்று […]

சனி கிரகத்தின் புதிய படத்தில், நீல நிற புள்ளிப்போல் தோன்றும் பூமி

சூரிய மண்டலத்தில் உள்ள சனி கிரகத்தின் புதிய படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இயற்கையாக சனி கிரகம் எந்த வண்ணத்தில் இருக்கிறதோ அதே வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சனி கிரகம் குறித்து, இதுவரை காணப்படாத காட்சிகள் கொண்ட ஒரு புதிய படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், சனி கிரகம் அதன் 7 சந்திரன்கள், வளையங்கள், பூமி, வெள்ளி மற்றும் செவ்வாய் ஆகியவை இயற்கையான வண்ணத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. சனி கிரகம் […]

ஹங்கேரி : மூளைச்சாவடைந்த கர்பிணியின் வயிற்றில் வளர்ந்த குழந்தை

ஹங்கேரியில் கர்பிணி மூளைச்சாவடைந்த நிலையில், மருத்துவ உபகரணங்களின் உதவியோடு தாய் உயிரோடு இருக்கும் வகையில் கரு, தாயின் வயிற்றிலேயே வளர்க்கப்பட்டு பிரசிவிக்கப்பட்டுள்ளது. 15 வார கர்ப்பிணியாக இருந்த 31 வயது பெண், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவடைந்தார். ஆனால், பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்த கரு ஆரோக்கியமாக இருந்தது. அந்த கரு 27 வாரங்கள் வரை தாயின் கருவறையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்த மருத்துவர்கள், சுமார் 3 மாதங்கள் மருத்துவமனையில் உபகரணங்களின் உதவியோடு […]

மது பாட்டிலில் இந்து கடவுள்களின் படங்களால் சர்ச்சை

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா […]

உலகின் அரிய – பெரிய ‘ஆரஞ்சு வைரம்’

உலகின் அரிய வகை வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் பெரிய அளவிலான ஆரஞ்சு நிற வைரம் இன்று ஜெனிவாவில் ஏலம் விடப்படுகிறது.நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த இந்த வைரத்திற்கு ‘ஆரஞ்சு வைரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே […]

ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம்: புதிய உலக சாதனை

சீனாவை சேர்ந்த ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து புதிய சாதனை புரிந்துள்ளது. சீனாவின் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ‘டி மால்’ நேற்று ஒரேநாளில் ரூ.50ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது. ‘டி மால்’ தவிர வேறு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களை நிர்வாகிக்கும் அலிபாபா நிறுவனம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதியை ‘சிங்கிள்ஸ் டே’ என அறிவித்து, […]

திருமண கேக்கில் மணமக்கள் ‘தலை’

டெக்சாஸ்: திருமணங்களில் கேக் வெட்டும் கலாச்சாரம் இப்போது தான் இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், மேலை நாடுகளிலோ இது தொன்று தொட்டு இருந்து வருகிற பழக்கம். காலப்போக்கில் எல்லாவற்றிலேயும் வித்தியாசத்தை விரும்பும் மனிதர்கள், தங்களது சினிமா ரசனையையும் அதில் புகுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆரம்பகாலத்தில் வெறும் கேக்காக ஆரம்பிக்கப் பட்ட இப்பழக்கம், பின்னர் அதில் வித்தியாசமாக மணமக்கள் உருவ பொம்மைகளை, புகைப்படங்களை புகுத்தும் அளவிற்கு முன்னேறியது. தற்போது அதிலும் ஒரு படி முன்னேறி அமெரிக்க திகில் பட […]

அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன்

நியூயார்க், நவ 9– அமெரிக்காவில் பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 9 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள இப்போலியில் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களை டெப்ராடிரைடென் என்ற பெண் டிரைவர் பஸ்சில் அழைத்து வந்தார். அப்போது பஸ்சில் வந்த ஒரு 9 வயது சிறுவன் குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கை துப்பாக்கியை தனது பைக்குள் வைத்து எடுத்து வந்து இருந்தான். அதை வெளியே எடுத்து சக மாணவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »