வாஷிங்டன், சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது. சீனாவின் உத்தரவு சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் […]
பீஜிங்:இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்தபோது குழந்தை திடீரென கதறி அழுதது. சீனாவில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவில் அகு மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு ஹபே நகரத்தை சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிறந்து சில நாட்களே ஆன அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. […]
லண்டன், நவ. 19- இங்கிலாந்தில் உள்ள பிரபலமான ராடிசன் புளூ எட்வர்டியன் ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர் பஞ்சாபைச் சேர்ந்த பல் மொகிந்தர் சிங் (86) என்பவராவார். தனது இளமைக்காலத்தில் சில வருடங்களை ஆப்பிரிக்காவில் கழித்தபின், இங்கிலாந்திற்கு வந்த மொகிந்தர் சிங் ஹோட்டல் வியாபாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தார். இவரது மகனான ஜஸ்மிந்தர் சிங் என்பவரே தற்போது இந்த ஹோட்டல் நிர்வாகங்களைக் கவனித்து வருகின்றார். இவர் மீதுதான் ஹோட்டல் நிர்வாகத்தை முழுமையாகத் தன் வசப்படுத்திக் கொண்டதாகவும், தங்களது சீக்கிய மத […]
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சை மேற்கொள்வதால் தற்போது அவரால் பேசமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 95 வயதாகும் நெல்சன் மண்டேலாவிற்கு சில மாதங்களுக்கு முன் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், மீண்டும் மண்டேலாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் […]
கொலம்பஸ், நவ.19- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமான போயிங் எம்டி-80 நேற்று டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து 133 பயணிகளுடநும், 5 ஊழியர்களுடனும் புறப்பட்டது. இது டல்லாசின் போர்ட் வொர்த் விமான நிலையத்திலிருந்து இயங்கும் திட்டமிடப்பட்ட பயணமாகும். இந்த விமானம் ஓஹியோ மாநிலத்தின் போர்ட் கொலம்பஸ் சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கும் முன்னர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு எச்சரிக்கை தகவல் நிலையத்தாருக்கு கிடைத்துள்ளது. இதனால் விமானம் ஓஹியோவில் தரையிறங்கியபின்னர் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு […]
லண்டன், நவ. 19– அண்டார்டிகா கடலுக்கு அடியில் குமுறும் எரிமலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி பிரதேசமான அண்டார்டிகாவில் கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐஸ் கட்டிகளுக்கு அடியில் ஏதோ ஒன்று மெதுவாக கொழுந்து விட்டு எரிவதை அறிந்தனர். அதைத்தொடர்ந்து ரேடார் மூலம் அப்பகுதியில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பனிக்கட்டிக்கு அடியில் 1 கிலோ மீட்டர் ஆழத்தில் எரிமலையின் சிகரம் தெரிந்தது. அதற்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை இருப்பது தெரிய வந்தது. இந்த எரிமலை […]
ரஷ்யாவில் கஸன் விமான நிலையத்தில் தரை இறங்கிய போயிங் ரக விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம், ஊழியர்கள் 6 பேர் உட்பட 50 பேருடன் கஸன் நகருக்குச் சென்றது. இரவு 7.25 மணிக்கு கஸன் விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்று முறை பத்திரமாக தரையிறக்க முயன்றும் முடியாததால், விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த பயணிகள் […]
நியூயார்க், நவ. 18– அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லினாய்ஸ், இண்டியானா, கண்டக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகு ரக வாகனங்கள் காற்றில் பரந்தன. ‘டன்’ கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த சூறாவளி புயலுக்கு தாக்குபிடிக்க […]
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார்.ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.‘விக்டோரியா’ (இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி) என்ற பெயர் கொண்ட அந்த […]
அமெரிக்கவாழ் இந்திய மருத்துவரான விஜய் சங்வி என்பவர் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தத் தொகையானது மருத்துவர்கள் விஜய் மற்றும் குஷ்மன் சங்வி அறக்கட்டளை என்ற பெயரில் இதய ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்லோஷிப் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும். இத்தகைய நன்கொடை அறக்கட்டளை அமைப்பை சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை […]