அமெரிக்காவில் இரண்டு பெண்களுக்கு பிறந்தஇரட்டைக்குழந்தைகளில் முதல் குழந்தை கடந்த ஆண்டுஇறுதியிலும், அடுத்த குழந்தை புத்தாண்டிலும்பிறந்ததால் இருவேறு ஆண்டுகளில் பிறந்தசாதனைக்குழந்தைகளாக கொண்டாடப்படுகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மருத்துவமனைஒன்றில் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்குகடந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் மாதம்31ஆம் தேதி இரவு 11 மணி 58 நிமிடங்களுக்குமுதல் குழந்தை பிறந்தது. இரட்டைப்பிரசவமான அதில்புத்தாண்டு பிறந்து ஒரு நிமிடத்தில் அடுத்த குழந்தை பிறந்தது.இரண்டு குழந்தைகளும் பிறந்த நேரத்தில் 3 நிமிடங்கள்தான்என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்த சாதனைக்குழந்தைகள் என்று […]
நியூயார்க், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதரகத்தில், துணைத் தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே ஆடைகளை களைந்து சோதனையிடப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் தொலைபேசியில் பேசிய ஜான் கெர்ரி, இந்தியாவின் உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளை உணர்வதாகம், இந்த நடவடிக்கைக்கு வருந்துவதாகவும் கூறினார். மேலும் இந்த பிரச்சனையால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். […]
கிளிண்டன், டிச.19- அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் […]
லண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர் இங்கிலாந்தின் வயதான தம்பதியாக உள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்கள் இந்த வாரம் தங்களது 88வது திருமண நாளை கொண்டாட உள்ளனர். கார்தாரி (101) அவரது கணவர் கராம் சந்த் (108) பிராட்போர்டு நகரில் வசித்து வருகின்றனர். அவர்களது மகன் பால் சந்த் அந்நகரத்தில் காஸ்டல் பப் ஒன்றை நடத்திவருகிறார். அவர்களுக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற போது 1925ம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
சிங்கப்பூர், டிச. 12– சிங்கப்பூரில் நடந்த பஸ் விபத்தில் புதுக்கோட்டை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரவேல் பலியானார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தமிழர்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 27 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 5 தமிழர்கள் மீது […]
செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, இந்தியர்கள் 20,000 பேர் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான “ஒரு வழிப் பயணம்’ ஒன்றை “மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் […]
அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம். யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 1952லிருந்து 1986 வரை வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றும் சிசில் என்கிற சமையல்காரப் பாத்திரமாக கதை விரிகிறது. இந்த சமையல்காரர் தனது வாழ்நாளில் பல முக்கிய ஜனாதிபதிகளுக்கு சமையல் பரிமாறுகிறார். வரலாற்றில் அமெரிக்கா எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் தனது கண்களால் […]
தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார். சிறிய கோட் […]
வாஷிங்டன், டிச. 2- கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய ஒருமாத காலத்தை நன்றி தெரிவிக்கும் நாளாக (தேங்க்ஸ் கிவிங் டே) கடைபிடிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். இந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை தந்து அசத்துவது இந்த நன்றி தெரிவிக்கும் நாளின் சிறப்பம்சமாகும். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார சரிவை சந்தித்தபோது நன்றி அறிவிப்புக்காக அன்பளிப்புகளை வாங்குபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் மட்டுமே வாங்கி […]