பிரான்சில் பனிச்சறுக்கில் ஈடுபட்டப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எப். 1 சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சையின்போது கண்களை திறந்து மூடியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் பிரெஞ்சு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெரும் மைக்கேல் ஷூமேக்கருக்கு நினைவு மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், அவர் கண்ணைத் திறந்து மூடுவதாகவும், […]
அமெரிக்காவில் தரையில் வீசி குழந்தையை கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த அதன் பெற்றோர் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 33). அவரது மனைவி தேன்மொழி (24). இவர்களது 19 மாத குழந்தை ஆதியன். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின்னர் குழந்தையை கவனித்துக்கொள்ள கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய […]
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா, தான் சிறுவனாக இருந்த போது படிப்பதற்கு அதிகாலையில் கண்விழித்தாலும், ஒரு பொறுப்பற்ற மாணவராக இருந்தேன் என தெரிவித்துள்ளார். டென்னெஸ்கி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா பேசியபோது, என்னுடைய பால்ய பருவத்தில் என்னுடைய தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார். 6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் […]
வெலிங்டன், ஜன.31- உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார். […]
சௌதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப, நடிகை போலவே, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் மனைவி. இதனால், கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று […]
பெர்லின், ஜன. 31- உலகையே ஆட்டிப்படைக்க நினைத்த சர்வாதிகாரி ஹிட்லரின் பேராசையின் விளைவாக 1-9-1939 அன்று தொடங்கிய இரண்டாம் உலகப்போர் 6 ஆண்டு காலம் நீடித்து 2-9-1945 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் ஜெர்மனியின் பல பகுதிகளில் புதைந்து கிடப்பதாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனி மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இந்நிலையில், மேற்கு ஜெர்மனியின் யூனி-சென்டர் அருகே புதிய கட்டுமான பணிகளுக்கான வேலை நடைபெற்று வந்தது. […]
வாஷிங்டன், ஜன. 31- அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய விமான நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. மேலும், தற்போதுள்ள விமானங்களும் கூடுதல் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்று செய்தி வெளியாகி உள்ளது. பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முதல் பிரிவிலிருந்து இரண்டாம் பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளது என இந்திய விமான போக்குவரத்து ஆணைய டைரக்டர் ஜெனரல் பிரபாத் குமார் தெரிவித்தார். மேலும் ஆசிய […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53. பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக […]
குபர்டினோ, ஜன. 16- ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான விளையாட்டுப் பயன்பாடுகளைப் பெறுவதற்கு பெற்றோர்கள் தங்களின் பாஸ்வேர்டுகளை உபயோகிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் உபயோகித்த பின்னர் உடனடியாக மூடப்படாமல் 15 நிமிடம் கழித்தே அந்த சாளரங்கள் (விண்டோஸ்) மூடப்படுவதால் அதற்குள் குழந்தைகள் தங்களுக்கு வேண்டிய பயன்பாட்டுப் பொருட்களை பெற்றோர்களின் ஒப்புதல் இல்லாமல் தங்களின் ஐபாட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொண்டுள்ளனர். இவற்றிற்கான கட்டண விகிதங்கள் 99 சென்ட்டிலிருந்து 99.99 டாலர் வரை மாறுபடும். இதற்காகத் தாங்கள் செலுத்தவேண்டிய கட்டணத் […]
சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் பணக்கட்டுகளை 7 அடி சுவற்றை போல அடுக்கி வைத்துள்ளனர். சீனாவின் சிட்சுவன் மாகாணத்தில் உள்ள ஜென்ஷெ கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இவர்கள் பங்களித்த சங்கத்தின் வருமானம் அருகிலுள்ள வங்கி ஒன்றில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் மொத்த வருமானமான 22 லட்சம் டாலர் மதிப்புடைய சீனப் பணக்கட்டுகளை வங்கியில் இருந்து பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டது. கிராம மக்களுக்கு பிரித்தளிக்கப்பட வேண்டிய இந்த பணக்கட்டுகள் […]