மணிலா, பிப். 17- வடக்கு பிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக எந்த விவரமும் வெளியாகவில்லை. அந்நாட்டின் தலைமை நில அதிர்வு நிபுணரான ரெனட்டோ சொலிடம் இது குறித்து கூறுகையில், நாட்டின் முக்கிய தீவான லுசானின் வடக்கு கடற்கரை பகுதியில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது என்றார். இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார். அந்நாட்டில் கடந்த அக்டோபர் 15ந் தேதி […]
ஜெனிவா, பிப்.17- எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து ரோம் நகருக்கு சென்ற எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனிவாவில் கடத்தல்காரர்களால் மிரட்டப்பட்டு தரையிறக்கப்பட்டதாக சுவிஸ் அரசு உறுதி செய்துள்ளது. உடனடியாக அந்த விமான நிலையம் மூடப்பட்டு காவல்துறையினர் விமானத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும், கடத்தல்காரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்துள்ள பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் சூழ்நிலை கட்டுக்குள் […]
சிங்கப்பூர், பிப். 17- சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் 43 அதிகாரிகள் தாக்கப்பட்டனர். 24 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு இந்தியருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை மீறி கலைந்து செல்ல மறுத்ததால் இவருக்கு 15 வாரங்கள் ஜெயில் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்ற அந்நபரின் பெயர் சிங்காரவேலு விக்னேஷ் […]
டமாஸ்கஸ், சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புகில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில் சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணைய தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து […]
லாகூர், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பகாவை நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர் பஷீர் அகமது இவர் அதே பகுதியை சேர்ந்த இவர் நதீம் எனபவரின் 19 வயது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அப்பெண் மறுத்து விட்டார். இதனால் பஷீர் அகமது ஆத்திரம் அடைந்தார். அப் பெண்ணின் அழகை சிதைக்க முடிவு செய்தார். பின்னர் அவரது மூக்கை அறுத்து துண்டாக்கினார்.இதனால் ரத்த வெள் ளத்தில் துடித்த அப் பெண் […]
லண்டன், பிப். 15– இங்கிலாந்தை சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் பேகன். இவர் கடந்த 1992–ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் தனது ஓரின சேர்க்கை நண்பர் ஜார்ஜ் டயர் என்பவரின் ஓவியத்தை வரைந்து இருந்தார். இந்த ஓவியம் லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் இந்த ஓவியம் ரு.430 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவியம் 6 அடி உயரம் உள்ளது. அதில் ஜார்ஜ் டயர் உடலின் […]
நியூயார்க், அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்கள் பனிப்புயலில் சிக்கி தவித்து வருகின்றன.இதனால் ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வாஷிங்டன், நியூயார்க், நியூ இங்கிலாந்து, விர்ஜீனியா மைனே உள்ளிட்ட பெரும்பாலான நகர மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் பனிககட்டிகளாக உறைந்துவிட்டன. ஜார்ஜியா மற்றும் சவுத் கரோலினாவில் 4 லட்சத்து 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.1500 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பனிப்பொழிவில் சிக்கி தற்போது வரை […]
நைஜீரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மனித இறைச்சியை விற்பனை செய்த குற்றத்திற்காக 11 பேர் கைது செய்யப்பட்டுளளனர். நைஜீரியாவின் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்-ஒக்வுடு பகுதி உள்ளது. அங்குள்ள ஹோட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அந்த ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த ஹோட்டலில் 2 மனித தலைகள், 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. […]
மாஸ்கோ, பிப். 5- ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய புராதனமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி சென்ற ஆண்டு ரஷ்யா வந்தடைந்தது. ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று வந்து கொண்டிருக்கும் இந்த ஜோதியின் தொடர் ஓட்டத்தினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் […]
நியூயார்க், பிப்.5- இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது. இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு, ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன. […]