பாகிஸ்தான் பிரதமரின் பண்ணை வீட்டை காவல் காத்து கொண்டிருந்த மூன்று போலீஸார் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் வளர்த்து வந்த மயில்களில் ஒன்றை பூனை அடித்து தின்று விட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் மயில்களில், ஒரு மயில் இறந்து கிடந்ததை தோட்டக்காரர் பார்த்துள்ளார். பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்களில் ஒருவர், பூனை, மயிலை அடித்து கொன்று விடும் என்றுதான் எதிர்ப்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். […]
கோலாலம்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு 239 பேருடன் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியாட்நாம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளனது என தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். 6.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டிய விமானம், […]
சீனாவின் ஹெயில்லாங்ஜிங் மாகாணத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன். ஒரு நாள் சிறுவனை குளிப்பாட்டும் போது அவனது வயிற்றில் வீக்கம் இருந்ததை தந்தை கவனித்தார். அதைப் பற்றி சிறுவனிடம் கேட்டபோது, அவன் காயங்களை மறைத்துக் கொண்டு மழுப்பலாக பதிலளித்தான். ஆனால், அவனுக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டான். இதையடுத்து, பெற்றோர் அந்த சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையின் போது சிறுவனது வயிற்றில் 4 ஊசிகள் இருப்பது தெரியவந்தது. […]
நியூயார்க், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பலர் திறமை காரணமாக உயர் பதவிகளில் நியமித்து கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வரும் பிரபல வக்கீல் நிஷா அகர்வால் நியூயார்க் மேயர் அலுவலக குடியுரிமை விவகார கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனத்தை மேயர் டி பலாசியோ அறிவித்ததுடன், நிஷா ஏற்கனவே குடியுரிமை வேண்டுவோருக்காக செய்து வரும் பணிக்கு பாராட்டு தெரிவித்தார். நிஷா அகர்வால் அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். […]
வாஷிங்டன், மார்ச். 1– ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே, அவருக்கு அடைக்கலம் தர ரஷிய அதிபர் புதின் சம் மதித்து விட்டார். மேலும், உக்ரைனில் தன்னாட்சி உரிமை பெற்ற கிரிமியா தீபகற்பத்தின் தலைநகர் சிம்பெரோ போவில் உள்ள பாராளுமன்ற […]
காரகாஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள வெனிசூலா நாட்டில் அதிபர் நிகோலஸ் மதுரோ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. காரகாஸ் உள்பட பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதனால் வாகன, லாரிகள் போக்குவரத்து முடக்கி விட்டன. இதன் விளைவாக பால், காய்கறிகள், சமையல் கியாஸ் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வணிக வளாகம், கடைகள் முன் பொதுமக்கள் வெகுநேரம் காத்துக்கிடக்கிறார்கள். […]
கலிபோர்னியா: அமெரிக்காவில் நாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு யோகம் அடித்தது. அங்கு மரத்தடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நாணய புதையல் கிடைத்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள தம்பதி தினமும் காலையில் தனது செல்ல நாயை அழைத்து கொண்டு வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வாறு சென்ற போது ஒரு மரத்தின் அடியில் உடைந்து போன இரும்பு டின் ஒன்றின் பகுதியை கண்டனர். இதனை கண்டு அவர்களுடைய செல்ல நாயும் குரைக்கவே, அதில் என்ன […]
இங்கிலாந்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 9 வயதில் ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களை முழுமையாக படித்துள்ளார். இங்கிலாந்தின் ஆஷ்லே பகுதியில் வசித்து வரும் ஃபெயித் என்ற 9 வயது சிறுமி விதவிதமான புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இவர் இவருடைய வயதுடைய பிற குழந்தைகளை போல இல்லாமல் இந்த வயதிலேயே சுமார் 364 புத்தகங்களை படித்து முடித்துள்ளார். இது குறித்து அச்சிறுமி கூறுகையில், புத்தகம் படிப்பது கணினியில் வீடியோ கேம் விளையாடுவதை போல சுவாரஸ்யமானது, தொலைக்காட்சி […]
பீஜிங், சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தனது 4 மாத குழந்தையை விற்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குய்சோவ் மாகாணத்தை சேர்ந்த சொவ் என்பவர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது 4 மாத குழந்தையை விற்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாராணை நடத்தியதில் அவரது கணவரே குழந்தையை விற்றது தெரியவந்துள்ளது. சொவ் […]
செயலிழந்து போன நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் ராணுவ செயற்கைக்கோளான காஸ்மோஸ்-1220 பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்கலம் பூமியை நெருக்கும் அதனுடைய இயக்கம் கட்டுப்பாடற்று இருக்கும் என்று கர்னல் அலெக்சி சொலோடுகின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு இந்த செயற்கைக்கோள் சிக்லோன்-2 என்ற விண்கலம் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. மூன்று டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் காற்று மண்டலத்தில் நுழையும்போதே பெரும்பான்மையான […]