மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் ‘முரட்டுத்தனம்’ காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாலத்தீவு போலீஸாரின் இந்த செய்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், முகமது நஷீத்தை மாலி போலீஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும், அந்த நடவடிக்கையின்போது நஷீத்தின் சட்டை […]
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக லாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய […]
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் பத்திரிகை ஆசிரியர், கார்டூனிஸ்ட் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தொஅடர்ந்து பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தலைநகர் […]
லண்டனைச் சேர்ந்த ஜோஜோ மெடோஸ் (Jojo Meadows) என்னும் 38 வயது பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள். இவருக்கு மிகவும் அரிதான எலர்ஸ் டான்லோஸ் சின்ட்ரோம் (Ehlers-Danlos Syndrome) என்னும் விநோத நோய் தாக்கியுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் கார் ஓட்ட முடியாது. வீட்டு கதவை திறக்க முடியாது. ஏன் கொட்டாவி கூட விட முடியாது. மீறிச் செய்ய முயன்றால் எலும்புகள் இடம் மாறி, பயங்கர வலியை ஏற்படுத்திவிடும். ஜோஜோ மெடோஸுக்கு ஒருநாளில் அதிகபட்சம் பத்து முறைக்கு மேல் […]
ஹாங்காங்கில் சுமார் 68 மில்லயன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, சாலையில் விழுந்து சிதறிய பண நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர். பணத்தை ஏற்றி வந்த லாரி சாலை விபத்தில் சிக்கியதையடுத்து சுமார் முப்பத்தியைந்து மில்லியன் ஹாங்காங் டாலர்கள் (சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான பண நோட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன. இதைப் பார்த்தவர்கள், ஒடி வந்து தங்களால் முடிந்த […]
உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம் கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன் […]
செவ்வாயில் எலியன்ஸ்கள் சாலையை கடக்க டிராபிக் சிக்னல் பயன்படுத்துகிறார்களா? ஒரு வேடிக்கையான கேள்வியுடன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று தெரியவந்துள்ளது. “டிராபிக் சிக்னல்” தொடர்பான புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். நாசாவின் கியூரியாசிட்டி விண்கலமானது தற்போது செவ்வாயின் மேற்பரைப்பை ஆராய்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் […]
அபுஜா, செப். 26– நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபக் கிராமத்தில் பள்ளி விடுதியில் புகுந்து அங்கிருந்த 270 மாணவிகளை போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களில் 50–க்கும் மேற்பட்டோர் தப்பி வந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரை தீவிரவாதிகள் சிறை வைத்துள்ளனர். இவர்களை விடுவிக்கும் படி சர்வதேச நாடுகள் வலியுறுத்தியும் தீவிரவாதிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் 20 வயது மாணவி ஒருவர் மட்டும் அபுஜாவுக்கு திரும்பி வந்தார். அவரை தீவிரவாதிகள் விடுதலை செய்து […]
சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா ( வயது 57).இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார்.அப்போது கீழே இருந்த கத்தி ஒன்று அவரது தலையில் 11 செ. மீட்டர் அளவிற்கு உள்ளே சென்று விட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். சீன மருத்துவமனையில் டாக்டர் சன் யங் தலைமையில் நடந்த அறுவை சிகிச்சையில் அவரது தலையில் இருந்த கத்தி எடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எவ்வித […]
ஜெனீவா, மே 21- உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஷ்யாவை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று சுவிட்ஸர்லாந்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பிரபல கோடீஸ்வரர் ஆலிகாச் ட்மிட்ரி ரைபோலோவ்லேவ். இவர் 8.8 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை […]