மைக்கேல் ஜாக்சன் தன் மரணத்துக்கு பிறகும் கடந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய சாதனை வரிசையில் முதல் இடம்பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி மற்றும் கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் ஷூல்ஸ்சுனின் சாதனையை மைக்கேல் ஜாக்சன் முறியடித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். கடந்த ஆண்டு அதிகவருமானம் ஈட்டியவர்கள் வரிசையில் எலிசபெத் டெய்லர் முதல் இடம்பிடித்ததால் இவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து […]
சமீபகாலமாக சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகமாகத் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்களிடையே கெட்டபெயர் ஏற்படுவதைத் தடுக்க அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மா சே துங் காலத்து ஸ்டைலில் ஒரு யுத்தியை கையாண்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் இப்போது அந்த நாட்டு தொலைக்காட்சியில் பிரைம் டைமில் வந்து பாவ மன்னிப்பு கேட்கிறார்கள். “அதிகார வெறி எனக்கு தலைக்கேறி விட்டது. சின்ன கார் போதாது என்று சொகுசு கார் வாங்கிவிட்டேன். ஆடம்பரமான கேளிக்கைகளில் […]
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஜேம்ஸ்பாண்டின் ஆக்ஷன் நடிப்பைக்கூட ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் அந்தப் படங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் மூழ்கி காரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இந்த நீர்மூழ்கி கார் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபணர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பல திரைப்படங்கள் நடித்து மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது. 1977இல் வெளிவந்த “தி ஸ்பை ஹூ லவ்டு மீ” ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த கார் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தற்போதும் இயங்கும் […]
லாஸ் ஏஞ்சல்ஸ் 59 வயதாகும் பிரபல ஆக்ஷன் நடிகர் ஜாக்கி சான் சீனாவின் யிஸ்குவாங் மாவட்டத்தில் ஜே.சி வேர்ல்டு என்ற நினைவு பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளார்.பொதுவாக சீனாவில் தீம் பார்ர்க்குகள் அதிகரித்து வருகின்றன.சமீபத்தில் தான் முதல் பறவைகள் தீம்பார்க் இங்கு உருவாக்கபட்டது. 2015 இல் டிஸ்னி ஒரு தீம்பார்க் திறக்கவும். ஸ்டீபன் ஸீபில் பர்க் 2016 இல் ஒரு தீம் பார்க் திறக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த தீம் பார்க் குறித்து ஜாக்கி சான் கூறியதாவது:- […]
போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சன்ஸ்தா என்ற அமைப்பு அமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆலிவுட் சிட்டி அருகே சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை ரூ.550 கோடி செலவில் கட்டி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டான இக்கோவில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் இது முதன்மையானதாக உள்ளது. கைகளால் கவனமுடன் செதுக்கப்பட்ட 35 ஆயிரம் இத்தாலிய மார்பிள் கற்கள் மற்றும் இந்திய மணற்பாறைகளை கொண்டு இக்கோவில் […]
நம்மில் பலருக்கு பிடித்த உணவு மசாலா தோசை. அதை ஒருவர் தன் வாழ்நாளில் ருசித்தே ஆக வேண்டும் என்கிறது அமெரிக்கா. உலகின் 10 சிறந்த உணவுகளை அமெரிக்க பத்திரிகையான “ஹபிங்டன் போஸ்ட்” பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவுக்கு இடம் கிடைத்திருப்பது உணவு பிரியர்களுக்கு சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது. பத்து உணவுகளை கொண்டுள்ள இந்த பட்டியலில் நமது தென்னிந்திய உணவான மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் பேகிங்டக், அமெரிக்காவின் பிபிஓ ரிப்ஸ், […]