வானத்தில், ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தோன்றியது, சீன மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.. சீனாவின் வடக்குப் பகுதியான, மங்கோலியாவில், வசிக்கும் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த அதிசய நிகழ்வை பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் சூரியனுக்கு பக்கவாட்டில், சற்று சிறிய அளவில் மேலும் 2 சூரியன்கள் காணப்பட்டன. அவற்றுடன் சூரியன்களுக்கு அருகில் வானவில்லும் தோன்றியது. இந்த காட்சியினை மங்கோலிய மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.. பூமியின் மேலடுக்கில், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தால், இதுபோன்ற தோற்றங்கள் […]
உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவு பற்றிய மர்மம் அதிகரித்த வேளையில் அவரது சாவுக்கு அவரது மருத்துவர்தான் காரணம் என்று போலீசாரால் துப்பறியப்பட்டது. அவரது குடும்ப டாக்டர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 6 வாரங்கள் நடைபெற்றது. […]
வாஷிங்டன், அக்.29– செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தது. காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை போன்ற வற்றை அளவீடு செய்து தகவல்களை அனுப்பி வருகிறது. கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நிலப் பரப்பில் ஆங்காங்கே நகர்ந்து மாதிரிகளை சேகரித்து வருகிறது. […]
பிரிட்டனில் “செயிண்ட் ஜூடு’ புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மின்சார வசதி துண்டிக்கப்பட்டது. ஜூடு புயல் காரணமாக தலைநகர் லண்டனிலும் பிரிட்டனின் மற்ற பகுதிகளிலும் கன மழை பெய்தது. சூறைக்காற்று பலமாக வீசியதால் லண்டனுக்கு வடக்கில் உள்ள கெண்ட் மற்றும் வாட்ஃபோர்டு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்து 17 வயது பெண்ணும் ஒரு முதியவரும் இறந்தனர். மேற்கு லண்டனில் மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட காஸ் வெடிவிபத்து மற்றும் வீடு இடிந்தது ஆகிய சம்பவங்களில் ஒரு […]
உலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் இன்று திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம் உலக அளவில் 2வது பெரிய பயணிகள் விமானநிலையம் ஆகும். இந்த விமானநிலையத்தில் 160 மில்லியன் பயணிகளை ஆண்டுக்கு கையாள முடியும். மேலும் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் கார்கோ சரக்குகள் வந்து இறங்க முடியும். இந்த விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் புடாபெஸ்டில் இருந்து வந்திறங்கியது, அதனை விமானநிலையத்தில் அனைவரும் உற்சாகமாக வரவேற்றனர். ஜோதிட கட்டுரை படிக்க […]
வாஷிங்டன்: அமெரிக்க வாழ் இந்திய பெண் எமிலி ஷா, 2014 ம் ஆண்டிற்கான மிஸ் நியூஜெர்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க வாழ் இந்தியரன எமிலி ஷா மிஸ் நியூஜெர்சியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனால் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியிலும், மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் இவர் கலந்து கொள்ள முடியும். 18 வயதான எமிலியின் தந்தை பிரசாந்த் ஷா ஹாலிவுட் படத் தயாரிப்பாளராக உள்ளார். இந்தி சினிமாவிலும், சில ஹாலிவுட் படங்களி லும் நடித்துள்ள […]
7 கிரகங்களுடன் கூடிய புதிய சூரிய குடும்பம் ஒன்றை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தைப் போன்று சில ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் சிறிய கிரகங்கள் முதல் பெரிய கிரகங்கள் வரை வரிசையாக உள்ளதாகவும், முதல் 5 கிரகங்கள் மட்டுமே தெளிவாக தெரிவதாகவும், அடுத்துள்ள கிரகங்கள் தெளிவாக புலப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் […]
சீனாவில், சிகிச்சை திருப்தியளிக்காததால், டாக்டரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். சீனாவின் சேஜியாங் மாகாணம் வென்லீங் நகரில் காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு, மருத்துவர் வாங், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லியான்(33) என்பவர் அங்கு கத்தியுடன் நுழைந்து மருத்துவரை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற இரண்டு ஊழியர்களுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில் மருத்துவர் உயிரிழந்தார். மற்ற இருவரும் காயத்துடன் சிகிச்சை பெற்று […]
டுவிட்டர் வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செளஃபியேன் (17) என்ற அந்த இளைஞர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஒபாமாவிற்கு கொலை மிட்டல் விடுத்ததற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் […]
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் இணையதளத்தை சமூக விரோதிகள் சிலர் முடக்கி வைத்துள்ளதால், பல மணி நேரங்களாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் இந்த இணையதளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு போனது. என்எஸ்ஏ.ஜிஓபி என்ற அந்த இணையதளத்தை யாராலும் பார்க்க முடியாமல் போனது. அதனை சில சமூக விரோதிகள் முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் […]