பிலிப்பைன்ஸ் நாட்டில் சமர் தீவு உள்ளது. இது தலைநகர் மணிலாவில் இருந்து தென் கிழக்கில் 600 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தீவை ‘ஹையான்’ என்ற புயல் நெருங்கி வந்து மிரட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த புயல் பிலிப்பைன்ஸ் நேரப்படி இன்று அதிகாலை 4.40 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.40-க்கு) கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் கடுமையான சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் […]
பீஜிங், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மங்கள்யான் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக கருதப்படும் சீனாவும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது. இது குறித்து, சீனாவில் இயங்கி வரும் தெற்காசிய கல்வி அகடாமி பேராசிரியர் யி ஹைலின் கூறும்போது, ‘‘செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக உலக நாடுகள் […]
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, அமெரிக்க வாழ் இந்தியக் குழந்தைகளுடன் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது, பாலிவுட் பாடலுக்கு அவர் நடனமாடினார். வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு, நியூயார்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க-இந்திய இசைக்குழுவான “கோல்டு ஸ்பாட் குழு’ வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவின் அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மிஷெல் […]
செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி […]
வெற்றி களிப்புடன் தாயகம் திரும்பிய ஆசிய பசிபிக் அழகியின் வைர கிரீடத்தை மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்கோரியாவில் உள்ள புஷன் நகரில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆசிய பசிபிக் அழகிப்போட்டி நடைபெற்றது. 49 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த சிரிஷ்டி ரமணா முதல் இடத்தை பிடித்து சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முன்னாள் ஆசிய பசிப் அழகி ஹிமாங்கினி சிங் யாது […]
அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதராக பதவி வகிக்கும் நிருபமா ராவ்(62) தனது பணிக்காலத்தை நிறைவு செய்தார். கடந்த 40 ஆண்டுகளாக இந்திய வெளியுறவு துறை செயலாளர், சீனா மற்றும் இலங்கைக்கான உயர் தூதர் உள்ளிட்ட பதவிகளை வகித்த நிருபமா ராவ் பணிநிறைவையடுத்து அமெரிக்க வெளியுறவு துறை சார்பில் அவருக்கு வழியனுப்பு விழா விருந்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாட்டு தூதர்களும், அமெரிக்க வெளியுறவு துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். விருந்துக்கு நன்றி தெரிவித்து […]
லாஸ்ஏஞ்சல்ஸ்:விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தபடி தனது 100வது பிறந்தநாளை கலிபோர்னியாவை சேர்ந்த தாத்தா ஒருவர் கொண்டாடியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா தென் பகுதியை சேர்ந்தவர் வீனன் மேனார்ட் (100). கார் வியாபாரியான இவர், வயது காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இவருக்கு தனது 100வது பிறந்த நாளை விமானத்தில் உயரமான பகுதிக்கு சென்று அங்கிருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தவாறு கொண்டாட வேண்டும் என்று வித்தியாசமாக ஆசை ஏற்பட்டது. இது குறித்து தனது […]
நியூ ஜெர்சி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வணிக வளாகம் நேற்று மூடுவதற்கு முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசாரும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வணிக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் […]
கனடாவில் உள்ள ஒரு நகரின் தெருவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது. பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) […]
விமான பயணத்திலும் போலி டிக்கெட் அறிமுகமான ஒரு சம்பவம் வெனிசுலா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள காரகாஸ் நகரில் இருந்து கனடா நாட்டிற்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் 5 பயணிகள் கூடுதலாக இருப்பது விமானிக்கு தெரியவந்தது. உடனே 5 பேரையும் சிப்பந்திகள் கீழே இறக்கி பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த 5 பயணிகளிடமும் விசாரணை நடத்தியதில் 4 பேர் ஈரான் நாட்டையும், ஒருவர் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களிடம் கனடா செல்வதற்கான […]