Thursday 23rd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: தமிழகம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் -2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை 2 ஆண்டுகள் பணிக்கு பின்னரே இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஐஏஸ் அதிகாரி அசோக் கெம்கா, உத்திரபிரதேச  மாநில ஐஏஎஸ் அதிகாரி துர்கா நாக்பால் ஆகியோர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரமணாக, பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ், […]

IFS தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் வெற்றி

வனத்துறையில் உயர் அதிகாரிகளை நேரடியாக தேர்வு செய்வதற்கான IFS தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்..அதிலும் திண்டுக்கல்லை சேர்ந்த கவுதம் அகில இந்திய அளவில் 3 ஆம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். வனத்துறைக்கு வளம்சேர்க்கப்போகும் அவர்களை வாழ்த்தி தமிழகத்தில் இருந்து ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக பணியேற்கப்போகும் 15 பேரில் நால்வரை நேர்கண்டு வந்திருக்கிறார் செய்தியாளர் ராம்குமார் ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் IFS தேர்வில் தமிழகத்தை […]

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை இல்லை: தமிழக அரசு

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தடை எதுவும் இல்லை என்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எஸ். குணசேகரன் (சிவகங்கை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) ஆகியோர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி இல்லாததால் சாதாரண மக்கள் வீடுகட்ட முடியவில்லை. மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன என்று […]

மது குடித்துவிட்டு வேலைக்கு வந்தால் ‘சஸ்பெண்டு’: என்.எல்.சி. நிர்வாகம் எச்சரிக்கை

நெய்வேலி, ஜன.31– என்.எல்.சி. நிர்வாகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:– என்.எல்.சி. சுரங்க பகுதிகளில் சில தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இது பணியிடத்து ஒழுக்கத்தையும், சூழ்நிலையையும் கெடுக்கும் விதமாக அமைகிறது. என்.எல்.சி.யின் நிலை ஆணை விதியின்படி, பணியிடத்தில் மது அருந்துதல், அமைதி குலைவு ஒழுங்கின்மையாக நடத்தல் குற்றமாகும். தொழிலாளர்கள் குடிபோதையில் பணிக்கு வந்து தங்களுக்கும், சக தொழிலாளர்களுக்கும், எந்திரங்களுக்கும் பாதுகாப்பு இன்மையை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று […]

தமிழகத்தில் கோமாரி நோய் இல்லை: தமிழக அரசு

கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் கோமாரி நோய் இல்லை என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், கடந்த டிசம்பரம் மாதத்திலேயே தமிழகம் முழுவதும் கோமாரி நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்றார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக […]

ரூ.48 கோடியே 33 லட்சம் செலவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்“

சென்னை, ஜன. 2– தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– மருத்துவத் துறையில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி தரமான சுகாதார சேவைகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற சீரிய நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 45 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் 682 […]

காற்றழுத்த நிலை வலுப்பெற்றது: கடலோர தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, ஜன. 2– வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தென்கிழக்கு அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு […]

சமையல் எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் ‘விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்’

சென்னை, தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும். இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு […]

24 மணிநேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

உடல்நலம் குறித்த பல்வேறு தகவல்களை அறியவும் மற்றும் பல பயனுள்ள தகவல்களை அறியவும் உதவும் வகையில் 24 மணி நேர தொலைபேசி ‘104’ மருத்துவ சேவையினை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல் […]

மின்வாரிய ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு வழங்கி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஊதிய மாற்றுக்குழு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் 30.11.2011 அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக்குழு ஒன்றினை அமைக்க நான் ஆணையிட்டேன். அதன்படி […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »