சென்னை, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) 66–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாள் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தனது 66–வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். ‘எனது பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அது பயன்பெறுவோரை மகிழ்விக்கும், என்னை மேலும் உற்சாகப்படுத்தும்’ […]
சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவித்த நாளுக்குள் விண்ணப் பிக்க தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புவோர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க லாம். தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு […]
சென்னை, பிப்.7 – போலீஸ் உயர் அதிகாரிகள் 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறை இலாக்காவின் முதன்மை செயலாளர் அபூர்வவர்மா வெளியிட்டுள்ள அரசு ஆணை குறித்து கூறியிருப்பதாவது:_ சென்னை அமுலாக்கப்பிரிவில் ஜஜியாக உள்ள எஸ்.என்.சேசஷாயி, புதிய பதவியாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர ஆணையராகவும், டி.ஐ.ஜி.யாகவும் உள்ள என்.கே.செந்தாமரைக்கண்ணன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் துறைக்கு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள விஜேந்திர எஸ்.பிதாரி, மதுரை மாவட்ட […]
வரும் நிதியாண்டுக்கான (2014-15) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பிப்ரவரி 13- ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக, தமிழக சட்டப் பேரவையை அன்றைய தினம் காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வியாழக்கிழமை வெளியிட்டார். நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்காவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை வரும் 13- ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். […]
சென்னை, பிப். 5– பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘‘பாரம்பரியம் மிக்க பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 57 பேரை இரு வேறு சம்பவங்களில் அவர்களது 11 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இது குறித்து தங்களுக்கு கடந்த ஜனவரி 30–ந் தேதியும், கடந்த 3–ந் தேதியும் கடிதங்கள் எழுதியிருந்தேன். கடந்த ஜனவரி 27–ந் தேதி சென்னையில் மீனவர்கள் மட்டத்தில் […]
சென்னை, பிப். 5– பாராளுமன்றத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் தலைவர்கள் சமீபத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தங்களுக்கு தலா 3 தொகுதிகள் வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக […]
சென்னை, பிப்.1-_ முதல்_அமைச்சர் ஜெயலலிதா அங்கன் வாடி கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.96.31 கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார் என்று சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதிதெரிவித்தார். பல்லடம் தொகுதியில் உள்ள வலையப்பாளையம் மற்றும் அகிலாண்டபுரத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்ததால் அவை சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகின்றன. புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என்று பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பரமசிவம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பா.வளர்மதி கூறியதாவது:_ அங்கன்வாடி மையங்களுக்கு தேவைப்படும் புதிய […]
சென்னை, பிப்.1: தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் நேற்று அதிகாரப்பூர்வ முறைப்படி அறிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2_ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7_ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக […]
சென்னை, பிப்.1 – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என பல்வேறு விதமான ஊழல்கள் மூலம் ஏற்பட்ட பல லட்சம் கோடி பொய் இழப்பினை மீட்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, அவற்றை அரசு கருவூலத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை, அமெரிக்க டாலருக்கு […]
வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு […]