நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உதயமான தினமாகும். அன்று பிற மொழிப் படங்கள் எதையும் திரையிடக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பிற மொழிப் படங்கள் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளில் புகுந்து படத்தை நிறுத்தி, ரசிகர்களையும் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் கத்தி, இந்திப் படமான ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. FM உள்ளிட்ட வானொலி சேவைகளிலும் நவம்பர் ஒன்றன்று கன்னடம் தவிர்த்து வேறு […]
பெங்களூர் பெங்களூர் ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்கும் நடவடிக்கைகளில் அ.தி.மு.க.வின் சட்டப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று அ.தி.மு.க. வக்கீல்கள் பெங்களூரில் கூடி நீண்ட நேரம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்படும் அப்பீல் மனுவில் எத்தகைய அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தயாரிக்கப்பட்டது. பொதுவாக சிறை தண்டனை விதிக்கப்படும் ஒருவர், 3 ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை பெற்றிருந்தால் எங்கு தீர்ப்பு வழங்கப்பட்டதோ […]
சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் – அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். இதனால் அவருக் குப் பதிலாக புதிய முதல்- அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை ஏற்பட்டது.புதிய முதல் – அமைச்சரை தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரசக்கூட்டம் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் […]
பெங்களூர், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு கடந்த சனிக்கிழமை 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இதை தொடர்ந்து கைது செய்யபட்ட அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று 3-வது நாளாக அவர் சிறைச்சாலையில் உள்ளார். பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. […]
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்துக்கு இயக்கப்படும் அம்மாநில அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெங்களூரில் இருந்து ஒசூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பகல் நேரத்திலும் மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இரவு நேரத்திலும் பெங்களூரிலிருந்து கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு பாதகமாக வந்தால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கருதும் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகம் இன்று அதிகாலை […]
பெங்களூர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு […]
புதுடெல்லி, தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில், நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்த தீர்ப்பை வேறு மாநிலத்தில் வைத்து வழங்கவோ அல்லது, தீர்ப்பின்போது ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவோ உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்.ராஜாராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் […]
சென்னை, செப். 26– பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடந்த 22–ந்தேதி ஈரான் கடலோர காவல் படையால் பிடித்து சிறை வைக்கப்பட்டுள்ளது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சசிகுமார் (40), அந்தோணி (29), அந்தோணி (34), ஆரோக்கியம் (30) ஆகிய 4 பேரும் ஒப்பந்த அடிப்படையில் கத்தார் […]
சென்னை, செப். 26– அம்பத்தூர் பால் பண்ணைக்கு விழுப்புரம் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆவின் பால் லாரிகளில் பாலை திருடி விட்டு அதில் தண்ணீர் கலந்து அனுப்பிய சம்பவத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் கண்டு பிடித்தனர். சென்னைக்கு வரும் ஒவ்வொரு ஆவின் பால் லாரிகளில் இருந்தும் குறிப்பிட்ட அளவு பாலை திருடிய பிறகு அதே அளவுக்கு தண்ணீர் நிரப்பிய சம்பவம் பல வருடங்களாக நடந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த மோசடிக்கு […]
சென்னை பள்ளிக்கரணையில் கணவரைக் கொலை செய்துவிட்டு நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி, கொலைக்கு உதவிய கள்ளக் காதலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பள்ளிக்கரணை நன்மங்கலம் அருகே உள்ள ஜி.பி.சாமிநகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கட்டடத் தொழிலாளி. இந்நிலையில் சத்யநாராயணன் கடந்த 22-ம் தேதி நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக அவரது மனைவி அம்சரேகா தெரிவித்தார். ஆனால், சத்யநாராயணனின் சாவில் சந்தேகமடைந்த அவரது சகோதரி அஞ்சலை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், வழக்குப் […]