சென்னை, நவ. 7 – சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா வருகை தந்ததால் அவரைக் காணவும், சோதனை ஓட்டத்தைக் காணவும் பெருமளவில் மக்கள் திரண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோயம்பேடு பணிமனையில், சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், […]
செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராய மங்கள்யான் செயற்கைக் கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இது திட்டமிட்டபடி புவி வட்டப் பாதையில் இணைந்துள்ளது. சிக்கலான மங்கள்யான் திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் மங்கள்யான்’ விண்கலத்தின் பயணம் மற்றும் ஆய்வுகள் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கும் வகையில் இஸ்ரோ (ISRO’s Mars Orbiter Mission) என்ற பெயரில் ஃபேஸ்புக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி […]
உலக செஸ் சாம்பியன் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுகிறார்கள். இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டி […]
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 12ஆம் தேதி முதல் கார்த்திகை உற்சவம் தொடங்குகிறது. இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கார்த்திகை உற்சவம் 12.11.2013 முதல் 21.11.2013 வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் 10 நாள்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடிவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 17ஆம் தேதி (ஞாயிறு) திருக்கார்த்திகை அன்று திருக்கோயில் முழுதும் லட்சதீபம் ஏற்றப்படும். […]
சென்னை, நவ.6: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை _ சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்_பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2_வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் […]
பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சார் பதிவாளர் அலுவலகங்களில் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படுவது அனைத்தும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக பத்திரப்பதிவு துறை அலுவலக நிகழ்வுகளை காமரா மூலம் கண்காணிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தவகையில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 3 முகாம் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா மூலம் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று […]
சென்னை, நவ. 5 – வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால். தமிழக கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுத்துள்ளார். இயக்குனர் ரமணன் தகவல். வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை […]
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் […]
ஈரோடு:ஈரோட்டில் இருந்து நேற்றிரவு 7 மணிக்கு அரசு பஸ் காரைக்கால் புறப்பட்டது. நாகூரை சேர்ந்த குழந்தைவேலு (47) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ் ஈரோடு அரசு மருத்துவமனையை தாண்டியதும் டிரைவர் குழந்தைவேலு உடல்நிலை திடீரென மோசமானது. அவரது கை, கால்கள் செயல் இழந்தன. நிலைமையை உணர்ந்த குழந்தைவேலு மிகவும் சிரமப்பட்டு திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். நடுரோட்டில் பஸ் நின்றதால் பயணிகள், டிரைவரிடம் விசாரித்தனர். அதிர்ச்சியுடன் இருந்த டிரைவர் […]
சென்னை, நவ. 4 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது குமரி கடலோர பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த […]