வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. சென்னைக்கு அருகே 650 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிலை கொண்டிருப்பதால் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது: அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. சென்னையில் […]
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் செல்லக்கூடாது என்று தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. காமன்வெல்த் மாநாடு இலங்கையில் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் […]
திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழா முருகப்பெருமானின் 2–வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவுள் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 3–ந் தேதி யாக சாலை பூஜையுடன் […]
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் மீட்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பாக் நீரினை பகுதியில், மீன் பிடிக்கச் செல்லும் அப்பாவித் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 30 பேரும், அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளும், இலங்கை கடற்படையால் […]
சென்னை, ஆவணப் பதிவு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சார்பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் திட்டத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இனி சொந்தக் கட்டிடம் நில ஆவணங்கள் பதிவு செய்தல், வில்லங்கச் சான்று வழங்குதல், திருமணப் பதிவு போன்ற பணிகளுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களை பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் நாடி வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருவதோடு, பதிவு ஆவணங்களை பராமரிப்பதற்கும், பணியாளர்கள் பணியாற்றுவதற்கு போதிய […]
சென்னையில் தமிழில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். சான்றிதழ் பெற்றோர் மற்றும் புதிதாக பெற விரும்புவோர் இந்த புதிய திட்டத்தில், தங்கள் விருப்பப்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் அறுசுவை சமையல் […]
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (8ம் தேதி) மாலை 4.35 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 […]
சென்னை, உலக செஸ்போட்டியில் கார்ல்செனின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், தனக்கு உதவியாக இருக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டார். ஆனந்த் பேட்டி நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நாளை தொடங்குகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் யார் முதலில் 6.5 புள்ளிகளை எட்டுகிறார்களோ? […]
சென்னை விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். உலக சதுரங்க போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியை தொடக்கி வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:– சதுரங்கத்துக்கு பொற்காலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில், இந்தப்போட்டி நடைபெறுவது, சதுரங்கத்துக்கு பொற்காலமாகும். மிகப்பழமையான புத்திகூர்மைக்கான இந்த விளையாட்டின் தாயகமான இந்தியாவில், முதல்முறையாக இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலக சதுரங்க வாகையர் […]
பீஜிங், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மங்கள்யான் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. ஆசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டி நாடாக கருதப்படும் சீனாவும் இத்திட்டத்தை வரவேற்றுள்ளது. இது குறித்து, சீனாவில் இயங்கி வரும் தெற்காசிய கல்வி அகடாமி பேராசிரியர் யி ஹைலின் கூறும்போது, ‘‘செவ்வாய் கிரக ஆய்வில் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக உலக நாடுகள் […]