ஊத்தங்கரை அருகே கோமாரி நோய் பாதிப்பால் 5 மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளதால் உரிய நடவடிககை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் கிராமத்தைதச் சேர்ந்த விஜயரங்கன் 6 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். இதில் 5 மாடுகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தன. அரசு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 மாடுகளும் உயிரிழந்தன. கோமாரி நோய் பாதிப்பால் மாடுகள் […]
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்தார். இதை நினைவுகூரும் வகையில் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகைதீப திருவிழா கடந்த 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளாக 13–ந் தேதி வெள்ளிதேரோட்டமும், 14–ந் தேதி மகாதேரோட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் […]
நடிகர் “திடீர்’ கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த “திடீர்’ கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். “அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் முதன் முதலாக […]
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை உச்சியில் இருந்த பாறை ஒன்று கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி அந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது. ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மலை உச்சியில் உள்ள 2 டன் எடை கொண்ட ராட்சத பாறை […]
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார்.ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.‘விக்டோரியா’ (இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி) என்ற பெயர் கொண்ட அந்த […]
ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது 1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார். அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு […]
அமெரிக்கவாழ் இந்திய மருத்துவரான விஜய் சங்வி என்பவர் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தத் தொகையானது மருத்துவர்கள் விஜய் மற்றும் குஷ்மன் சங்வி அறக்கட்டளை என்ற பெயரில் இதய ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்லோஷிப் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும். இத்தகைய நன்கொடை அறக்கட்டளை அமைப்பை சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை […]
திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் உச்சக்கட்ட திருவிழாவான கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். மலையில் மகா தீபம் ஏற்றும் போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச […]
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே […]