சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சாஹரி அம்மாள் விஸ்வநாத ஐயர் நினைவாக அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பவள மாலையை காணிக்கையாக கொடுத்தார்கள். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தின் போது திருத்தேரில் ஸ்ரீ நடராஜர் அலங்காரத்தில் காட்சி தருவார். அப்போது, நடராஜருக்கு இந்த மாலை அணிவிக்கப்படும். இத்தாலி நாட்டை சேர்ந்த இந்த பவள மாலையில் 20 பவுன் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. பவள மணியின் எடை 961 கிராம் 600 மில்லி கிராம். இந்த […]
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் புதுப்பிக்கும் பணி காரணமாக சனிக்கிழமை முதல் (நவம்பர் 23) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பு:சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளதால் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அந்த மேம்பாலத்தில் இரு வழிகளிலும் செல்ல தடை செய்யப்படுகிறது. இலகு ரக வாகனங்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிவரை பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படும். […]
சென்னை, நவ. 21– அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– 4.12.2013 அன்று நடை பெற உள்ள ஏற்காடு சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வருகிற 28–ந்தேதி (வியாழக்கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 1. பேசும் இடம்: மின்னாம் பள்ளி, (வழி– காரிப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம். பெருமாபாளையம், டோல்கேட்) […]
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில தினங்களுக்கு முன் நாகப்படினம் அருகே கரையை கடந்தது.இந்த நிலையில், தற்போது மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி வருகிறது. இந்த புயல் சின்னம் தமிழகத்தை நெருங்கி வருவதால், புதுச்சேரி கடலூர், மற்றும் நாகைதுறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 650 கிமீ தொலைவில் புதிய காற்றழுத்து தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக […]
சென்னை, நவ. 18- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 25-ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. நந்தனம் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி மற்றும் காயிதே மில்லத் கல்லூரி ஆகிய இடங்களில் இப்பணி நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதங்கள் மற்றும் தேவையான படிவங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் […]
சென்னை, நவ.18- நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன. இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது. இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து […]
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.9-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவ விபரம்: டிச.10-ம் வெள்ளி சந்திரபிரபை வாகன வீதிஉலா, 11-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகன வீதிஉலா, 12-ம் தேதி வெள்ள பூதவாகன வீதிஉலா, 13-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 14-ம் தேதி வெள்ளி யானை வாகன […]
சென்னை, நவ.18 – சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்திகள் வழங்கும் திட்டம் இந்த வாரத்துக்குள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வழங்கப்படுகின்றன. மேலும் இந்த உணவகங்களில் ரூ. 3_க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும் என்று முதல்வர் […]
சென்னை, நவ.18 – இடி – மின்னல் – மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக, 18.10.2013 அன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகைய்யா என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்; ஈரோடு மாவட்டம், […]
சென்னை, நவ.18 – காற்றழுத்த தாழ்வு நிலை பரவியதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் நேற்று மதியம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. புயல் சின்னம் கரையை கடந்தபோது […]