டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொதுமேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி […]
சென்னை, மக்கள் நலனையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்வதுடன், டீசல் விநியோக கமிஷன் தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மக்கள் விரோதச் செயல் இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், டீசல், பெட்ரோல், ஆகியவற்றின் விலைகளை அடிக்கடி உயர்த்தி இந்தியாவை […]
சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்ழுழு கூட்டம் இன்று மதியம் 3மணிக்கு நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் கனிந்துள்ளதாகவும், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிமுக பாடுபடும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் வகுக்க, முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் தமிழகத்தின் […]
தஞ்சாவூர் தஞ்சை பெரியகோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும்பணி சிறப்பு பூஜைகளுடன் இன்று தொடங்கியது. 3 நிலைகளில் அமைக்கப்படும் இந்த தேரில் 231 சிற்பங்கள் பொருத்தப்படுகிறது. தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்படும் என சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத்தொடர்ந்து […]
சென்னை, டிச. 12– சென்னை தலைமை செயலகத்தில் கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், ‘‘தமிழகத்தில் சாதி, மத மோதல்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடந்தது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் பங்கேற்று பேசியதாவது:– தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது குறித்து நேற்று நாம் […]
சென்னை, டிச. 7- வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்ககடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது. என்றாலும் மேல் […]
சென்னை, டிச 4– தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. அது நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது நகராமல் அங்கேயே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வரும் 24 மணி […]
கோயம்பேடு, டிச.4– கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நெற்குன்றம் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார். புதுமுக நடிகரான இவர், ‘அறுவடை நேரம்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி. இவர்களது வீடு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 700 சதுரஅடி நிலத்தில் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடிகர் ராஜ்குமாருக்கு நோட்டீசு அனுப்பினர். வீட்டை இடித்து அகற்றுமாறு கூறி இருந்தனர். ஆனால் நடிகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் […]
சென்னை, டிச. 2– சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:– தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில் (புயல்) அது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எந்த திசை […]
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சங்கர ராமன் கொலை காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் 3.9.2004 அன்று அந்த கோவிலின் உள்ளே உள்ள தனது அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, […]