நியூயார்க், பிப்.5- இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது. இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு, ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன. […]
சென்னை, பிப். 5– பாராளுமன்றத்துக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளின் தலைவர்கள் சமீபத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்கள். அப்போது தங்களுக்கு தலா 3 தொகுதிகள் வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக […]
சென்னை, பிப்.1-_ முதல்_அமைச்சர் ஜெயலலிதா அங்கன் வாடி கட்டிடங்களை புதுப்பிக்க ரூ.96.31 கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார் என்று சட்டசபையில் அமைச்சர் பா.வளர்மதிதெரிவித்தார். பல்லடம் தொகுதியில் உள்ள வலையப்பாளையம் மற்றும் அகிலாண்டபுரத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்கள் பழுதடைந்ததால் அவை சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகின்றன. புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என்று பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.பரமசிவம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பா.வளர்மதி கூறியதாவது:_ அங்கன்வாடி மையங்களுக்கு தேவைப்படும் புதிய […]
பிரான்சில் பனிச்சறுக்கில் ஈடுபட்டப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எப். 1 சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் சிகிச்சையின்போது கண்களை திறந்து மூடியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, பனிச்சறுக்கின்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோமா நிலையில் பிரெஞ்சு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெரும் மைக்கேல் ஷூமேக்கருக்கு நினைவு மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளதாகவும், அவர் கண்ணைத் திறந்து மூடுவதாகவும், […]
சென்னை, பிப்.1: தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலர் நேற்று அதிகாரப்பூர்வ முறைப்படி அறிவித்தார். தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2_ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7_ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக […]
அமெரிக்காவில் தரையில் வீசி குழந்தையை கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த அதன் பெற்றோர் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ளும் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 33). அவரது மனைவி தேன்மொழி (24). இவர்களது 19 மாத குழந்தை ஆதியன். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றபின்னர் குழந்தையை கவனித்துக்கொள்ள கிஞ்ஜல் படேல் (27) என்ற பெண்ணை அமர்த்தி இருந்தனர். அவரும் இந்திய […]
சென்னை, பிப்.1 – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என பல்வேறு விதமான ஊழல்கள் மூலம் ஏற்பட்ட பல லட்சம் கோடி பொய் இழப்பினை மீட்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, அவற்றை அரசு கருவூலத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை, அமெரிக்க டாலருக்கு […]
காளகஸ்தி கோவிலில் காஜல்அகர்வால் சாமி தரிசனம் செய்தார். காஜல்அகர்வால் நடித்து வரும் ஆல் இன் அழகு ராஜா, தமிழ் படமும் பாட்சா, நாயக் போன்ற தெலுங்கு படமும் ஸ்பெஷல் 26 என்ற இந்தி படமும் வெளி வந்தன. இந்த வருட துவக்கமும் விஜய் ஜோடியாக நடித்த ஜில்லா படம் மூலம் சிறப்பாக அமைந்தது. ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி மோகன் இயக்கும் தமிழ் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் இவரது தங்கை திருமணத்தையும் முடித்தார். அடுத்து காஜல்அகர்வாலுக்கும் […]
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா, தான் சிறுவனாக இருந்த போது படிப்பதற்கு அதிகாலையில் கண்விழித்தாலும், ஒரு பொறுப்பற்ற மாணவராக இருந்தேன் என தெரிவித்துள்ளார். டென்னெஸ்கி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா பேசியபோது, என்னுடைய பால்ய பருவத்தில் என்னுடைய தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார். 6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் […]
உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்துள்ளது. ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை கேத் ஆப்டனுக்கு கிடைத்தது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3–வது இடத்தை பிடித்தார். ஐஸ்வர்யாராய்க்கு 4–வது […]