புதுடெல்லி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5,500 கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்த அக்னி-5 ஏவுகணை, வளர்ச்சி சோதனைகள் நிறைவடைந்த பிறகு அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறுகையில், அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு இந்திய ராணுவத்தின் ஆயுத படையில் இணைக்கப்படும். வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய இன்னும் இரண்டு […]
இந்தூர், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது மிகப்பெரும் தவறு பாரதீய ஜனதா துணைத்தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சச்சின் தெண்டுல்கர், கடந்த நவம்பர் மாதம் 16–ந்தேதி ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் 40 வயது தெண்டுல்கருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு […]
புதுடெல்லி, தங்கம் மீதான வரியைக் குறைக்கும் யோசனை எதுவும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சக அதிகாரி ஜெ.டி. சலீம் தெரிவித்துள்ளார். நடப்பு கணக்கு பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும என்பதை கருத்தில் கொண்டு குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் தங்கம் இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் மறு சீராய்வு செய்யப்படும் செய்யப்படும் என்று மந்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் கடந்த மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் […]

சென்னை, பிப்.7 – போலீஸ் உயர் அதிகாரிகள் 7 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறை இலாக்காவின் முதன்மை செயலாளர் அபூர்வவர்மா வெளியிட்டுள்ள அரசு ஆணை குறித்து கூறியிருப்பதாவது:_ சென்னை அமுலாக்கப்பிரிவில் ஜஜியாக உள்ள எஸ்.என்.சேசஷாயி, புதிய பதவியாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர ஆணையராகவும், டி.ஐ.ஜி.யாகவும் உள்ள என்.கே.செந்தாமரைக்கண்ணன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் துறைக்கு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள விஜேந்திர எஸ்.பிதாரி, மதுரை மாவட்ட […]

ஹரியானா அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்த நிலத்தை இன்று திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் விரிவாக்கத்தின் போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 1,383 ஏக்கர் நிலத்தை தொழில் வளர்ச்சிக்காகக் கொடுத்தது அரியானா மாநில அரசு. கர்காவ்ன் அருகே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு அரசு அளித்த இந்த நிலத்தை திரும்பப் பெறுவதென அரியானா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். ‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். உத்தம வில்லன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக யுவனுக்குப் பதில் ஜிப்ரானை இறக்கியிருக்கிறார் […]

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 10,11ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.. இவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி, கடந்த 20, 21ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.. இதனிடையே மத்திய தொழிலாளர் நல ஆணையர், வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, […]
வரும் நிதியாண்டுக்கான (2014-15) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) பிப்ரவரி 13- ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக, தமிழக சட்டப் பேரவையை அன்றைய தினம் காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் கூட்டியுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வியாழக்கிழமை வெளியிட்டார். நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்காவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை வரும் 13- ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். […]
விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் இது அரசியல் பற்றி பேசுவதற்கான சந்திப்பு இல்லை. ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள கோச்சடையான் படத்தை அறிமுகப்படுத்துவதற்காக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தை அவரது இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக ரிலீசுக்கு முன்னதாக படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. […]

நைஜீரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் மனித இறைச்சியை விற்பனை செய்த குற்றத்திற்காக 11 பேர் கைது செய்யப்பட்டுளளனர். நைஜீரியாவின் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்-ஒக்வுடு பகுதி உள்ளது. அங்குள்ள ஹோட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, அந்த ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த ஹோட்டலில் 2 மனித தலைகள், 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. […]