Friday 1st May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

கோச்சடையான் படத்தை மோடி பார்க்கிறார்

கோச்சடையான் படத்தை நரேந்திரமோடி பார்க்கிறார். குஜராத்தில் இதற்கான சிறப்பு காட்சிக்கு ரஜினி ஏற்பாடு செய்துள்ளார். ரஜினிக்கு நரேந்திர மோடிக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. ரஜினி உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது மோடி நேரில் போய் நலம் விசாரித்தார். சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்த போதும் ரஜினியை அவரது வீட்டில் போய் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மோடி வெற்றி பெற ரஜினி வாழ்த்து தெரிவித்தார். […]

கமலஹாசனின் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ந் தேதி ரிலீஸ் ஆகிறது

சென்னை கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமலஹாசன் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.  இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு […]

படப்பிடிப்பில் தாக்கிய குத்து சண்டை வீராங்கனை; கீழே விழுந்த நடிகை பிரியங்கா சோப்ரா

மும்பை ஒலிம்பிக்கில் குத்து ச்ண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர் வீராங்கனை மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி மேரி கோம் என்ற  இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா குத்துசண்டை வீராங்கனையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வடகிழக்கு மாநில குத்துச்சண்டை வீராங்கனை ஒருவரும் நடிக்கிறார். இந்த படத்தை சஞ்சய்லீலா பஞ்சாலி தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தர்மசாலாவில் நடந்தது.  அப்போது பிரியங்காவுடன் குத்துசண்டை வீராங்கனை இருவரும் […]

மாயமான மலேசிய விமானம் குறித்த அறிக்கை

வானில் பறந்தபோது 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம்குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்சுக்குசொந்தமான போயிங் விமானம், 239 பயணிகளுடன் மலேசியதலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனாவுக்கு பறந்து சென்றபோதுமாயமானது. விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்ததாஅல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு வீழ்த்தப்பட்டதா என்றுபல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எந்த கேள்விகளுக்கும்பதில் கிடைக்காத நிலையில், விமானத்தை தேடும் முயற்சிகளும்இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போனவிமானம் குறித்த விளக்க அறிக்கையை விரைவில் வெளியிடஇருப்பதாக மலேசிய […]

பாலிவுட் நடிகர்கள் -நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்

புதுடெல்லி, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தலைவர் தெக்சின் அக்தர் கடந்த மாதம் 24-ந்தேதி நேபாள எல்லையில் வைத்து பிடிபட்டான் தற்போது அவனை டெல்லி சிறப்புப் படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.விசாரணையில்  தெக் சின் அக்தர் கூறியதாவது:- ஒருநாள் பயிற்சி முகாமில் நான், யாசின் பத்கல், அசமதுல்லா அக்தர், ஜியா உர்  ரஹ்மான் ஆகிய 4 பேரும் தற்கொலை தாக்குதல் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது யாசின் பத்கல், இந்தி திரை உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் […]

அமெரிக்காவில் இந்திய பெண்ணை நிர்வாண படமெடுத்து மிரட்டிய இளைஞன் கைது

வாஷிங்டன், ஏப்.25- அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினா கோஸ்லாவை நிர்வாண் படமெடத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டார். நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் டார்லோவும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங் செல்லும் அளவுக்கு உயர்ந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே மன வேற்றுமை ஏற்பட்டதால் நினா […]

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை: ஒபாமா எச்சரிக்கை

டோக்கியோ: அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார். அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்திந்தப்போது கூறியதாவது:- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை. சர்ச்சைக்குரிய அந்த தீவுக் […]

தேர்தல் செய்திகள்!

தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் அமைதியாக நடந்தது: 73 சதவீத ஓட்டுப்பதிவு. முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்! தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக சென்னையில் தேர்தல் அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். அதிகபட்டசமாக தர்மபுரியில் 71% வாக்குகள் பதிவு ஆகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவுக்கு விடுமுறை விடாத நெல்லை சென்னை சில்க்ஸ் – சீல் வைப்பு;ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரிகள்அதிரடி நடவடிக்கை! ஐ.டி. நிறுவனங்கள் மீது […]

சீன மக்களை அசத்திய சூரிய ஐஸ் வளையம்

பீஜிங், ஏப்.23- சூரிய உதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ சில பருவங்களில் பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களில் இருக்கும் பனிப்படிமங்களின் (ஐஸ் க்ரிஸ்டல்ஸ்) ஊடாக சூரிய ஒளி பாயும் வேளையில் சூரியனைச் சுற்றி ஒரு சிறு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வினை ஆங்கிலத்தில் ‘சோலார் ஹேலோ’ என்று குறிப்பிடுவர். இவ்வேளைகளில், இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலிக்கும் கண்ணுக்கினிய அபூர்வ காட்சி தோன்றும். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் பகுதியில் […]

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 723 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து

சென்னை, ஏப். 23– தமிழகத்தில் அங்கீகாரம் பெறாமல் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகள் நூற்றுக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. தொடக்க கல்வி துறையின் அனுமதியும், அங்கீகாரமும் பெறாமல் இயங்கும் இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 1296 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தர […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »