புதுடெல்லி, மே 21- புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். அவ்வகையில், தமிழகத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளருமான எல்.கே.சுதீஷ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, இந்த மகத்தான வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கும், பாராளுமன்ற […]
சென்னை, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத்தந்த தமிழக மக்களுக்கும், உழைத்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தமது இல்லத்தில் நேற்று மதியம் முதல்–அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:– வரலாறு காணாத வெற்றி நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு வழங்கியுள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் […]
புதுடெல்லி, மே. 17- புதிதாக அமைய இருக்கும் 16-வது பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையை அ.தி.மு.க. பெற்று உள்ளது. 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 2-வது இடத்தை பெற்று இருக்கிறது. காங்கிரசுக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரிய கட்சி என்ற கவுரவத்தை பெற்று இருக்கிறது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
வாரணாசி, தான் போட்டியிட்ட வாரணாசி, வதோதரா ஆகிய இரு பாராளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றார். வதோதரா தொகுதியில் அவர் சுமார் 5¾ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 5¾ லட்சம் வாக்கு வித்தியாசம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா பாராளுமன்ற தொகுதியிலும், உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி […]
‘ஊழல் ஒழிப்பு’ என்ற கோஷத்தை முக்கியமாக வைத்து தொடங்கப்பட்ட அரசியல் கட்சி, ‘ஆம் ஆத்மி’. அதன் அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, ஊழல் ஒழிப்புக்கான ‘ஜன லோக்பால்’ மசோதாவுக்காக குரல் எழுப்பி வந்தார். அதுதொடர்பாக நடைபெற்ற போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். டெல்லி–முதல்–மந்திரி அன்னா ஹசாரே, சமூக இயக்கமாகவே தனது இயக்கத்தை நடத்தி செல்ல விரும்பினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கோ தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஆசை […]
புதுடெல்லி, மதுரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி வெற்றி பெற்றார். பிஜ்னோர் தொகுதியில் நடிகை ஜெயப்பிரதாவும், மீரட் தொகுதியில் நடிகை நக்மாவும் தோல்வி அடைந்தனர். நடிகர்–நடிகைகள் போட்டி எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் அதிக அளவில் சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றி பெற்றனர். சிலர் தோல்வியை தழுவினார்கள். உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி […]
புதுடெல்லி, மே.17 – நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி வருகின்ற 21-ம் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதால் மக்கள் வெறுப்படைந்தனர். இதனால் மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணத்தை புரிந்துகொண்ட பாரதிய ஜனதா நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் நடந்த பாரதிய ஆட்சிமன்றக்குழுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாரதிய […]
சென்னை, இந்தியாவில் பிரதமர் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– தே.மு.தி.க.அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகிறது. இதற்காக எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள ஏழை–எளிய மக்களின் தேவைகள் நிறைவேறவும், குஜராத்தை போன்று ஊழலற்ற, […]
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திரமோடி மற்றும் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது: சரித்திர புகழ்வாய்ந்த வெற்றிக்காக நரேந்திரமோடி ஜி, உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான வெற்றி பெற்ற தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் கூறி உள்ளார். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து […]
புதுடெல்லி, மே 17- பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர், பிரணாப் முகர்ஜியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கிறார். முன்னதாக, மத்திய மந்திரிசபையின் கடைசி சம்பிரதாய கூட்டத்தை கூட்டும் மன்மோகன் சிங், ராஜினாமாவுக்குப் பின்னர், நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியப் பிறகு தனது அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தை மன்மோகன் சிங் காலி செய்வார் என்றும் […]