புதுடெல்லி, டிச.19- பிரம்மோஸ் அதிவேக ஏவுகணை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானி சிவதாணு பிள்ளைக்கு “ஆர்டர் ஆப் மெரிட்” என்ற ரஷ்ய நாட்டின் உயரிய விருதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் இந்தியாக்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்ததை தொடர்ந்தே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி பிள்ளைக்கு ரஷ்யா அனுப்பியுள்ள செய்தியில் “நீங்கள் இரு நாடுகளின் கூட்டு திட்டம், அமைதி, ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் நட்பை வலுப்படுத்துவதற்கு பெரும்பங்காற்றியதை பெருமைப்படுத்தும் […]
மும்பை, டிச. 19- மத்திய விவசாயத்துறை மந்திரி சரத்பவாரின் பகுதியான பாராமதியில் இன்று 3 கிலோ மீட்டர் தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்போட்டியில் புல்தானா பகுதியிலிருந்து பாராமதிக்கு குடிபெயர்ந்த 61 வயது பெண் தொழிலாளி லதா பகவான் கரே வெற்றிப் பெற்றார். பண்ணையில் கூலி வேலை செய்யும் அந்த பெண் சேலையணிந்துகொண்டு வெறும் காலுடன் ஓடி இந்த வெற்றியை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான், தினந்தோறும் காலையில் நடைப்பயிற்சி செய்வது […]
புதுடெல்லி, டிச. 19- மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை. இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அமைச்சரவையின் […]
புதுடெல்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானியை கவுரப்படுத்துவதற்காக, அவரை ஐ.நா. நிரந்தர பணிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அவருக்கு அமெரிக்க அரசின் முழுப் பாதுகாப்பு கிடைக்கும்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரி தேவயானி கோப்ரகடேவை(39), விசா விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசார் கைது செய்து மிகவும் மோசமாக நடத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க […]
ஒரு விதவைக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈட்டை, அவர் மறுமணம் செய்து கொள்வதால் மறுக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மாதிகாரி அளித்த உத்தரவில், ஒரு விபத்தில் கணவரை இழந்த மனைவிக்கு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து, குழந்தை பெற்ற நிலையில், கணவர் இறந்து விடுவதால், அந்த குழந்தையை வளர்க்க வேண்டிய கடமை அப்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அதனால், அவருக்கு […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றும் இந்திய தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்ததும், அத்து மீறி நடந்து கொண்ட விதமும் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க போலீஸ் நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பின்பு தேவயானி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் நடந்த சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்துக்கு இ.மெயிலில் உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் […]
மும்பை, இதய நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று மும்பையில் நடந்த சினிமா விழாவில் சச்சின் தெண்டுல்கர் உருக்கமாக பேசினார். சினிமா விழா இந்தியில் திரிவேதி, உட்சாவ் போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சேகர் சுமனின் மகன் இதய நோயால் மரணம் அடைந்தார். இதை மையமாக வைத்து சேகர் சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே ‘ஹாட்லெஸ்’. இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பை பிரபாதேவியில் உள்ள […]
புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் இந்திய துணை தூதராக உள்ள தேவயானி கோப்ரகடேவை கடந்த வாரம் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக அமெரிக்க போலீசார் கைது செய்து, ஆடையை கலைத்து சோதனையும் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, பாதுகாப்பு, சலுகைகள் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தது. டெல்லியில் அமெரிக்க தூதரகம் […]
சென்னை மனைவி வேலைக்கு சென்றது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்த குற்றச்சாட்டு குறிப்பாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– மனைவிக்கு வேலை நான் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்து, பல்வேறு அரசு பதவிகளை வகித்துள்ளேன். எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக 26–5–2008 முதல் 5–8–2008 வரை பதவி வகித்தேன். இதன் பின்னர், தமிழ்நாடு […]
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட அசையும் சொத்துகளை டிசம்பர் 21-ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளை ஒப்படைக்க வேண்டுமென்று திமுக எம்பி தாமரைச்செல்வன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை ரிசர்வ் […]