மும்பை, பிப். 5- மகாராஷ்டிர மாநிலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘குறைந்த விலை வீடுகள்’ என்ற திட்டத்தின் கீழ் போவாய் பகுதியில் ரூ.54 ஆயிரத்துக்கு வீடு வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பான விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் தங்கள் சொந்த வீடு கனவு நிறைவேற இந்த திட்டம் உதவும் என்ற ஆசையில் நேற்று மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விண்ணப்பங்களுடன் முதல்வரின் அலுவலகமான […]
நாக்பூர், பிப். 1- மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகேயுள்ள வினோபா பவே நகரில் காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த ஒரு மாணவன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பள்ளி நிர்வாகம் அந்த 14 வயது சிறுவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்தது. ‘இனி இதைப்போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அவன் இதே பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதியுங்கள்’ என கெஞ்சிய பெற்றோரின் வேண்டுகோளை காதில் போட்டுக் […]
சென்னை: ஜிஎஸ்எல்வி- மார்க்-3 ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சென்னையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்ட இயக்குநர் சிவன் செய்தியாளரிடம் தகவல் அளித்துள்ளார். ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3 ராக்கெட்டின் முதல் கட்ட சோதனை வரும் ஏப்ரலில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிக சக்தியுள்ள கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் தயாராகிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார். ஜோதிட கட்டுரை […]
உயர்நீதிமன்றங்களில் உள்ள தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும், ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை முடித்து வைக்க நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்றங்களின் தற்போதையை நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்துவது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் முடிவு […]
புதுடெல்லி, ஜன. 31 பத்ம விருதுகள் பெறுபவர்கள் பட்டியலை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. அதில் மறைந்த நீதிபதி வர்மாவுக்கு மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நீதிபதி வர்மா குடும்பத்தினர் தற்போது பத்ம பூஷண் விருதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நீதிபதி வர்மாவின் மனைவி புஷ்பா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர், ‘‘என் கணவர் வர்மா எந்த பரிசையும் விருதையும் ஏற்காதவர். சிறந்த நீதிபதி […]
புதுடெல்லி தற்போது மானிய விலையில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் பயன்படுத்துகிறவர்கள், வெளி மார்க்கெட் விலையில்தான் மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்க வேண்டும். அதிரடி விலை உயர்வு இந்த நிலையில், மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன. ஒரு சிலிண்டருக்கு ரூ.220 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு […]
புதுடெல்லி, உலகமும், நேரமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு, பெண் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா பிடிவாதம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்த தேவயானி கோப்ர கடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் […]
டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என்ற டிராய் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொதுமேலாளர் பி.முருகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசிடம் டிஜிட்டல் சேவை உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செய்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றுவதற்கு வசதியாக அமைச்சர் பதவியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியிருப்பதாகவும், இதே காரணத்துக்காக மேலும் சில அமைச்சர்களும் விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்தி நடராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி […]
இந்திய பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க அமெரிக்கா மறுத்து விட்டது. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த 39 வயது தேவயானி கோப்ரகடே கைது விவகாரம் இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவயானிக்கு அவமரியாதை வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் […]