புதுடெல்லி, ஏப்.23- பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது […]
இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் ஈ-டிக்கெட்டுகள் விற்கப்படும் இணையதளப் பதிவு மார்ச் 19 ஆம் தேதி மட்டும் 5.80 லட்சம் டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்துள்ளது IRCTC என்னும் இந்த இணையத்தள பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் அந்த இணையதளத்தின் பதிவேற்ற வேகம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிப்பது உண்டு. ஆனால், மார்ச் 19 ஆம் தேதி மட்டும் இந்த இணையத்தளம் மூலமாக 5.80 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக […]
மிக்ஸிகன்,மார்ச்.8 – உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணினி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார். கான்பூர் ஐஐடி-யில் பி.டெக். படித்த அனில் ஜெயின், அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி மேற்படிப்புகளை முடித் தார். அதன்பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழு 3டி விரல்ரேகை பதிவு முறையை உருவாக்கியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, விரல் ரேகை பதிவை […]
லக்னோ, மார்ச்.4- உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் மருத்துவர்கள் போராட்டத்தால் அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. தங்களது சக மருத்துவர் ஒருவரை போலீசார் தாக்கியதை கண்டித்து 200 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வான இர்பான் சோலங்கிக்கும் மருத்துவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த மருத்துவர் போலீசாரால் தாக்கப்பட்டார். மாநிலம் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கான்பூரில் நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. […]
புதுடெல்லி, மார்ச். 1– காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை அறிந்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை […]
இங்கிலாந்தை சேர்ந்த சிறுமி ஒருவர் 9 வயதில் ஏழு மாதங்களுக்குள் 364 புத்தகங்களை முழுமையாக படித்துள்ளார். இங்கிலாந்தின் ஆஷ்லே பகுதியில் வசித்து வரும் ஃபெயித் என்ற 9 வயது சிறுமி விதவிதமான புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இவர் இவருடைய வயதுடைய பிற குழந்தைகளை போல இல்லாமல் இந்த வயதிலேயே சுமார் 364 புத்தகங்களை படித்து முடித்துள்ளார். இது குறித்து அச்சிறுமி கூறுகையில், புத்தகம் படிப்பது கணினியில் வீடியோ கேம் விளையாடுவதை போல சுவாரஸ்யமானது, தொலைக்காட்சி […]
புதுடெல்லி, பிப்.17- இந்திய அரசால் நடத்தப்படும் ஏர் இந்திய விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டக் கணக்குகளையே காட்டி வருகின்றது. கடந்த 2013, டிசம்பர் முடிய மூலதன செலவு 26,033 கோடியாகவும், முதலீடுகள் கையிருப்பு 21,125 கோடியாகவும் கணக்குக் காட்டியுள்ள இந்த நிறுவனம் 3,600 கோடி நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான நடைமுறைகள் சாத்தியமில்லை என்பதால் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக வட்டி விகிதத்தில் வெளியாரிடம் கடன் பெறவேண்டும். […]
புதுடெல்லி, பிப். 17- “வீடுகள் இல்லாதவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஆதார் என்ற தனித்துவ அடையாள அட்டை அதிகாரமளிக்கும் கருவியாகும்” என மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் ஆற்றிய உரையில் ஆதார் குறித்து மேலும் கூறியதாவது:- ஆதாரை குறை சொல்பவர்களும் கூட அது ஒரு அதிகாரமளிக்கும் கருவி என்று உணர்ந்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. கடந்த ஆண்டு சமையல் எரிவாயுவிற்கான மானியம் நேரடியாக ஆதார் அட்டையின் […]
மொபைல் போன்கள், கார்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைவதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.அதனால் அவற்றின் விலைகள் குறையும் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையாற்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், மொபைல்களுக்கான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மொபைல் போன்கள் மீதான இறக்குமதி வரிகள் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைகின்றன. இதனால், மொபைல் போன்களின் விலைகள் குறைகின்றன. மேலும், சிறிய ரக கார்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மீதான […]
லக்னோ வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கையாளுகின்றன. உத்தரபிரதேசத்தில் அரசியல்கட்சிகள் பாலிவுட் நடிகைகளை ஆடவைப்பது மற்றும் கவர்ச்சி நடிகைகளை கொண்டு ஆபாச நடனங்களை ஏற்பாடு செய்வதும் வாடிக்கையாகி விட்டது சமீபத்தில் சமாஜ் வாதி கட்சி தலைவர்கள் பாலிவுட் நடிகர் -நடிகைகளை கொண்டு பெரிய விழா நடத்தியது. கவர்ச்சி நடனம் நடைபெற்றது. மூலக்கோ பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பபிஜ்னோர் உள்பட தலைவர்கள் ஆபாச நடனத்தை கண்டுகளித்தனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஜோதிட […]