பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பங்கேற்ற பேரணியை குறிவைத்து நேற்று 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 6 பேர் பலியாயினர் 83 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் பாலிவுட் படமான ரஜ்ஜோவின் இசைவெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி ஷிண்டேவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பாட்னாவில் மோசமான குண்டுவெடிப்பில் 6 […]
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ரூ.203 கோடி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிதி நெருக்கடி காரண மாக விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாக முடங்கியுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2008-2012 ஆம் ஆண்டுகளில், பெங்களூரு பன்னாட்டு விமான நிலைய பயனாளர் மேம்பாட்டு கட்டணம் மற்றும் பயணிகள் சேவைக் கட்டணமாக ரூ.203 கோடியை விமான பயணிகளிடம் இருந்து வசூலித்துள்ளது. இத்தொகையை, பெங்களூரு சர்வதேச […]
வெங்காய விலை உயர்வுக்கு மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே காரணம் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புது விளக்கம் அளித்துள்ளார். வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.100-ஐ எட்டிவிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தூரில் வெங்காயத்தை நகைகள் போல அணிந்து கொண்டு, பாஜக-வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயம் வாங்குவது நகை வாங்குவது […]
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வருகிற 29ம் தேதி நடைபெறும் படேல் நினைவகம் திறக்கும் பிரமாண்ட விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கின்றனர்.சுதந்திரத்திற்கு பிறகு தனித்தனியாக இருந்த சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் அப்போதைய முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல். ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் படேலுக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப் போல பிரமாண்ட சிலை அமைக்க போவதாக குஜராத் அரசு அறிவித்தது. […]
“பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை. அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ‘கார்டியன்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “35 உலக நாட்டு தலைவர்களின் தொலைபேசி எண்களை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவை அந்நாட்டு உளவு அதிகாரிகளிடம் வழங்கின. இதைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்டனர்” […]
இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய […]
புதுடில்லி: இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது. வீடுகள் தோறும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என, தகவல் தொழில்நுட்ப புரட்சி நிலவும் நம் நாட்டில், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களான, ‘சைபர்’ குற்றங்களும் அதிகரித்து விட்டன. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான, ‘சைமன்டெக்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்த ஆண்டின், பத்து மாதங்களில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய், சைபர் கேடிகளால், அபகரிக்கப் பட்டு, ஏப்பம் விடப்பட்டுள்ளது. இது, […]
ஹரியானாவில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் ஓடும் சோம் என்ற நதி நீரில் தங்கம் எடுத்து உள்ளூர்வாசிகள் பிழைத்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 10 ஆண்டுகளாக இந்த நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் ஹரியானாவின் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்க்காரர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்கிறது இந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க […]
பெங்களூரு: உத்தர பிரதேசத்தில், பழமை வாய்ந்த கோட்டையில் தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறியதை அடுத்து, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர். இதனால், பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆபத்து வரலாம் என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கவலை அடைந்துள்னர். உ.பி.,யில், உன்னாவோ என்ற பகுதியில், பழமையான கோட்டை ஒன்றில், தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் என்பவர் கூறியதை அடுத்து, […]
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலகின் திறன்வாய்ந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சார் உள்பட 4 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது, பிரேசிலைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் கேஸ் கம்பெனியான பெட்ரோபிராஸின் சிஇஓ மரியா டாஸ் கிராஸஸ் ஃபாஸ்டர். இரண்டாவது இடத்தில் […]