மும்பையை அடுத்த குர்கான் பகுதியான சந்தோஷ்நகர் என்ற இடத்தில் 20 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் தீபாவளி பண்டிகையை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை அவர்கள் தங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று அந்த பெண்ணும் அவர்களுடன் தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று, குளிர்பானத்தில் பீர் கலந்து கொடுத்து […]
கடனை திருப்பித் தராதவரின் காதை கடித்து எடுத்துக் கொண்டு வருவார் நடிகர் செந்தில் ஒரு திரைப்படத்தில். அது போன்று விருத்தாசலம் அருகே உதவித் தொகை வாங்கித் தராததால் பஞ்சாயத்துத் தலைவரின் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர் ஒருவர். மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பெயர் திரிசங்கு. இவர் வயது 55, 60 வயதானவர்களுக்கே முதியோர் உதவித் தொகை கிடைக்கும். ஆனால் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரங்கநாதன் என்பவர் இவருக்கு உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி விண்ணப்பமும் […]
உனாவ்: உத்திரப்பிரதேசத்தில் புதையலை தோண்டும் பணியை தொல்லியல்துறை கைவிட்டது. உனாவ் கிராமத்தில் மன்னரின் பழங்கால கோட்டையில் புதையல் இருப்பதாக வந்த தகவலையடுத்து புதையலை தேடும் பணி நடைபெற்று வந்தது. சாமியார் சோபன் சர்க்கார் கூறிய தகவலையடுத்து தொல்லியல் துறை இந்த ஆய்வில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தொல்லியல் துறை புதையல் தோண்டும் பணியை கடந்த 18ம் தேதி துவக்கியது. ஆனால் சாமியார் கூறியது போல் புதையலுக்கான அறிகுறி இதுவரை தென்படாததால் , புதையல் தோண்டும் பணியை தொல்லியல் துறை […]
டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் எனத் செய்திகள்வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை . பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்த சிலமாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து, அடிக்கடி பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. இந்நிலையில், டீசல் விலையை உயர்த்துவது பற்றி கிரித் பரிக் தலைமையிலான கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. […]
டெல்லி: வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்ககி 0.25% உயர்த்தியுள்ளது. இதனால் ரெபோ ரேட் 7.50 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வால் தனிநபர், வீடு, வாகன கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும்(4%) செய்யப்படவில்லை. மேலும் அவசரக் கால தேவைக்கான வட்டி விகிதம், 0.25% குறைக்கப்பட்டுள்ளது. […]
சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் இதுவரை 155 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஏற்காடு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் ராமன்நகரை சேர்ந்த பத்மராஜன் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மனுதாக்கல் செய்தார். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாத காரணத்தால் பத்மராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பத்மராஜன் களம் இறங்குகிறார். வருகிற 9-ந்தேதி ஏற்காடு இடைத்தேர்தலில் […]
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் மரண இறுதி ஊர்வலத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை என்று நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ஆனால் மாறாக ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டதற்கு ஆதாரமான வீடியோவை திக்விஜய் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அசல் வீடியோவை யூடியூபில் பதிவேற்றியது பிரிட்டிஷ் பாத்தி டாட் காம் ஆகும். இது குறித்து கூறிய திக்விஜய் சிங், மோடி ஒரு பொய்யர் என்றும் அவரது கருத்துக்கு அவர் மன்னிப்பு […]
நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார். சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் […]
பாட்னா, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டம் முதல்–மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. காலையிலேயே மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு ரெயில்கள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் தொண்டர்கள் வந்து […]
பாட்னா – பாரதீய ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 6 பே பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்தனர்.பாட்னா ரெயில் நிலையம், பொதுக்கூட்டம் நடக்கும் உள்பகுதி, வெளிப்பகுதி ஆகிய 3 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இத்திட்டத்தை தீவிரவாதிகள் குழு குழுவாக செயல்பட்டு நடத்தி உள்ளனர். பாடானா ரெயில் நிலையத்தில் 9.30 மணிக்குமுதல் குண்டு வெடிப்பும் . 10.30க்கு […]