கூகுள் நிறுவனமானது தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளும்பொருட்டு கூகுள் பிளே ஸ்டோர் சேவையினை வழங்கி வருகின்றது. தற்போது இச்சேவையில் கல்வி தொடர்பான மற்றுமொரு சேவையை இணைக்கவுள்ளது. Google Play for Education எனும் இச்சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்து ஆண்ட்ராய்டு சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன்களை கிளவுட் முறையில் சக […]
புதுடெல்லி, நவ. 16- கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை […]
புதுடெல்லி, நவ.16– டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 12.41 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.41 மணி வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 3.1 என இருந்தது. எனவே சேதம் இல்லை. தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் வீடுகள் லேசாக குலுங்கியதால் வீதிக்கு ஓடிவந்தனர். இதற்கிடையே இன்று அதிகாலை மீண்டும் டெல்லியிலும் காஷ்மீரிலும் நில […]
சபரிமலை, மண்டல–மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. அய்யப்பன் கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜையை முன்னிட்டு 41 நாட்கள், மகரபூஜையை முன்னிட்டு 20 நாட்கள் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் மண்டல – மகரவிளக்கு விழாவின் தொடக்கமாக நேற்று, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி என்.தாமோதரன் போற்றி குத்துவிளக்கு ஏற்றி நடையை திறந்தார். அப்போது கோவில் […]
சென்னையில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5வது சுற்றில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , நார்வே நாட்டின் கார்ல்சனுடன் விளையாடி வருகிறார். 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் முதல் நான்கு போட்டிகளும் டிராவில் முடிந்தன. இந்நிலையில் முதல் வெற்றி யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு விடையாக நேற்று […]
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார்.ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.‘விக்டோரியா’ (இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி) என்ற பெயர் கொண்ட அந்த […]
ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது 1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார். அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு […]
தனது கணவர் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் இல்லாமல் பார்க்கப்போவதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று சச்சின் மனைவி அஞ்சலி தெரிவித்துள்ளார். “கடைசி ஒருமாதம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த ஓய்வு பெறும் நாளைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவோம். கிரிக்கெட் இல்லாத டெண்டுல்கரை நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது. டெண்டுல்கர் இல்லாமல் கிரிக்கெட் இருக்கலாம் ஆனால் கிரிக்கெட் இல்லாமல் டெண்டுல்கர் இல்லை” என்று அஞ்சலி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். “நான் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த நாட்களைப்பார்த்ததேயில்லை. […]
இணைய உலகைக் கலக்கிவரும் கூகுள் நிறுவனமாது இலத்திரனியல் துறையில் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக தற்போது ஓட்டுநர் இல்லாத கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் இயக்கக்கூடிய இந்தக் காரில் 2 பேர் பயணிக்கக்கூடியதாக இருப்பதுடன் இதன் சோதனை முயற்சி ஒன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இக்காரானது 2015 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வாண்கடே மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியாகும். மேலும் இந்த போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறவுள்ளதால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது. டாஸ் வென்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆட தொடங்கியது . கெய்ல் 11 ரன்களுடனும், பிரவோ […]