பெங்களூர், நவ. 21– பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வங்கி பெண் அதிகாரியை மர்ம மனிதன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றான். தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்ததால், அந்த பெண்ணின் ஒரு பக்க உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன. அவரை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவம் நடந்த ஏ.டி.எம்.மில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில அரசு காவலாளி இல்லாத ஏ.டி.எம்.கள் […]
முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு , பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் அனைத்து மகளிர் வங்கி இன்று லக்னோவில் திறக்கப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மும்பையில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர். முதலில் நாடு முழுவதும் எழு கிளைகள் திறக்கப்படுகிறது. லக்னோவில் இன்று திறக்கப்பட்ட கிளையில் 10 பெண் ஊழியர்கள் பணிபுரிவார்கள் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டு […]
செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள மோவன் விண்கலமும் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் ஒன்றுக்கொன்று போட்டி அல்ல என்றும் பரஸ்பரம் உதவி செய்பவை என்றும் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து, சென்னை வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விண்கலம் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு, பாரத ரத்னா விருது […]
புதுடெல்லி, நவ. 19– முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் […]
சென்னை, நவ. 19- சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் விளையாடி வருகின்றனர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் கார்ல்சன் 4.5-2.5 என முன்னிலை பெற்றிருந்தார். இந்நிலையில், இருவருக்கிடையிலான 8-வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், விஸ்வநாதன் ஆனந்த் கறுப்பு காய்களுடனும், கார்ல்சன் வெள்ளை காய்களுடனும் ஆடினர். வெற்றி நெருக்கடியுடன் ஆடிய விஸ்வநாதன் ஆனந்த் கடுமையாகப் […]
பாட்னா, நவ. 18- கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்திய சச்சின் தெண்டுல்கர், சமீபத்தில் 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் ஹாக்கி வீரர் தயான் சந்துக்கு பாரத ரத்னா விருதினை வழங்காமல் சச்சினுக்கு வழங்குவது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவானந்த திவாரி […]
சென்னை, நவ. 18- உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில், கார்ல்சன் 4-2 என முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று 7-வது சுற்று போட்டி நடைபெற்றது. 2 சுற்றுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று வெள்ளை காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு காய்களுடனும் விளையாடினர். […]
அகமதாபாத்தில் சுமார் 7 லட்சம் பணமிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள ஒதவ் பகுதியின் சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.7 லட்சம் பணமிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு வந்து பணம் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை […]
ராய்ப்பூர், நவ.18– சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11–ந்தேதி 12 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தது. சுமார் 1½ லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, அந்த முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவானது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்து விட்ட நிலையில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த 72 தொகுதிகளும் […]
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால நெய்யபிஷேகம் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை நடக்கிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக, கடந்த 15ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மகர விளக்கு பூஜை விழா டிசம்பர் 30ம் தேதி தொடங்கும். தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.விழாக்கால நெய்யபிஷேகம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. தினமும் காலை 11.30 வரை நெய்யபிஷேகம் […]