ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே […]
சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில் ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.ஜி.பி’ (RGB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ‘டான் ஸ்டுடியோ’வுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. ‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று […]
சென்னை, நவ. 14 – நடிகர் சிவாஜிகணேசன் சிலை தொடர்பான வழக்கை நீதிபதிகள் வருகிற 26_ந்தேதி தள்ளி வைத்தனர். சென்னை ஐகோர்ட்டில் சீனிவாசன் என்பவர் .மெரீனா கடற்கரை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் அந்த சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், […]
சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
இந்திய சினிமா சரித்திரத்தில் முக்கியமான படங்களில் ஒன்று ஷோலே. இந்தியன் கமர்ஷியல் சினிமாக்களை ஷோலேக்கு முன் ஷோலேக்கு பின் என்று பிரிக்கலாம். ஷோலேக்கு பிறகு வெளிவந்த கமர்ஷியல் படங்களில் அப்படத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி, ஜெயா பச்சன் நடித்த ஷோலே 1975-ல் வெளியானது. இந்தியா முழுக்க வரவேற்பை பெற்ற இப்படத்தை 3டி-யில் வெளியிடுகிறார்கள். யுடிவி அந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஷோலேயை ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார். திரைக்கதை ஜாவேத் அக்தர், சலீம் கான். […]
தூள், சிவகாசி, திண்டுக்கல் சாரதி, திருவண்ணாமலை, மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். சிட்டிபாபு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இருதய கோளாறு காரணமாக, ‘பைபாஸ் சர்ஜரி’ செய்து கொண்டார். அதன்பிறகு 2 வருடங்களாக அவர் நடிக்காமல் ஓய்வில் இருந்தார். சமீபகாலமாக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. கடந்த 4 ஆம் தேதி அவர் திடீரென […]
சிம்புவும், ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. வி.டி.வி. கணேஷ், மீராஜாஸ்மின் ஜோடியாக நடிக்கும் இங்க என்ன சொல்லுது படத்தில் சிம்புவும் ஆண்ட்ரியாவும் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். அந்த படத் தில் நடித்தபோது இப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. படத்தில் நடித்தபோது இருவருக்கும் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று வி.டி.வி. கணேஷ் தெரிவித்தார். இதையடுத்து சிம்பு, ஆண்ட்ரியா இடையே காதல் துளிர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. ஏற்கனவே சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். […]
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய படங்களில் தலைப்பை வித்தியாசமாக வைக்கும் பார்த்திபன் இந்த படத்திலும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்துள்ளார். இவர் இயக்கும் புதிய படத்திற்கு ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்களை 100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் பார்த்திபன் […]
நடிகர் கமலஹாசன் இன்று தனது 59–வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் வாழ்த்தினார்கள். பிறந்த நாளையொட்டி நேற்று நள்ளிரவு முக்கியஸ்தர்களுக்கு சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் விருந்து கொடுத்தார். இதில் நடிகர்கள் ஆர்யா, தனுஷ், டைரக்டர்கள் மணிரத்னம், செல்வமணி, நடிகை சுகாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்று கமலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். நடிகை கவுதமியும் இதில் பங்கேற்றார். பின்னர் கமல் ‘கேக்’ வெட்டினார். கமலை அர்ஜுன் வாழ்த்தியுள்ளார். அவர் கூறும்போது, இந்திய […]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் […]