தனது அன்பார்ந்த ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதற்காக அச்சாரமிட்டுள்ளார் நடிகர் வடிவேலு. தனது ரசிகர்களிடம் நேரடியாக கனெக்ஷன் வைத்துக்கொள்ள விரும்பிய வைகைப்புயல், தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் களமிறங்கிவிட்டார். இவர் ட்விட்டரில் சில வினாடிகளில் கிட்டத்திட்ட 4000 நபர்கள் வைகைப்புயலை பின் தொடர ஆயத்தமாகினர். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi […]
கடந்த 1979-ஆம் ஆண்டு திரைக்குவந்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குத் திரைப்படம் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் ‘சங்கராபரணம்’ ஆகும். முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சோமையாஜுலு, மஞ்சு பார்கவி மற்றும் சந்திரமோகன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் நேரடியாகத் திரையிடப்பட்டு வசூலைக் குவித்த வெளிமாநிலப் படங்களில் இதுவும் ஒன்றாகும். இதுமட்டுமின்றி இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்பட விருதுகள் பலவற்றையும் இந்தப்படம் பெற்றது. 35 வருடங்கள் கடந்த பின்னர் இந்தப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட இருப்பதாகத் […]
இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திதான் இது!! அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன். காரணம்? மெகா சீரியல் காரணம்தான்! மாமியார் பிரச்சனை! அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஜெயபச்சன் ஒன்றும் கொடுமை படுத்தவில்லை. மாறாக ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது […]
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் வசித்து வருகிறார். கடந்த 19ம் தேதி, படப்பிடிப்புக்கு போய்விட்டு வீட்டு வந்த சுருதிஹாசன கதவை பூட்டிவிட்டு தூங்க சென்றார். அப்போது அவருடைய வீட்டு கதவு தட்டப்பட்டது. பின்னர் சுருதிஹாசன் கதவை திறந்ததும் அவரை, அந்த மர்ம மனிதன் தாக்கினான். கழுத்தைப் பிடித்து நெறித்தான். அவனை, சுருதிஹாசன் பலமாக பிடித்து தள்ளிவிட்டு, உள்பக்கமாக கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டார். உடனே, ‘‘காப்பாற்றுங்கள்’’ […]
ரஜினி, கமல் இணைந்து நடித்து 1977–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய ‘16 வயதினிலே’ படம் டிஜிட்டல், சினிமா ஸ்கோப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். 350 தியேட்டர்களுக்கு மேல் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதேநாளில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்களும் வெளியாகிறது. ‘16 வயதினிலே’ படம் 36 வருடத்துக்கு பிறகு மீண்டும் வருவதால் ரஜினி, கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தியேட்டர்களில் […]
மறைந்த பழைய காமெடி நடிகர் நாகேஷ் பேரன் கஜேஷ் ஆனந்த் கதாநாயகன் ஆனார். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கஜேஷ் ஆனந்த் ஓட்டல் நிர்வாகம் பற்றி படித்துள்ளார். இவர் நாகேஷ் மகனும் நடிகருமான ஆனந்த் பாபுவின் மகன் ஆவார். கதாநாயகனானது குறித்து கஜேஷ் ஆனந்த் சொல்கிறார். எனக்கு 18 வயது இருக்கும் போது தாத்தா நாகேஷ் மறைந்து விட்டார். என் தந்தை ஆனந்த் பாபு நடிகராக இருந்தும்கூட […]
இயக்குனர் பாலசந்தருக்கு அவரின் கலையுலக பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. ரெய்ன் ட்ராப் என்ற சமூக அமைப்பு இந்த விருதை வழங்குகிறது. அதன் செய்திக் குறிப்பில், கடந்த பல வருடங்களாக திரையுலகுக்கு பாலசந்தர் ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி இந்த விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனவும் அந்த செய்திக் குறிப்பு கூறுகிறது. ஜோதிட […]
நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த வருடம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் சினிமாவில் சில படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகா கர்ப்பமாக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பாகி உள்ளது. இந்த செய்தி உண்மையில்லை என்று பிரசன்னா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை மற்றும் சில ஊடகங்களில் சினேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் செய்திகள் உண்மையில்லை. தொடர்ந்து நாங்கள் படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு குழந்தை […]
பாடகர் உன்னிகிருஷ்ணின் மகள் பாடகியாக களமிறங்கி உள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணின் மகள் உதாரா. 8 வயதே உடைய இவர் ‘சைவம்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் இந்த குட்டிப் பாடகி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ‘தலைவா’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் விஜய் இயக்கி தயாரித்து வரும் படம் சைவம். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் ‘தெய்வத்திருமகள்’ சாரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் […]
நடிகர் “திடீர்’ கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த “திடீர்’ கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். “அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் முதன் முதலாக […]