Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: சினிமா

பிரியாணி, என்றென்றும் புன்னகை யுகே வசூல்

பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் யுகே, அயர்லாந்த், ஆஸ்ட்ரேலியா உள்பட பல வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் பிரியாணி படத்தின் இரண்டாவது வார இறுதி வசூல் 8,245 பவுண்ட்கள். ஏழு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. இரண்டு வாரங்கள் முடிவில் பிரியாணியின் மொத்த யுகே, அயர்லாந்த் வசூல் 54,209 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 55.52 லட்சங்கள். என்றென்றும் புன்னகை இந்த நாடுகளில் தனது இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 6,100 பவுண்ட்களை வNலித்துள்ளது. […]

பிரச்சினையை ஏற்படுத்திய ரஜினி பிறந்தநாள் பேனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 64-வது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாக கொண்டாடினார். இவரது பிறந்தநாளில் அவருடைய ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் கட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், பிறந்தநாளின் போது ரசிகர்கள் ஒட்டிய பேனர்களில் ஒன்று தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேனரில் ரஜினி மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் வாக்குச்சாவடியில் நின்று ஓட்டுப் போடுவது போலவும், விஷ்ணுவும், விநாயகரும் வரிசையில் நிற்பது போன்று […]

ரிலீஸுக்கு முன்பே இணையதளங்களில் வெளியான வீரம் பட பாடல்கள்!

அஜித், தமன்னா, சந்தானம், வித்தார்த், அப்புக்குட்டி மற்றும் பலர் நடிக்க, சிவா இயக்கியிருக்கும் படம் ‘வீரம்’. விஜயா நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு நாளைதான் (20-12-2013) நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே படத்தின் பாடல்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டதாம். இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் ‘வீரம்’ படத்தின் அதிகாரபூர்வமான இசை வெளியீடு நாளை ‘ரேடியோ மிர்ச்சி’ […]

இதய நோய், முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்; சினிமா விழாவில் தெண்டுல்கர் உருக்கமான பேச்சு

மும்பை, இதய நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று மும்பையில் நடந்த சினிமா விழாவில் சச்சின் தெண்டுல்கர் உருக்கமாக பேசினார். சினிமா விழா இந்தியில் திரிவேதி, உட்சாவ் போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சேகர் சுமனின் மகன் இதய நோயால் மரணம் அடைந்தார். இதை மையமாக வைத்து சேகர் சுமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே ‘ஹாட்லெஸ்’. இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பை பிரபாதேவியில் உள்ள […]

இசையால் வன்முறை குறையும் – இளையராஜா

மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தொடங்கி வைக்க தொடக்க விழாவுக்கு வருகை தந்திருந்தார் இளையராஜா. தமிழிசை ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்க வேண்டும் என்பது இளையராஜாவின் நீண்ட நாள் கனவாகும். அதை தியாகாராஜர் கல்லூரியினர் ஓரளவு பூர்த்தி செய்துள்ளனர்.  கு.ஞான சம்பந்தன் தலைமை தாங்க, தமிழ் ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன், திரைப்பட இயக்குனர் சுகா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். “இங்கே அதிக அளவில் ரசிகர்கள் கூடியிருப்பதன் காரணம் […]

தமிழ் ஹிந்தியைவிடச் சிறந்த மொழி – வைரமுத்து

சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வைரமுத்து தமிழ்தான் பெரிது என்று உணர்வு பொங்கப் பேசினார். “என்னிடம் வரும் எல்லா இயக்குனர்களையும் நான் சமமாக மதிக்கிறேன். எல்லோருக்கும் பாரபட்சமின்றியே உழைக்கிறேன். பெரிய இயக்குனர்களுக்கு எப்படி உழைக்கிறேனோ அதே போலவே புதிய இயக்குனர்களுக்கும் உழைக்கிறேன்.(ஆனால் பாட்டுக்கள் மட்டும் ஏனோ வேறு வேறு குவாலிட்டியில் வந்துவிடுகின்றன. என்ன செய்வது ?) . இதில் பணம் பெரிதல்ல. தமிழ்தான் பெரிது. மணிரத்னம் ‘ராவணன்‘ படத்தை தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஹிந்தியில் […]

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா

சூர்யாவின் அடுத்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் சென்னையில் இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் சூர்யா தாடி வைத்தபடி நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்தா மாதம் மும்பையில் துவங்க இருக்கிறதாம். அதற்கு அடுத்த ஷெட்யூல் ஹைதாராபாத்தில் நடக்க இருக்கிறதாம். படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட […]

ஜனாதிபதியின் சமையல்காரர்

அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம். யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 1952லிருந்து 1986 வரை வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றும் சிசில் என்கிற சமையல்காரப் பாத்திரமாக கதை விரிகிறது. இந்த சமையல்காரர் தனது வாழ்நாளில் பல முக்கிய ஜனாதிபதிகளுக்கு சமையல் பரிமாறுகிறார். வரலாற்றில் அமெரிக்கா எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் தனது கண்களால் […]

திருமணத்தை பற்றி இப்போது சிந்திக்கவில்லை: சமந்தா

சித்தார்த்தும் சமந்தாவும் காதலிக்கின்றனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சமந்தா தோல் அலர்ஜி நோயால் அவதிப்படுவதாகவும் இதனால் லிங்குசாமி இயக்கும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு சமந்தா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது. நான் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஐந்து படங்கள், கைவசம் உள்ளன. எனவே திருமணத்தை பற்றி இப்போது சிந்திக்கவில்லை. 3 வருடங்கள் கழித்தே அதுபற்றி யோசிப்பேன். நடிகைகளுக்கு சினிமா வாழ்க்கை என்பது கொஞ்ச […]

ஹன்சிகாவிடம் ரசிகர்கள் ரகளை: கையை பிடித்து இழுத்து கலாட்டா

ஹன்சிகா ‘உயிரே உயிரே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. அங்கு ஹன்சிகா பங்கேற்ற பாடல் காட்சியொன்றை படமாக்கினர். அப்போது படப்பிடிப்பை காண அங்கு பெரும் கூட்டம் கூடியது. கடற்கரையில் ஹன்சிகா ஆடிக்கொண்டு இருந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ஹன்சிகாவோடு சேர்ந்து நின்று போட்டோ எடுக்க முண்டியடித்தார்கள். சிலர் அத்துமீறி ஹன்சிகா கையை பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டனர். ரசிகர்கள் பிடியில் சிக்கி ஹன்சிகா தவித்தார். போலீசாரும் பாதுகாவலர்களும் விரைந்து […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »