விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் இது அரசியல் பற்றி பேசுவதற்கான சந்திப்பு இல்லை. ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள கோச்சடையான் படத்தை அறிமுகப்படுத்துவதற்காக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தை அவரது இளைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக ரிலீசுக்கு முன்னதாக படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வித்தியாசமான முறையில் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் அவர் தென்னிந்திய ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதில் தனக்கு […]
நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பட்டியல் ஒன்றை சிம்புதேவன் தயார் செய்துள்ளார். அதில், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தற்போது, கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில், அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர். படத்தில் […]
மதுரை,பிப்.5 – கோலி சோடா சினிமாவில் நடித்த நடிகர்கள் மதுரை ரசிகர்கள் முன் தோன்றினர். கடந்த வாரம் வெளிவந்த கோலி சோடா திரைப்படம் தமிழகம் எங்கும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. மதுரை வட்டாரத்தில் 28 தியேட்டர்களில் கோலி சோடா ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நடிகர்கள் கிஷோர், குட்டமணி, பாண்டி, ஸ்ரீராம்,கதாநாயகி சாந்தினி, நடிகைகள் சுஜாதா, சேத்தி, இசையமைப்பாளர் அருணகிரி, ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உள்ளிட்ட […]
காளகஸ்தி கோவிலில் காஜல்அகர்வால் சாமி தரிசனம் செய்தார். காஜல்அகர்வால் நடித்து வரும் ஆல் இன் அழகு ராஜா, தமிழ் படமும் பாட்சா, நாயக் போன்ற தெலுங்கு படமும் ஸ்பெஷல் 26 என்ற இந்தி படமும் வெளி வந்தன. இந்த வருட துவக்கமும் விஜய் ஜோடியாக நடித்த ஜில்லா படம் மூலம் சிறப்பாக அமைந்தது. ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி மோகன் இயக்கும் தமிழ் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் இவரது தங்கை திருமணத்தையும் முடித்தார். அடுத்து காஜல்அகர்வாலுக்கும் […]
உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்துள்ளது. ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை கேத் ஆப்டனுக்கு கிடைத்தது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3–வது இடத்தை பிடித்தார். ஐஸ்வர்யாராய்க்கு 4–வது […]
நஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். இது குறித்து நஸ்ரியாவின் தந்தை கூறியதாவது:– நஸ்ரியா–பகத் பாசிலின் திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். இது முழுக்க […]
பெங்களூர்: பெங்களூர் வந்துள்ள நடிகர் ரஜினிகாந்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பெரும்பாடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களுக்கு முன் பெங்களூர் வந்தார். இரவு நேரத்தில் அவரது நெருங்கிய நண்பர்களான கர்நாடக வீட்டு வசதி துறை அமைச்சர் அம்பரீஷ், நடிகர் துவாரகேஷ், ராஜ்பகதூர், கோபிநாத் உள்பட பலருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். இரவு நேரத்தில் கவிபுரம் கவிகங்காதேஷ்வர கோயில், பசவனகுடியில் உள்ள தொட்டகணபதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். யாருக்கும் தெரியாமல் […]
சென்னை, சிம்பு–நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என்று பெயர் சூட்டப்போவதாக டைரக்டர் பாண்டிராஜ் கூறினார். 6 வருடங்களுக்கு பின்… 6 வருட இடைவேளைக்கு பின், சிம்புவும், நயன்தாராவும், பாண்டிராஜ் டைரக்டு செய்யும் புதிய படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். முதல் நாள் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, ஒருவருக்கொருவர் சிரித்தபடி, ‘ஹாய்’ சொல்லிக்கொண்டார்கள். படப்பிடிப்பு இடைவேளை சமயங்களில் இரண்டு பேரும் நெருக்கமாக அமர்ந்தபடி, சிரித்து பேசிக்கொண்டார்கள். சிம்பு அடித்த ‘ஜோக்’கிற்கு நயன்தாரா விழுந்து […]
மும்பை, மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில், பாரத ரத்னா விருது பெற்ற திரை இசை பாடகியான லதா மங்கேஸ்கர் கலந்து கெள்கிறார். கடந்த 50 வருடங்களுக்கு முன்பாக 1962ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போரில் கலந்து கொண்ட வீரர்களின் நினைவாக 1963ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி அவர், ஏ மேரே […]