Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: சினிமா

நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை

நடிகை பூமிகா தமிழில் ‘பத்ரி’, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘ரோஜா கூட்டம்’ படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பூமிகாவுக்கும் யோகா பயிற்சியாளர் பரத் தாகூருக்கும் அக்டோபர் 2007–ல் திருமணம் நடந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்போது பூமிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பூமிகாவும் உறுதி செய்தார். இதுகுறித்து பூமிகா கூறும்போது, ‘‘எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்தபெருக்கால் விழிகளில் […]

ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டேன்: சிம்பு அறிக்கை

நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார். மேலும், ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால், தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன். இதை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்துள்ளேன். இனிமேல், ஹன்சிகாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹன்சிகா எனது கடந்த காலம். எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது. இந்த அறிக்கையை என்னுடைய […]

சென்னையில், 9–ந்தேதி நடக்கிறது ‘கோச்சடையான்’ படவிழாவில், அமிதாப்பச்சன் ரஜினிகாந்துடன் கலந்து கொள்கிறார்

சென்னை, ரஜினிகாந்த் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் புதிய படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்துள்ளார். ரஜினிகாந்துடன், சரத்குமார், நாசர், ஆதி, இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி மற்றும் பலரும் நடித்து இருக்கிறார்கள். படம், ‘மோஷன் கேப்சர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தில் பிரமாண்டமான முறையில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் […]

மீண்டும் உடல் எடையை குறைக்கும் அஜீத்

வீரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் தயாராகி வருகிறார். இப்படத்தில் அஜீத் பழைய இளமையான தோற்றத்தில் நடிக்கிறாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து வருகிறாராம். ஏற்கெனவே, ‘ஆரம்பம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அப்படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடம்பை குறைத்து வந்தார். அதன்பிறகு, ‘வீரம்’ படத்தில் கொஞ்சம் குண்டாகி விட்டார். இந்நிலையில், கவுதம் மேனன் படத்தில் ஸ்லிம்மாக தோன்ற வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி […]

டுவிட்டரில் இணைந்தார் சினேகா

தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில் இணையாமல் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் […]

பி.வாசு இயக்கத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கும் சண்டை படம்

சென்னை, இயக்குனர் பி.வாசு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். மும்பையில் ஐஸ்வர்யா ராயை சந்தித்து கதி குறித்து பி.வாசி விளக்கி உள்ளார். இது ம்குறித்து இயக்குனர் வாசு கூறும்ம் போது கதையை கேட்ட ஐஸ்வர்யாராய் கதை நன்றாக இருப்பதாககூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.ஆனால் இந்த புராஜக்ட் குறித்து அவர் உறுதி தெரிவிக்கவில்லைஎனகூறினார்.  இந்திய திரையுலகமே கண்டி ராத ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யாராய் இது வரை நடித்திராத ஒரு சக்தி […]

திருமணம் செய்யவில்லை: நடிகர் அபிசேக் பச்சன் நெகிழ்ச்சி

மும்பை, நான் ஒரு நடிகர் என்பதாலோ அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ, ஐஸ்வர்யா ராய் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று நடிகர் அபிசேக் பச்சன் நெகிழ்ச்சிபட தெரிவித்தார். நடிகர் அபிசேக் பச்சன் இந்தி நடிகர் அபிசேக் பச்சன்–ஐஸ்வர்யா ராய் திருமணம் கடந்த 2007–ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2½ வயதில் ஆரத்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்தநிலையில் நடிகர் அபிசேக் பச்சன் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது […]

குருவாயூர் கோவிலில் ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்தி மகள் சவுந்தர்யா வழிபாடு

ரஜினியின் 2–வது மகள் சவுந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கோச்சடையான் படம் வெளியாவதை தொடர்ந்து சவுந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், கோவிலின் பிரதான நேர்ச்சையான துலாபாரம் நேர்ச்சையும் அளித்தார். இதில், ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்துவதாக வேண்டிக் கொண்டார். […]

திருமணம் பற்றி சிந்திக்கவில்லை: நயன்தாரா

நயன்தாரா காதல் சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு சினிமாவில் மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடித்த ‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’ படங்கள் ஹிட்டாகியுள்ளன. தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் படம் வருகிறது. நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:– இது கதிர்வேலன் காதல் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். பவித்ரா என்ற நடுத்தர குடும்பத்து பெண்ணாக வருகிறேன். ரொம்ப ரசித்து நடித்துள்ளேன். அனாமிகா படத்திலும் நடிக்கிறேன். இது இந்தியில் வந்த கஹானி படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும் கதையில் […]

கமல் படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா நீக்கம்…?

’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். ‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். உத்தம வில்லன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக யுவனுக்குப் பதில் ‌ஜிப்ரானை இறக்கியிருக்கிறார் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »