Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: சினிமா

நடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்

நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார். சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் […]

நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்க திட்டமா?

தான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து அவசர, அவசரமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் நடித்த “தலைவா” படம் வெளியிடுவதில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டது. அந்த படத்தை வெளியிட்டால், திரையரங்களுக்கு வெடிகுண்டு வைத்து விடுவதாக மிரட்டல்கள் வந்ததால், பெரும் சிரமத்திற்கு பின்னர் படம் வெளியிடப்பட்டது. இதற்கிடையே நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இது தொடர்பாக நெருக்கமான சிலருடன் […]

‘கோச்சடையான்’ படத்தில் புறக்கணிப்பா? டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் ஆவேசம்

கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணித்ததாக வதந்திகளை பரப்புகிறார்கள்Õஎன்று டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார். சினிமா படவிழா தூத்துக்குடி, போடிநாயக்கனூர் கணேசன் ஆகிய படங்களில் நடித்த ஹரிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், “சங்கராபுரம்”. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில்  காலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணிப்பதாகவும், விளம்பரங்களில் என்னுடைய பெயரை சிறிய எழுத்தில் போடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. […]

சூர்யாவுக்கு எழுதிய கவுதம் கதையில் சிம்பு நடிக்கிறார்

சூர்யாவுக்காக கவுதம் மேனன் எழுதிய கதையில் சிம்பு நடிக்கிறார். ‘சிங்கம்–2’ படத்துக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் கவுதம் தயார் செய்த கதை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், எனவே அவர் படத்தில் இருந்து விலகுகிறேன் என்றும் சூர்யா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். கவுதம்மேனனிடம் இருந்து வாங்கிய ரூ.5 கோடி அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து சூர்யாவுக்கு தயார் செய்த கதையில் சிம்பு நடிக்க […]

கார்த்தி படத்தின் பெயர் மாற்றம்…?

காளி என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு. படத்தின் பெயரை அறிவித்த போதே பெரிசுகள் மத்தியில் புகைச்சல் கிளம்பியது. காரணம் காளி என்ற பெயர். பத்ரகாளி என்ற பெயரில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ரஜினி நடித்த காளி படத்திலும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். காளி என்றாலே பழி நிச்சயம் என்பது தமிழ் சினிமா நம்பிக்கை. இந்த ப்ளாஷ்பேக்கை கேட்டவர்கள் காளி என்ற பெயரை கபாலியாக்க […]

செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்: நடிகரான ஷாருக் கான் 114-வது இடத்தை பெற்றுள்ளார்

இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய […]

3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்க புதிய ‘ஸ்க்ரீன் எக்ஸ்’ தொழில்நுட்பம் அறிமுகம்

முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எபெக்ட் கிடைக்காது. தற்போது, அதையும் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 […]

என்னை தவிர எந்த இசையமைப்பாளராலும் முடியாது – இளையராஜா பேட்டி

லண்டனில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஐங்கரன் ஒன்றிணைக்கும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்து முறைப்படி இளையராஜா அறிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நிகழ்ச்சி குறித்தும், தனது திறமை குறித்தும் சிறப்பு பேட்டியளித்தார். நான் முதல்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தறேன். லண்டன் ஓ2 அரங்கில் இந்த மாதம் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு என்னுடைய இசைக்கச்சேரி நடக்கிறது. அன்று அந்த அரங்கம் இசை மழையால் நனைய இருக்கிறது. நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு […]

தீபாவளிக்கு முன்பே அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீஸ்?

அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மூன்றும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டது. அத்துடன் ‘ஆரம்பம்’ படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் ‘ஆரம்பம்’ படவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பாக அக்டோபர் 31–ந்தேதி […]

ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதம் பிடிக்கும் நடிகை

தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த “மகதீரா” படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இதனால் ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதமாக இருந்தார். “பீல்டுக்கு வந்தபோது லட்சங்களுக்கே தள்ளாடியவர், ஒருகோடி கேட்கிறாரே” என்று ஆந்திர தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தார்கள். அதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, “இன்னும் ஐந்து வருடம் கழிந்தால் என்னையும் தேடும் நடிகைகளின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது கேட்காமல் எப்போது கேட்பதாம்” என்றார். ஒரு கோடி கேட்டவரிடம். கொஞ்சம் குறைக்கக்கூடாதா? […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »