நிரஞ்சனா இந்த அவசர உலகத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது? என்று பலருக்கு தெரிவதில்லை. அதனால் செய்ய கூடாத செயலை செய்து அதன் பிறகு வருந்துகிறார்கள். இது தவறு – இது சரி என்று மற்றவர்கள் எடுத்து சொன்னாலும் அதை சிலர் காது கொடுத்து கேட்பதாகவும் இல்லை. தாம் செய்வது பாப காரியம் என்று தெரிந்தாலும் தங்களின் சுயநலத்துக்காக அச்செயலை நியாயப்டுத்துவதற்காக நல்ல அறிவுரை சொல்பவர்களிடமே குதற்கமாக கேள்வி கேட்பார்கள். இதனால் நல்லது சொல்பவர்கள் […]
Written by Niranjana எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் இந்த வார்த்தை பொருந்தும். ஒருசமயம் பார்வதிதேவியும், சிவபெருமானும் பூலோகத்திற்கு வந்தார்கள். பல இடங்களை சுற்றிபார்த்துகொண்டே வரும் போது, இமயமலை பகுதிக்கு வந்தார்கள். அந்த இடத்தை கண்ட சக்திதேவி ஆச்சரியப்பட்டாள். “இமயமலையின் இந்த பகுதி மிகவும் ரம்யமாக இருக்கிறது. இங்கே நமக்கென ஒரு அரண்மனையை உருவாக்கி அந்த அரண்மனையில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்” என்றாள். அதற்கு இறைவன், “உன் ஆசையில் ஒன்றும் […]
ஆயுளையும் ஐஸ்வரியத்தையும் அள்ளி தரும் அபிராமி அந்தாதி படிக்க கிளிக் செய்யவும். காப்பு தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. நூல் 1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே […]
நிரஞ்சனா நமது எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் இறைவனின் அருளாசி வேண்டும். மரத்தில் பழம் இருக்கும். அந்த பழத்தை மற்றவர்கள் பறிக்க தவறினாலும் அதற்குரிய காலத்தில் அந்த பழம் தானாகவே மரத்தைவிட்டு தரையில் விழும். அதுபோல ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பொருள் – அந்தஸ்து போன்றவை இறைவன் வகுத்த நேரப்படிதான் அந்தந்த நபர்களுக்கு வந்து சேரும். இறைவன் காட்டும் வழி சற்று கரடு முரடாக இருந்தாலும், அது முடியும் நல்வழி பாதை கால்களுக்கு மட்டும் பஞ்சு போல் […]
நிரஞ்சனா தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில் வெற்றிக்கு முக்கிய தேவை சஞ்சலம் இல்லாத மனநிலை. மன நிம்மதி இருந்தால் எதிலும் வெற்றி கிட்டும். அந்த மன அமைதியை தர கூடியது பக்தி. அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். எங்கெல்லாம் தெய்வம் இருக்கிறதோ அங்கெல்லாம் அமைதி இருக்கும். அமைதி இருக்கும் இடத்தில் தெய்வம் இருக்கும். அந்த இடத்தில் வாழும் மக்களுக்கும் தெய்வம் மகிழ்ச்சியை தரும். கோயில் கருவறையில் வீற்றிருக்கும் […]
நிரஞ்சனா ஒரு ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை என்றால் அது உயிர். அதுபோல, ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பிறந்த நட்சத்திரம். இருளை விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம் ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது. இதை தேவ முனிவர் ஒருவர் காமாட்சி அம்மனிடம் விளக்கினார். அதை பற்றி விரிவாக பார்ப்போம். விளையாட்டு வினையாகும் என்பது போல, அன்னை பார்வதிதேவி, சிவனின் கண்களை […]
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா முந்தைய பகுதியில் “..ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.” இதன் தொடர்ச்சி… செப்பு காசின் மகிமை குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் […]
நிரஞ்சனா முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கண் திருஷ்டி என்ற ஒரு துஷ்ட சக்தி இருக்கிறதா இல்லையா? அது கற்பனையாக உருவாக்கபட்டவார்த்தையா? என்று தெரிந்துக் கொள்ளவேண்டும். காந்தாரி பாண்டவர்களிடத்தில் இருந்து தன் மகன் துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தனக்கு தெரிந்த முனிவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “தாயே பல வருடங்களாக உங்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பதால், உங்கள் கண்களுக்கு அதிக சக்தி கூடி இருக்கும். […]
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியர் என்பவருக்கு பிறந்தவர் விஸ்ரவா. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் குபேரர். விஸ்ரவாவின் இரண்டாவது மனைவி அசுரகுலத்தில் பிறந்தவள். இவளுக்கு பிறந்த குழந்தைகள் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி மற்றும் சூர்ப்பணகை. குபேரர் இலங்கைக்கு அதிபதியாக இருந்தார். குபேரரின் ஆடம்பர வாழ்க்கை இராவணனின் கண்களை உறுத்தியது. “நாம் ஏன் இலங்கைக்கு அரசராகக் கூடாது.?” என்று இராவணனின் மனதில் ஆசை தோன்றியது. அண்ணன் குபேரனை […]
நிரஞ்சனா மனிதர்களில் யாருக்கு முதல் மதிப்பும் – மரியாதையும் என்று பார்த்தால் செல்வந்தர்களுக்கே அவை தரப்படுகிறது. “பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ள மனிதர்களுக்கு வருவதெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதர்களுக்கு சொந்தம் எல்லாம் அந்நியர்கள்;” என்று இன்னும் இன்னும் எத்தனையோ அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் நமக்கு தத்துவங்களாக கிடைக்கிறது. பணம் இருந்தால் போதும் குணம், ஒழுக்கம் எல்லாம் அநாவசியம் என்றாகிவிட்டது. நாங்கள் குணத்தை பார்த்துதான் மதிப்பு தருவோம், பணத்தை பார்த்து அல்ல“ என்று பலர் கூறுவார்கள். […]