நிரஞ்சனா நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று மனிதர்களுக்குள் வேண்டுமானால் போட்டி ஏற்படும். ஆனால் தெய்வங்களுக்கோ அத்தகைய போட்டி – பொறாமை கிடையாது. ஹரியும் சிவனும் ஒன்றே என பல சமயங்களில் நிரூபித்து உள்ளனர். சிவபெருமானை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும், ஸ்ரீமந் நாராயணனை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும் கிடைக்கிறது. ஆனால் சங்கரரையும் நாராயணனையும் ஒன்றாக நினைத்து, ஸ்ரீசங்கரநாராயணனாக வணங்கும் பொழுது பன்மடங்கு பலன்கள் கிடைக்கிறது. ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். அதனால் ஸ்ரீவிஷ்ணு […]
நிரஞ்சனா குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு- சென்னை ஒருவர் சொல்வது அத்தனையும் உண்மை என்று எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதை கேட்பவர்கள் சிலர் அந்த நபர் சொல்வது பொய் என்று வாதாடுவார்கள். இந்த மனோபாவம் சிலருக்கு இருக்கிறது. அப்படிபட்ட நபர்களிடத்தில் இருந்து சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல கடவுளும் தப்பமுடியாது என்ற உண்மையை சீதாபிராட்டியின் சரித்திரத்தை படித்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆம். இராவணால் கடத்தப்பட்டு கணவர் ஸ்ரீ ராமசந்திரனால் போராடி மீட்கப்பட்டு, தாம் உத்தமி என்று தீயில் இறங்கி […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி, கணபதீஸ்வர […]
நிரஞ்சனா “சோறு கண்ட இடம் சொர்கம்” என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன? சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான், “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றார்கள். சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் நாள் அன்று சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு செய்யப்டுகிற அன்னாபிஷேகத்தை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். வீ்ட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். சிவனவன் என் […]
நிரஞ்சனா ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் நம் பாரதி. அதுபோல்தான் இறைவனும் நம் அன்பையும், பக்தியையும், சேவையையும்தான் பார்க்கிறாரே தவிர, இவர் எந்த ஜாதி-மதம் என்று பார்ப்பதில்லை. இறைவன், எந்த பிறப்பிலும் பேதம் பார்ப்பதில்லை. உருவத்திலும் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்கள் மனித இனத்திலேயே வேறுபாடு வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு பழியை ஆண்டவன் மீது போடுகிறார்கள். நம் வாழ்விலேயே பல தரப்பட்ட மதத்தினரையும் ஜாதியினரையும் சந்திக்கிறோம். அவர்களால் நமக்கு உதவியும் கிடைக்கிறது. அதேபோல் நம்மால் […]
நிரஞ்சனா அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி – சென்னை. சிவபூஜை செய்து திருமண பாக்கியம் பெற்ற ஸ்ரீமகாலஷ்மி ஸ்ரீமந் நாராயணனை திருமணம் செய்ய பல முயற்சி எடுத்தும் அத்தனை முயற்சியும் சரியான பலன் கிடைக்காததால், தமது விருப்பம் சிவ வழிபாடு செய்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஒரு செண்பக மலர் காட்டில் சிவபூஜை செய்து தவம் இருந்தாள் ஸ்ரீமகாலஷ்மி. தவத்தையும் வழிபாட்டையும் ஏற்ற சிவபெருமான் ஸ்ரீலஷ்மிதேவிக்கு காட்சி தந்து திருமணம வரம் அருளினார். இதன் பிறகுதான் […]
நிரஞ்சனா சேலம் மாவட்டத்தில் உள்ளது அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில். கிளி கண்டறிந்த சிவலிங்கம் ஜீவராசிகளின் படைப்பின் இரகசியத்தை பற்றி முனிவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரம்மன். சிவ வழிபாடே சிறந்த வழிபாடு என்று வாழ்ந்து வரும் சுகமுனிவர், பிரம்மன் கூறுவதை கேட்டுவிட்டு கோபம் கொண்டு, “ஜீவராசிகளின் படைப்பை பற்றிய இரகசியத்தை வெளிப்படையாக உன் கணவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்”. என்று சரஸ்வதியிடம் முறையிட்டார். சரஸ்வதியிடம் தம்மை பற்றி சுகமுனிவர் குறைச் சொன்னதை அறிந்து ஆத்திரம் அடைந்த பிரம்மன், […]
நிரஞ்சனா வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பரசுராமனால் இங்கு வந்த சிவன் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தன் வீடே திருக்கோயில் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் இவர்களின் வாழ்க்கையில் விதிவிளையாட தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பரசுராமரின் புகழ் உலகமெல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆம், ஒருநாள் ஏதோ […]
நிரஞ்சனா திண்டிவனம்-பாண்டிச்சேரி (வழி கிளியனூர்) பாதையிலுள்ள ஒழுந்தியாபட்டு நிறுத்தத்தில் இறங்கி 2கி.மீ சென்றால் விழுப்புரம் மாவட்டம் அரசிலிநாதர் திருக்கோயில் இருக்கிறது. வேடன் சிவலிங்கம் ஆன சம்பவம் கீழைச் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த சத்தியவிரதன் என்ற அரசர் வேங்கி நகரைத் தலைநகராக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தார். இவர் ஒரு சிறந்த சிவபக்தர். சிவனுக்கு ஒரு அழகான நந்தவனம் அமைத்து, அந்த நந்தவனத்தில் பூக்கும் மலர்களை பறித்து சிவபெருமானுக்கு சமர்பித்து வந்தார். சில நாட்களாக நந்தவனத்தில் இருந்து மலர்கள் கிடைக்காமல் […]
நிரஞ்சனா நம் முன்னோர்களுக்கு சாபம் ஏற்பட்டு இருந்தால் அவர்களின் வம்சத்தில் பிறப்பவர்களுக்கு சாபம் தொடரும். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் ஆலயம் இதற்கு பரிகார கோயிலாக இருக்கிறது. இஷ்வாகு வம்சத்தை சார்ந்த பரத கண்டத்தையாண்ட பகீரதன் என்ற அரசர், நீதியை நிலைநாட்டி பல நன்மைகளை தன் நாட்டு மக்களுக்கு செய்து வந்தார். பகீரதனால் வந்த கங்கை நதி இந்த பகீரதன்தான் கங்கை, பூமிக்கு வர காரணமாய் இருந்தவர். முன்னொரு சமயத்தில் சகரன் என்ற அரசர் அசுவமேத […]