Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: பெருமாள் கோயில்

சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் : வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டுரை

18.12.2018 அன்று வைகுண்ட ஏகாதசி Written by Niranjana  மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் […]

நரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா! தீபாவளி சிறப்பு கட்டுரை

 Written by Niranjana  ஆண் சக்தி இருந்தாலும் அந்த ஆணுக்கு, பெண் சக்தியும் துணை இருந்தால்தான் எடுக்கும் முயற்சி விரைவாக முடியும் என்பதால்தான் சிவபெருமான் சக்திதேவியை தமது இடது பாகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதுபோலவே, திருமாலும் தன் மார்பில் ஸ்ரீமகாலஷ்மியை இடம் பெற செய்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அதுபோலதான், நரகாசுரனை வீழ்த்தியது கிருஷ்ணர் என்று பலர் நினைத்தாலும், சத்தியபாமாவால்தான் நரகாசுரனை வீழ்த்த முடிந்தது என்பது […]

தீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை

Written by Niranjana “தீபாவளி அன்று என்னத்த சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு? காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா? என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன? நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் […]

ஸ்ரீரங்கனை எந்த நேரத்தில் எப்படி அழைப்பது?

நமது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போதும், குழப்பமான நிலையில் தவித்திருக்கும் சூழ்நிலையிலும் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாடமாக மனதில் நிறுத்தி அதனையே ஆண்டாண்டு காலமாக கடைபிடித்தும் வருகிறோம். எங்கேயும் எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது நமக்கு பயம் என்கிற இருள் நீங்கப்பெற்று நம்பிக்கை, அமைதி என்கிற அருள் வரமாக, உறுதியாக கிடைக்கப்பெறுவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்கிற வாசகத்தின் பொருளில் இறைவனின் நாமமே முதன்மை பெறுகிறது. அந்த […]

2018 Numerology Predictions | | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள்

2018 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28 2018 Numerology Predictions | Birth Date 2,11,20,29 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 2,11,20,29 2018 Numerology Predictions | Birth Date 3,12,21,30 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 3,12,21,30 2018 Numerology Predictions | […]

அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை

17.12.2017 அன்று அனுமன்ஜெயந்தி Written by Niranjana  மார்கழி மாதம் அமாவாசை அன்று, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் அனுமான் “ஆண் மூலம் அரசாலும்.” என்பார்கள். அரசராக திகழ்ந்த ஸ்ரீராமருக்கு துணை இருந்து, இப்போதும் ஆஞ்சனேய பக்தர்களான நம் மனதில் தைரியத்தை தருகிற, ஊக்கத்தை தருகிற அரசராக திகழ்ந்து நம்மை காக்கும் பொறுப்பையும் ஏற்று, ஸ்ரீராமபக்தர்களுக்கு நிழலாக இருந்து காப்பாற்றுகிறார் நம் அரசர் ஆஞ்சனேயர். இராவணன் பிடியில் இருந்து சீதையை மீட்டுவதற்கு ஸ்ரீராமருடன் கடைசிவரை உறுதுணையாக இருந்தார் அனுமார். […]

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை சிறப்பு கட்டுரை

19.09.2017 அன்று மகாளய அமாவாசை! Written by Niranjana  சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில்  நமது முன்னோர்களும் இறந்து போன ரத்த சம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் காண வருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது […]

குருவே சரணம்- குருபெயர்ச்சி சிறப்பு கட்டுரை

Written by Niranjana. குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். ஸ்ரீதட்சணாமூர்த்திதான் குரு பகவான் என்று பலர் நினைக்கிறார்கள். சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி வேறு, நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் என்பவர் வேறு. சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி,  குருபகவானுக்கும் குரு. கல்வி – ஞானத்திற்கும் […]

பொன்மயமான வாழ்வை தருவார் கிருஷ்ண பகவான்! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Written by Niranjana  14.08.2017 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், […]

வேண்டுதல் நிறைவேற்றும் ஆடித் தபசு திருநாள்! சிறப்பு கட்டுரை

Written by Niranjana 06.08.2017 அன்று  ஆடித் தபசு தவம் என்றால் என்ன? நம் மனதில் என்ன விரும்புகிறோமோ அதனை அடையும்வரை காரியத்தில் கண்ணாக இருப்பதுதான் தவம்.   நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும். மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »