Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Category archives for: அம்மன் கோயில்

ஆனி திருமஞ்சனம் சிறப்பு கட்டுரை

ஆனி திருமஞ்சனம் (30.06.2017)   Written by NIRANJANA  அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆடல்நாயகனை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத்தை காணும் திருநாள்.   சிவபெருமானின் நடனத்தை காண தேவர்கள், முனிவர்கள் தவம் இருந்தார்கள். விஷ்ணுபகவானும் சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். “சிவ-சக்தி ஒன்றே“ என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார். அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர், பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்தியை இழந்தார். சிவலிங்கத்தை […]

புத்திர பாக்கியம் தரும் கோலம்

Written by Niranjana ஒரு இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான் மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும். ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் […]

சித்ரா பவுர்ணமி கதையும் பூஜை முறையும் – சிறப்பு கட்டுரை

Written by Niranjana 10.05.2017 அன்று சித்ரா பவுர்ணமி! சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த […]

தரிதிரத்தை நீக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அட்சய திருதியை சிறப்பு கட்டுரை

28.04.2017 அன்று அட்சய திருதியை Written by Niranjana அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, […]

திருமண வரம் தரும் பங்குனி உத்திரம் சிறப்பு கட்டுரை!

Written by Niranjana 09.04.2017  அன்று பங்குனி உத்திரம். திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லோரும் சொல்லும் பொதுவான சொல்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இப்படி மானிடர்களின் திருமணத்தை பார்த்தாலே யோகம் என்றால், தெய்வத்தின் திருமண கோலத்தை பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள் அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும். அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு விரைவில் திருமண […]

கணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு

Written by Niranjana  மத்திரத் தேசத்தின் அஸ்வபதி என்ற அரசனுக்கு மாளவி என்ற குணவதியான மனைவி இருந்தாள். “அரசன் என்ற பதவியை கொடுத்த இறைவனால், தந்தை என்ற பதவியை கொடுக்க முடியவில்லையே…“ என்ற கவலை அஸ்வபதி தம்பதினருக்கு வாட்டியது. தன் கவலையை நாரதர் முனிவரிடம் சொல்லி வருத்தபட்டார் அரசர். “கவலை வேண்டாம். இறைவன் உங்களுக்கு பெரும் செல்வமான குழந்தை செல்வத்தை தருவார். நீங்கள் சாவித்திரி தேவியை மனதால் நினைத்து விரதம் இருந்து யாகம் செய்யுங்கள்“ என்றார் நாரத […]

வல்லமை நிறைந்த மாசி மகம். சிறப்பு கட்டுரை

11.03.2017 அன்று மாசி மகம் Written by Niranjana மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக […]

பொங்கலோ பொங்கல்|பொங்கல் திருநாள் சிறப்பு கட்டுரை.!

Written by Niranjana 14.01.2017 அன்று தைப் பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் […]

நவகிரக தோஷத்தை நீக்கும் நவராத்திரி நவதானியங்கள் – நவராத்திரி சிறப்பு பரிகார கட்டுரை

Written by Niranjana  பொதுவாக பண்டிகைகள் நம் வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுப்பதற்காகதான் வருகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்“, “ஒளிமையமான வாழ்க்கை பெற தீபாவளி“, “புது வருடத்தில் புத்தம் புதிதாய் நல்ல விடிவுகாலம் பிறக்கும்“, போன்ற தன்னம்பிக்கை தருவதுதான் பண்டிகைகள். அதுபோல, நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும், அந்தந்த கிரகங்களை வழிபட வேண்டும் என்பது கட்டாயம். ஆனாலும், இறைவனையும் வணங்க வேண்டும் என்பதும் அவசியம். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம். […]

நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும் நவராத்திரி சிறப்பு கட்டுரை பகுதி – 1

Written by Niranjana நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது. இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech