நிரஞ்சனா மும்பையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்ற வளாகத்தில் அமைந்திருக்கிறது பத்மாவதி தாயார் ஆலயம். கல்விக்கு சரஸ்வதிதேவி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் செல்வ வளத்தை அள்ளி தரும் மகாலஷ்மி, இங்கே கல்வி வரம் அள்ளி தரும் தெய்வமாகவும் இருக்கிறாள். முன்னொரு காலத்தில் பௌம்மி என்று அழைக்கப்பட்ட இடம் இன்று, பவாய் என்று அழைக்கபடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் இந்த இடத்தில் பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பத்மாவதி தாயார் கோயில் […]
Written by Niranjana வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, […]
நிரஞ்சனா இறைவன் தன் பக்தனை காக்க எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவார். முன்னோர் காலத்தில் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகவும், ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்தார். அதுபோல ஒரு அவதாரமே ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் அவதாரம். அது ஏன்? ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றால் எப்படி இருப்பார்? என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, நாம் பிரகலாதனை பற்றி சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம். இரண்யனின் மகன் பிரகலாதன். தந்தையே மகனுக்கு வில்லனாக இருந்தார். இந்த வில்லனிடம் இருந்து குழந்தை பிரகலாதனை காக்கும்படி கேட்டுகொண்டார் கருடாழ்வார் ஸ்ரீமந் […]
நிரஞ்சனா நம் இஷ்ட தெய்வத்தை வேண்டி அழைக்கும் முறை எது? இறைவனுக்கு சாஸ்திரமுறைபடி நைவேதியம் தருவது எப்படி? அதுவும் வேத மந்திரங்கள் ஏதும் தெரியாத எளிய பக்தர்கள் எப்படி இறைவனுக்கு நைவேதியம் தருவது? பசியில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தந்தாலே அது இறைவனுக்கு தந்தது போலதான். இருந்தாலும், உணவு பொருள்களை நமக்காக படைத்த இறைவனுக்கு நம் நன்றியை காணிக்கையாக்கும் விதமாக வசதிக்கேற்ப உணவு தயாரித்து படைத்து, மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியாத எளிய பக்தர்களும் இறைவனுக்கு நன்றி சொல்ல […]
நிரஞ்சனா புதுடெல்லி கன்னாட் பிளேஸில் இருக்கிறது அனுமான் மந்திர். ஸ்ரீ இராமரின் பக்தர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினாலே ஸ்ரீ இராமரின் அருள் கிடைத்துவிடும். அதேபோல் ஸ்ரீ இராமரை வணங்குபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் துணை கிடைக்கும். பாண்டவர்களுக்கு ஸ்ரீ அனுமனின் அருள் பாண்டவர்கள் பகடை விளையாட்டில், துரியோதனனிடம் தோற்றார்கள். இதனால் பாண்டவர்கள் நாட்டை இழந்து காட்டில் தங்கினார்கள். அப்போது ஒருநாள் திரௌபதி பீமனிடம் ஒரு தாமரை பூவை காட்டி, “இதுபோல் இன்னொரு தாமரை பூ வேண்டும்” என்றார். அதனால் […]
நிரஞ்சனா இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் சிவபெருமான். நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம். […]
நிரஞ்சனா கல்விக்கு அதிபதி சரஸ்வதி. படைப்புகளுக்கு அதிபதி பிரம்மா. ஆனால் சகல லோகங்களுக்கும் தலைவர் ஈசன். படைக்கும் தலைவனான பிரம்மாவின் புதல்வர்களுக்கு குருவாக இருந்து ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாக உபதேசம் செய்தார் சிவபெருமான். அதை பற்றி தெரிந்துக் கொள்ள இருக்கிறோம். குருவாக சிவபெருமான் பிரம்மாவின் மகன்கள் சநகர், சநந்தனர், சநத்குமாரர், சநாத்சுஜாதர். இவர்கள், தங்கள் தந்தையை போல ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினார்கள். அதற்கு, “யாரிடம் ஞான உபதேசம் பெறுவது?. நம் தந்தையிடமே உபதேசம் பெற்றால் […]
நிரஞ்சனா ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம். பணிப்பெண்ணின் மகன் மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த […]
நிரஞ்சனா சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான். ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் […]
நிரஞ்சனா வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும். பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள். இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் […]