Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிக பரிகாரங்கள்

யோகத்தை தரும் சுக்கிரன் வழிபாடு

 நிரஞ்சனா ஒருவருக்கு சுகபோகவாழ்க்கை அமைந்தால், “அவர்களுக்கு என்னயா சுக்கிரதிசை” என்பார்கள். ஒருவரின் வாழ்வை உயர்த்தும் அந்தஸ்து சுக்கிரனுக்கு மட்டுமா உள்ளது என்றால் அப்படியில்லை. நவகிரகங்களுக்கும் அதிர்ஷ்டம் தருகிற ஆற்றல் இருக்கிறது. இருந்தும் ஏன் சுக்கிரனை மட்டும் இப்படி சொல்கிறார்கள் என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம். சுக்கிரபகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த […]

குழந்தை செல்வம் தரும் இருக்கன்குடி மாரியம்மன்

நிரஞ்சனா விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து கிழக்கே 8 கி.மீ., தூரத்தில் உள்ளது அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் . ஊர் ஒற்றுமையாக இருந்தால் அங்கே குடியிருக்கும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோல நதிகள் இணைந்தால் அனைத்து ஊர்மக்களுடன் தெய்வமும் மகிழ்ச்சி அடையும். இரு நதிகளுக்கு இடையே இருக்கன்குடி அம்மன் இருக்கிறார். முதலில் அந்த இரு நதிகள் எது? அவை இணைந்த கதை என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு, அங்கே அம்மன் தோன்றிய வரலாறையும் அறிந்துக் கொள்வோம். […]

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை

நிரஞ்சனா ஒரு ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை என்றால் அது உயிர். அதுபோல, ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பிறந்த நட்சத்திரம். இருளை விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம் ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது. இதை தேவ முனிவர் ஒருவர் காமாட்சி அம்மனிடம் விளக்கினார். அதை பற்றி விரிவாக பார்ப்போம். விளையாட்டு வினையாகும் என்பது போல, அன்னை பார்வதிதேவி, சிவனின் கண்களை […]

கண் திருஷ்டியை விரட்டும் எளிய பரிகாரங்கள்-பகுதி -2

சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்.    நிரஞ்சனா முந்தைய பகுதியில்  “..ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால்  அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.”   இதன் தொடர்ச்சி… செப்பு காசின் மகிமை   குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் […]

நோய் தீர்த்த ஷீரடிசாய்பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 18 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்.  நிரஞ்சனா ஒருவரை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் பலர் முன் வருவார்கள். பாராட்ட சிலரே வருவார்கள். குறை மட்டுமே சொல்கிற மனநிலை ஏன் இவர்களுக்கு இருக்கிறது? என்று கூட நினைக்க தோன்றும். ஆனால் ஒருவரை பற்றி மற்றவர் குறை கூறுவது பெரிய விஷயமே இல்லை. ஏன் என்றால், இறைவனையே குறை கூறும் உலகத்தில் அல்லவா பிறந்திருக்கிறோம். ஆம், முருகப்பெருமானை பார்த்து கவிஞர் […]

கண் திருஷ்டியை விரட்டும் எளிய பரிகாரங்கள்- பகுதி-1

நிரஞ்சனா    முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கண் திருஷ்டி என்ற ஒரு துஷ்ட சக்தி இருக்கிறதா இல்லையா? அது கற்பனையாக உருவாக்கபட்டவார்த்தையா? என்று தெரிந்துக் கொள்ளவேண்டும். காந்தாரி பாண்டவர்களிடத்தில் இருந்து தன் மகன் துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தனக்கு தெரிந்த முனிவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “தாயே பல வருடங்களாக உங்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பதால், உங்கள் கண்களுக்கு அதிக சக்தி கூடி இருக்கும். […]

செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு – பகுதி – 2

 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்.  நிரஞ்சனா   பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியர் என்பவருக்கு பிறந்தவர்  விஸ்ரவா. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் குபேரர். விஸ்ரவாவின் இரண்டாவது மனைவி அசுரகுலத்தில் பிறந்தவள். இவளுக்கு பிறந்த குழந்தைகள்    இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி மற்றும் சூர்ப்பணகை. குபேரர் இலங்கைக்கு அதிபதியாக இருந்தார். குபேரரின் ஆடம்பர வாழ்க்கை இராவணனின் கண்களை உறுத்தியது. “நாம் ஏன் இலங்கைக்கு அரசராகக் கூடாது.?” என்று இராவணனின் மனதில் ஆசை தோன்றியது. அண்ணன் குபேரனை […]

செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு- பகுதி – 1

நிரஞ்சனா மனிதர்களில் யாருக்கு முதல் மதிப்பும் – மரியாதையும் என்று பார்த்தால்  செல்வந்தர்களுக்கே அவை தரப்படுகிறது. “பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ள மனிதர்களுக்கு வருவதெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதர்களுக்கு சொந்தம் எல்லாம் அந்நியர்கள்;” என்று இன்னும் இன்னும் எத்தனையோ அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் நமக்கு தத்துவங்களாக கிடைக்கிறது. பணம் இருந்தால் போதும் குணம், ஒழுக்கம் எல்லாம் அநாவசியம் என்றாகிவிட்டது.  நாங்கள் குணத்தை பார்த்துதான் மதிப்பு தருவோம், பணத்தை பார்த்து அல்ல“ என்று பலர் கூறுவார்கள். […]

கல்வியில் மேன்மை தரும் மும்பை பத்மாவதி தாயார்

நிரஞ்சனா    மும்பையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்ற வளாகத்தில் அமைந்திருக்கிறது பத்மாவதி தாயார் ஆலயம். கல்விக்கு சரஸ்வதிதேவி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால்  செல்வ வளத்தை அள்ளி தரும்    மகாலஷ்மி,  இங்கே கல்வி வரம் அள்ளி தரும் தெய்வமாகவும் இருக்கிறாள். முன்னொரு காலத்தில் பௌம்மி என்று அழைக்கப்பட்ட இடம் இன்று, பவாய் என்று அழைக்கபடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் இந்த இடத்தில் பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பத்மாவதி தாயார் கோயில் […]

பதினாறு செல்வங்களை தரும் முப்பாத்தம்மன்

நிரஞ்சனா   கோயில் அமைந்த இடம்: சென்னை தி நகரில் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் இருக்கிறது அருள்மிகு முப்பாத்தம்மன் ஆலயம். உண்மையான பக்திக்கு தெய்வம் தேடி வந்து உதவும். அதிலும் பெண் தெய்வங்களை பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவரின் தர்மநெறிக்கும், நேர்மைக்கும், அன்பு நிறைந்த பக்திக்கும் கட்டுப்படுகிற பெண் தெய்வங்கள் அந்த ஒரு பக்தருக்கு மட்டுமல்லாமல் அவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் துணை இருப்பார்கள். அப்படிபட்ட பெண் தெய்வங்களில் ஒருவள்தான் அன்னை சக்திதேவி. மகாசக்தியான அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினால் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech