Niranjana நாம் செய்யும் நற்காரியங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் கைராசிகாரர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோர்களின் கைகளால் எதை வாங்கினாலும் விருத்தியடையும். ஆனால் மற்றவர்களின் கைகளால் நல்ல காரியம் தொடங்க வேண்டும் என்றால், அவர்கள் கைராசிகாரர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். கை இராசி என்பது உண்மையா? அல்லது அவரவர்களின் தலையெழுத்தபடிதான் அமையுமா? என்றால், தலையெழுத்து நன்றாக இருந்தால்தான் […]
Niranjana தஞ்சை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கோடியம்மன், தஞ்சையின் எல்லையில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார். அற்புதம் நிறைந்த கோடியம்மன் தோன்றிய வரலாறு என்ன என்பதையும், சோழ மன்னரின் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி, எதிரிநாட்டு அரசரான சத்துருகோபன் திட்டமிட்டு போருக்கு வந்தபோது, சத்துருகோபனுடன் போரிடும் அளவுக்கு போதிய நிதி நிலை இல்லை என வருந்திய சோழ மன்னரை, எவ்வாறு கோடியம்மன் காப்பாற்றினார் என்பதையும் இன்று நாம் தெரிந்துக்கொள்வோம். அழகாபுரி அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் […]
Niranjana இறைவனை வணங்கிட நாள்-நேரம் பார்க்க தேவையில்லை. எந்த சமயத்திலும் இறைவனை வணங்கலாம். ஆனாலும் இறைவனுக்குரிய மிகவும் விசேஷமான தினங்களில் வணங்கினால், வேண்டியது வேண்டியபடி விரைவில் கிடைத்திட வழிவகுக்கும். எந்தெந்த தெய்வங்கள் என்னென்ன பலன்களை நமக்கு தந்திடும்? என்னென்ன தானங்கள் செய்வதினால் என்னென்ன நற்பலன்கள் கிட்டிடும்? காலையில் எந்த திசையை நோக்கி கண் விழித்திட வேண்டும்? எந்த திசையை முதலில் பார்க்கக் கூடாது.? போன்ற சாஸ்திர விஷயங்களை சிவபுராணத்தில் சூதமா முனிவர் அழகாக சொல்லி இருக்கிறார். […]
நிரஞ்சனா ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயர், அதே இராமனிடம் மோதினார் என்பதை அறியும்போது ஆச்சரியமாகவே இருக்கும். விதியின் விளையாட்டில் இருந்து யார்தான் தப்பிக்க முடியும்?. யாரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கமுடியாது, அதுபோல தொடர்ந்து ஒருவருக்கு எதிரியாகவும் இருக்க முடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதனால்தான் நாரதமுனிவரின் சூழ்ச்சியில் ஸ்ரீஇராமரும் அனுமனும் மோதிக் கொண்டார்கள். அந்த சம்பவத்தை பற்றி தெரிந்துக் கொள்வோம். உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று நினைத்த […]
நிரஞ்சனா சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன் தரும். இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சாளக்கிராமம் உருவானகதையை பலபேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ –விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும்பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் […]
நிரஞ்சனா விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம். கனவு எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது […]
நிரஞ்சனா மற்றவர்களை பிடித்து அலைய வைக்கும் சனி, ஒருவரை மட்டும் பிடிக்க முடியாமல் அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா? சனீஸ்வரரை கலங்கடித்த விநாயகர் ஒருநாள் கிரக நிலைகளின்படி விநாயகரை சனிபகவான் பிடிக்கவேண்டிய நாள் வந்தது. அதனால் விநாயகரிடம் சென்ற சனிபகவான், “விக்னேஷ்வரா…நாளை தங்களை நான் பிடிக்க வேண்டிய நாள்.” என்று பவ்வியமாக கூறினார். “உன்னால் என்னை பிடிக்க முடியாது“ என்றார் விநாயகர். “உங்கள் தந்தையையே பாதாள லோகத்தில் அமர வைத்தவன் நான். எவராலும் என் பிடியில் இருந்து […]
நிரஞ்சனா எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அது நல்லவிதமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல வார்த்தைகளே நல்வழிகாட்டியாக அமைந்துவிடும். நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல செயல்களை செய்ய செய்ய ஊழ்வினை அகலும். வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகள் பூர்வஜென்ம பலன்களால்தான் அமைகிறது. இன்று விதைத்ததைதான் சில மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறோம். எள்ளை விதைத்துவிட்டு நெல்லை எதிர்பார்க்கலாமா?. அதுபோலதான் நாம் செய்யும் நன்மை-தீமைகளே வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. […]
நிரஞ்சனா சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் சென்னையிலிருந்து 94 கி.மீ தொலைவில் இருக்கிறது அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் என்கிற இந்த ஊரின் பெயருக்கு காரணம் இருக்கிறது. அத்துடன் தடைபடும் காரியத்தை தடையில்லாமல் நடக்க அருள் புரியும் தெய்வம் குடியிருக்கும் சிறந்த பரிகார ஸ்தலம் இதுதான். அவற்றை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக இக்கட்டுரையின் நாயகனான அச்சுமுறி விநாயகரின் விளையாட்டை பற்றி தெரிந்துக்கொள்வோம். மூன்று பறக்கும் கோட்டைகள் தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி இவர்கள் அசுர சகோதரர்கள். அசுரர்கள் என்றாலே […]
நிரஞ்சனா பெருமாள் கோயிலுக்கும் அனுமன் ஆலயத்திற்கும் சென்று தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, […]