Thursday 28th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிகம்

சிவ பக்தர்களுக்கு குபேரன் துணை – அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4 நிரஞ்சனா  சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் கமலினி திருவாரூரில் வந்து அவதரித்தார். பதியிலார் குலத்தில் பிறந்தார். அதாவது சிவனை தவிர வேறு யாரையும் நினைக்காமல் சிவதொண்டே உயர்ந்த தொண்டு என்று நினைக்கும் குலத்தில் பிறந்தாள். கமலினி பிறந்து சில நாட்கள் ஆனது. குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவாதிரை என்ற நல்ல நாளில் பரவையார் என்று திருநாமம் சூட்டினார்கள். பார்க்கும் போதே தூக்கி கொஞ்ச வேண்டும் […]

பெருமாளே நடத்திய கும்பாபிஷேகம்

நிரஞ்சனா திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் திருச்சி – துறையூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பதினேழு கி.மீ. தொசைவில் உள்ளது. சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் நான்காவதாக அறியப்படுகிறது. திரேதாயுகத்தில் அயோத்தி நகரை சிபி சக்கரவர்த்தி அரசாண்டு வந்தார். ஒருநாள் நீலிவனம் பக்கமாக சென்று கொண்டு இருந்த அரசர், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பன்றி அங்கும் இங்குமாக ஒடி கொண்டு இருந்தது. பன்றியாக இருந்தாலும் பார்க்க மிக வெள்ளையாக அழகாக இருக்கிறதே என்று நினைத்து, தாம் அரசர் என்பதையே […]

திருக்கோயில் உணவு – பிணி தீர்க்கும் மருந்து

நிரஞ்சனா  மகரிஷி துர்வாசர் முனிவருக்கு அதிகமான பசி ஏற்பட்டது. எங்கு சென்று சாப்பிடுவது என்ற கவலை அவரை வாட்டியது. அப்போது அவர் பார்வையில் ஒரு குடிசை தென்பட்டது.  அந்த குடிசையின் அருகில் சென்று அங்கு வசிக்கும் முத்கலர் என்பவரிடம் “எனக்கு பசியாக இருக்கிறது“ என்றார். ஆனால் முத்கலரோ தன் குடும்ப பசிக்கு அவர் தினமும் வயல்வெளிகளில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை  ஒவ்வொன்றாக பொருக்கி சேமித்து பத்து நாட்களுக்கு ஒரு தடவைதான் சாப்பிடுவார்கள். அந்த சாப்பாட்டையும் துர்வாச முனிவர் ஒரே […]

வெள்ளிகிழமைகளில் சமைக்க கூடாத உணவு எது?

ஸ்ரீசந்தோஷி மாதா.  விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 5 – நிரஞ்சனா சென்ற இதழ் தொடர்ச்சி… “உன் அத்தையிடம் (சுனிதி) மிட்டாய் வாங்க காசு கேள்.“ என்று தன் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்பினாள் சுனீதியின் அண்ணி. அந்த குழந்தைகளும் சுனீதியிடம் சென்று பணம் பெற்று புளியம்பழத்தை வாங்கி சுனீதியின் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பூஜை நேரத்தில் புளியை உபயோகப்படுத்திய வினையால் மறுநாளே யாரோ வேண்டாதவர்கள் சிலர் அந்த நாட்டின் அரசரிடம், “திருடியே சொத்து சேர்த்தார் போலாநாத்.“ […]

வேடனை அரசனாக்கிய தாமரை

நிரஞ்சனா ஒரு காட்டில் வேடனும் அவனுடைய மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அசுர காற்றும் மழையும் பலமாக வீசியது. மரங்கள் சாய்ந்தது. மழை நீர் கடல் போல வனத்தை சூழ்ந்தது. “இனி இங்கு வாழ முடியாது,  வேறு எங்காவது சென்று விடலாம்“ என்று காட்டை விட்டு வெளியேறினார்கள். பசி உயிரை வலிக்கச் செய்தது. கால் போனபோக்கில் நடந்து போய் கொண்டிருந்தார்கள். ஒர் குளத்தில் அதிகமான தாமரை மலர்கள் பூத்து இருந்தது. இதை கண்ட வேடன், “நாம் இந்த […]

“பாபா மகிமை சொன்ன மகாசக்தி“ – மகான் சீரடி பாபா வரலாறு – பகுதி 4

மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 4 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா யாராலும் தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் என்று நினைக்கக் கூடாது. தெய்வத்தின் குழந்தைகளான நம்மை காக்க தெய்வமே அவதாரம் எடுத்து வருவார். ஆம்… அப்படிதான் மருத்துவரால் கைவிடப்பட்ட ஈரானிய பெண்ணே ஓர் உதாரணம். அந்த பெண்மணிக்கு உடல் நலம் இல்லாமல் எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் பல மருத்துவர்களை பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாள்பட நாள்பட வியாதி அதிகம் ஆனது. […]

“நண்பனோடு விளையாடிய சிவன்“ – அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 3

அறுபத்து மூவர் வரலாறு பகுதி 3   நிரஞ்சனா சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நீதி சபை முன் நடக்க போவதை எதிர்பார்த்து மௌனமாக நின்றிருந்தார் நம்பியாரூரர். “நம்பியாரூரரே எங்களை மன்னிக்கவும். இந்த ஒலையில் இருக்கும் கையெழுத்தும் உங்கள் பாட்டன் கையெழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் நியாயப்படி இந்த பெரியவர் பேச்சை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும். அதுதான் தர்மம்.“ என்றார்கள் சபையோர்கள். “சரி… நான் இந்த கிழவனுடன் செல்கிறேன். ஆனால் இந்த திருவெண்ணெய் […]

அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான்

நிரஞ்சனா முருகனுக்கு ஆறுபடை வீடு. அதில் ஒன்று திருச்செந்தூர். சூரன் முருகனுக்கு பயந்து மாமரமாக காட்சி கொடுத்தார். எல்லாம் கண நேரத்தில் அறியும் ஆறுமுகனால் இதை தெரிந்து கொள்ள முடியாதா என்ன? மரமாக உருமாறி இருக்கும் சூரனை தன் வேலால் அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரனை கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் முருகனை பிடித்து கொண்டது. முன்னோரு சமயம் பிரம்மஹத்திதோஷம் நீங்குவதற்கு அன்னபூரணியிடம் உணவை வாங்கி சாப்பிட்ட பிறகுதான் சிவனுக்கே தோஷம் நீங்கியது. ஆனால் ஆறுமுக பெருமானோ யார் […]

சமைத்த உணவு வீணாவது எதனால் ?

நிரஞ்சனா வீட்டின் சமையறையில் சண்டை போடவோ, அழவோ கூடாது. திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தை ஸ்ரீ மகாலஷ்மி வந்து பார்வையிடுகிறார்  என்கிறது புராணம். அதேபோல் நாம் வீட்டில் சமைக்கும் போதும் ஸ்ரீஅன்னபூரணி தேவி வந்து பார்க்கிறார் என்கிறது சாஸ்திரம். சமையலறையில் அழுதாலோ, சண்டை போட்டாலோ ஸ்ரீஅன்னபூரணி அந்த இடத்தை விட்டு சென்று விடுவாள். இதனால் சமைத்த உணவை யாரும் சரியாக சாப்பிட முடியாத அளவிற்கு சூழ்நிலை உருவாகும்.  

கொலுசின் ஒசை திருஷ்டியை விரட்டும்

நிரஞ்சனா பெண்கள் காலில் கொலுசு போட வேண்டும் என்று பெரியவர்கள் எழுதாத சட்டமாக வலியுறுத்தி கூறினார்கள். ஏன் தெரியுமா? கொலுசை காலில் அணிந்து நடக்கும் போது அந்த சலங்கை ஒலி கண் திருஷ்டியை அண்டவிடாது. கொலுசின் ஒலியைக் கேட்ட கஜலட்சுமி ஆனந்தம் அடைந்து வாழ்க்கையை ஆனந்தமாக வைத்திருப்பாளாம். கொலுசை வெள்ளியில்தான் அணிய வேண்டும். தங்கத்தில் கொலுசை அணியவேக் கூடாது.   கண்ணகியும் கோப்பெரும் தேவியும் தங்கத்தால் சிலம்பை காலில் அணிந்ததால்தான் பிரச்சனையே உண்டானது. ஒரு கேள்வி எழலாம்…“தங்கத்திலும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech