முன்னோர் வழிபாடு என்பது நமது இந்திய கலாசாரத்தின் இன்றியமையாத நெறிமுறை. மாதா-பிதா-குரு-தெய்வம் என்கிற வரிசையில் கண்கண்ட தெய்வங்களாக இருப்பவர்களுக்கே இந்து சமயம் முன்னுரிமை அளிக்கிறது. முன்னோர்களின் ஆசியே மிக முக்கியம் என்பது இந்தியர்களின்-பாரத தேச மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தவர்களுக்கும் அவர்களின் தலைமுறைக்கும்தான் முன்னுரிமை என்பதை மனதில்கொண்டுதான், தெய்வத்தை கூட நம் பெரியவர்கள் கடைசியில் வைத்தார்கள். முன்னோர்களுக்கு நாம் தருகிற முக்கியத்துவத்தைதான் இன்று மேலைநாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக பின்பற்றி […]
அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் நான் ஒரு காணொளி பார்த்தேன். அது ஒரு ஆன்மிக சொற்பொழிவாளரின் காணொளி. அதில் அவர் பேசும்போது ஒரு கருத்தினைச் சொன்னார். அது என்னவென்றால், நாம் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு போகும் பொழுது யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு விளக்கம் தந்தார். கோவிலுக்குள் நாம் நுழைந்தவுடன் நாம் யார்? நம்முடைய பெயர் என்ன? நம்முடைய நட்சத்திரம் என்ன? நம் குலம், கோத்திரம், நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியும். […]
இறைவனுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பலன் உண்டு. நம்மில் பலருக்கு சில வேண்டுதல் இருக்கும். வேண்டதக்கது எதுவென நாம் சொல்லாமலே அறிந்து, அது நமக்கு நன்மை தரும் என்றால் மட்டுமே அதனை நமக்கு கிடைக்கச் செய்வான் இறைவன். ஒரு குழந்தை அடம் பிடித்து கேட்கும் அனைத்தையும் தாய் தந்துவிட மாட்டாள். அது அக்குழந்தையின் நலனுக்கு ஏற்றதுதானா என தெரிந்த பின்னே தருவாள். அதுபோலதான் இறைவனும். நமக்கு நல்லதை தருவான், தீயது எனில் அவற்றை நமக்கு கிடைக்காமல் […]
Written by Niranjana வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி […]
Written by Niranjana முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது […]
23.12.2018 அன்று ஆருத்ராதரிசனம் Written by Niranjana மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் அமைவதுதான் ஆருத்திரா தரிசனம். இந்த திருநாளில் சிவபெருமானின் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜ பெருமானின் நடனத்துடன் அந்த இசையும் கேட்டாலே நம் கவலைகள் மறந்து நம்மையும் அறியாமல் ஆட வைக்கும் சிலிர்க்க வைக்கும் நடனம்தான் எம்பெருமான் ஈசனின் ஆருத்திரா நடனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின்தொடரும் […]
18.12.2018 அன்று வைகுண்ட ஏகாதசி Written by Niranjana மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது ஏகாதசி எப்படி உருவானது? சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் […]
Written by Niranjana 23.11.2018 கார்த்திகை தீபம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின் சிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய இந்த பஞ்சபூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், மகான்கள் தோன்றினார்கள். திருவண்ணாமலை நெருப்பிற்கான தலம் என்று ஏன் சொல்லப்படுகிறது என்றால், படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையே யார் தங்களில் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. […]
13.11.2018 அன்று கந்த சஷ்டி விழா! Written by Niranjana தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து சண்டை-சச்சரவு ஏற்படுவதையும் இதில் அசுரர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் எண்ணி கவலை அடைந்தார் சுக்கிராசாரியார். தன் குலத்தில் பிறந்த அசுரர்களை மேலும் அசுர பலம் கொண்டவர்களாக மாற்ற முடிவு செய்தார். இதற்கு வழி தேடிய போது காசியப்ப முனிவரை பற்றி யோசித்ததார். காசியப்பர் முனிவர் அசுரர்களுக்கு தந்தையை போன்றவர். இந்த முனிவர் அசுரகுலத்தில் பிறந்தாலும் குணத்தில் சாந்த சொரூபி. மிக […]