Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by Niranjana

வெற்றி நிச்சயம் இது வேதமந்திரம்

Niranjana  நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன? முயற்சியா? பணமா? சிபாரிசா? என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை. முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் […]

கோடி வரங்களை தரும் தஞ்சை கோடியம்மன்

Niranjana தஞ்சை மாவட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு கோடியம்மன், தஞ்சையின் எல்லையில் காவல் தெய்வமாகவும் இருக்கிறார். அற்புதம் நிறைந்த கோடியம்மன் தோன்றிய வரலாறு என்ன என்பதையும், சோழ மன்னரின் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணி, எதிரிநாட்டு அரசரான சத்துருகோபன் திட்டமிட்டு போருக்கு வந்தபோது, சத்துருகோபனுடன் போரிடும் அளவுக்கு போதிய நிதி நிலை இல்லை என வருந்திய சோழ மன்னரை, எவ்வாறு கோடியம்மன் காப்பாற்றினார் என்பதையும் இன்று நாம் தெரிந்துக்கொள்வோம். அழகாபுரி அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் […]

சிவபுராணம் சொல்லும் சிறப்பான பரிகாரங்கள்

Niranjana   இறைவனை வணங்கிட நாள்-நேரம் பார்க்க தேவையில்லை. எந்த சமயத்திலும் இறைவனை வணங்கலாம். ஆனாலும் இறைவனுக்குரிய மிகவும் விசேஷமான தினங்களில் வணங்கினால், வேண்டியது வேண்டியபடி விரைவில் கிடைத்திட வழிவகுக்கும். எந்தெந்த தெய்வங்கள் என்னென்ன பலன்களை நமக்கு தந்திடும்? என்னென்ன தானங்கள் செய்வதினால் என்னென்ன நற்பலன்கள் கிட்டிடும்? காலையில் எந்த திசையை நோக்கி கண் விழித்திட வேண்டும்?  எந்த திசையை முதலில் பார்க்கக் கூடாது.? போன்ற சாஸ்திர விஷயங்களை சிவபுராணத்தில் சூதமா முனிவர் அழகாக சொல்லி இருக்கிறார். […]

நோய்களை நெருங்க விடாமல் ஆரோக்கியம் காக்கும் ‘தேன்’!

Niranjana நல்ல வாய்ப்புகளை இழக்கச் செய்யும் முதல் எதிரி – சோம்பல். யாராவது சோம்பலாக உட்கார்ந்திருந்தால், “ஏன் இப்படி இருக்கிறாய்? தேனீயை போல் சுறுசுறுப்பாக இரு.” என்பார்கள்.  சுறுசுறுப்பையும் உழைப்பையும் தேனீக்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். தேனீயின் உழைப்பைதான் மற்றவர்களால் திருட முடியும். தேனீக்களின் திறமையை ஒருகாலம் மனிதர்களால் திருடமுடியாது. இறைவனுக்கும் தேன் அபிஷேகம் விசேஷம். தேனீக்கள் நமக்கு சஞ்சிவியை போல் மிக உயர்ந்த மருந்தை தருகிறது. தேனால் என்னென்ன பயன் என்பதை இப்போது நாம் […]

இராமருடன் மோதிய ஆஞ்சநேயர்

நிரஞ்சனா  ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயர், அதே இராமனிடம் மோதினார் என்பதை அறியும்போது ஆச்சரியமாகவே இருக்கும். விதியின் விளையாட்டில் இருந்து யார்தான் தப்பிக்க முடியும்?. யாரும் தொடர்ந்து நண்பர்களாக இருக்கமுடியாது, அதுபோல தொடர்ந்து ஒருவருக்கு எதிரியாகவும் இருக்க முடியாது. காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இந்த விதியின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதனால்தான் நாரதமுனிவரின் சூழ்ச்சியில் ஸ்ரீஇராமரும் அனுமனும் மோதிக் கொண்டார்கள்.  அந்த சம்பவத்தை பற்றி தெரிந்துக் கொள்வோம். உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று நினைத்த […]

சகல நன்மை தரும் சாளக்கிராமம்

நிரஞ்சனா சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன் தரும். இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சாளக்கிராமம் உருவானகதையை பலபேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ –விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும்பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் […]

தூங்கும்போது உடலைவிட்டு வெளியே உலவும் ஆத்மா

நிரஞ்சனா விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம். கனவு  எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது […]

அலைய வைக்கும் சனியை திணற வைத்த விநாயகர்

நிரஞ்சனா மற்றவர்களை பிடித்து அலைய வைக்கும் சனி, ஒருவரை மட்டும் பிடிக்க முடியாமல் அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா? சனீஸ்வரரை கலங்கடித்த விநாயகர் ஒருநாள் கிரக நிலைகளின்படி விநாயகரை சனிபகவான் பிடிக்கவேண்டிய நாள் வந்தது. அதனால் விநாயகரிடம் சென்ற சனிபகவான், “விக்னேஷ்வரா…நாளை தங்களை நான் பிடிக்க வேண்டிய நாள்.” என்று பவ்வியமாக கூறினார். “உன்னால் என்னை பிடிக்க முடியாது“ என்றார் விநாயகர். “உங்கள் தந்தையையே பாதாள லோகத்தில் அமர வைத்தவன் நான். எவராலும்   என் பிடியில் இருந்து […]

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஷீரடி சாய்பாபாவுக்கு நிகழ்த்திய அற்புதம்

நிரஞ்சனா எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அது நல்லவிதமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல வார்த்தைகளே நல்வழிகாட்டியாக அமைந்துவிடும். நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல செயல்களை செய்ய செய்ய  ஊழ்வினை அகலும். வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகள் பூர்வஜென்ம பலன்களால்தான் அமைகிறது. இன்று விதைத்ததைதான் சில மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறோம். எள்ளை விதைத்துவிட்டு நெல்லை எதிர்பார்க்கலாமா?. அதுபோலதான் நாம் செய்யும் நன்மை-தீமைகளே வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது. […]

ஜாதகத்தை வைத்து வணங்கினால் தோஷம் நீக்கும் அச்சிறுபாக்கம் விநாயகர்

நிரஞ்சனா சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் சென்னையிலிருந்து 94 கி.மீ தொலைவில் இருக்கிறது அச்சிறுபாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம்  என்கிற இந்த ஊரின் பெயருக்கு காரணம் இருக்கிறது. அத்துடன் தடைபடும் காரியத்தை தடையில்லாமல் நடக்க அருள் புரியும் தெய்வம் குடியிருக்கும் சிறந்த பரிகார ஸ்தலம் இதுதான். அவற்றை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக இக்கட்டுரையின் நாயகனான அச்சுமுறி விநாயகரின் விளையாட்டை பற்றி தெரிந்துக்கொள்வோம். மூன்று பறக்கும் கோட்டைகள் தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி  இவர்கள் அசுர சகோதரர்கள். அசுரர்கள் என்றாலே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »