பயணிகள் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே பட்ஜெட்டில், அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார். 2015 – 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார். அமைச்சர் சுரேஷ் பாபு தனது ரயில்வே பட்ஜெட் உரையில், “பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை” என்றார். மேலும், “ரயில்வே துறை – இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு […]
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் ‘முரட்டுத்தனம்’ காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாலத்தீவு போலீஸாரின் இந்த செய்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், முகமது நஷீத்தை மாலி போலீஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும், அந்த நடவடிக்கையின்போது நஷீத்தின் சட்டை […]
திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 18 படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்ளை பெரிதும் கவர்ந்தன. உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை,முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார். ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் […]
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினை அமோக வெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அதிமுகவின் பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வர் ஜெயலலிதா. நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 28 வேட்பாளர்களையும் தோற்கடித்து, 151516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் வளர்மதி. இதுகுறித்து அவரது அறிக்கையில், “அ.இ.அ.தி.மு.க மக்களின் கட்சி. மக்கள் தங்களுடைய வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நம்புகின்ற ஒரே கட்சி. மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு […]
அமோக வெற்றிபெற்றார் அதிமுக வேட்பாளர் வளர்மதி. நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தற்போது இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளரான வளர்மதி 1,51,561 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த் 55,046 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். அதோடு பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன் 4,853 வாக்குகள் பெற்றும், கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் 1,449 வாக்குகள் பெற்றும் டெபாசிட் இழந்துள்ளனர் என்பது […]
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது வர்த்தக வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டாலருக்கும் மேலாக ஆண்டு வருவாயை ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக லாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய […]
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் பத்திரிகை ஆசிரியர், கார்டூனிஸ்ட் உள்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த 4 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தொஅடர்ந்து பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரீஸ் நகரில் 3 நாட்களாக தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், தலைநகர் […]