Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

ஜாதகத்தில் சூரியன் – சுக்கிரன் சேர்க்கை நன்மையா தீமையா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

பொதுவாக ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் துணை இல்லாமல் சூரியன் – சுக்கிரன் மட்டுமே இணைந்து இருந்தால் மனமகிழ்ச்சி கொடுப்பதில்லை. வாழ்க்கையில் பல பிரச்சினைகள், ஏமாற்றங்கள் தருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் நிந்தி கரையேறுவது போல வாழ்க்கை இருக்கும். சின்ன விஷயத்திலும் இன்னல் தரும். காரணம், சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு தன்மை கொண்டதல்லவா.

நெருப்பிலே தண்ணீர் பட்டால் சுர்ரென்று சப்தம் வருமே அதை போல, இவர்கள் சும்மா இருந்தாலும் சுர்ரென்று கோபம் வரும்படியான செயல்களை சிலர் இவர்களுக்கு செய்வார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் – சுக்கிரன் மட்டும் ஒரு இராசியில் இணைந்து இருந்தால், குடும்ப வாழ்க்கையில் எதிரும் புதிருமாக சில நேரம் இருக்கச் செய்யும். அதனால் இதுபோல கூட்டு கிரகம் உடையவர்கள் குடும்ப வாழ்க்கையில் சற்று விட்டு கொடுத்து அனுசரித்து போவதுதான் நல்லது. காரணம், “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று பல நேரங்களில் வாதிடுவது இவர்களின் வழக்கம். இந்த விட்டு கொடுக்காத தன்மையால் ஏன் பிரச்னை வராது.?

சூரியனும் சுக்கிரனும் ஒன்றாக உள்ள ஜாதகர்களின் திருமணம், தொழில், உத்தியோகம் எல்லாமே எதிர்பாராமல் நடக்கும். இவர்கள் சற்று நிதானமாக சமயோசிதமாக எதையும் செய்ய வேண்டும். வரவு எட்டணா – செலவு பத்தணா என்ற கதை ஆகிவிடும். ஆகவே வரவு-செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது.

இவர்கள் மீது குறை கூற முடியாது. எதையும் நம்பக்கூடியவர்கள். அதிதைரியமாக செய்துவிட்டு நஷ்டபட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

சூரியன்-சுக்கிரன் கிரக சேர்க்கை உடையவர்களுக்கு தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் சஞ்சலம் ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால், களத்திரக்காரகன் சுக்கிரன், சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆவதால் திருமணம் தாமதம் (அ) வீண் சஞ்சலம் உண்டாக்கும்.

இப்போது லக்கினத்தில் இருந்து இந்த கூட்டணியை பார்ப்போம்.

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், உடல்நலனில் சற்று பாதிப்பை உண்டாக்குகிறது. கௌரவம் கெடும்படி ஏதாவது செய்ய வைக்கிறது.

லக்கினத்திற்கு 2-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு. கண் பார்வையில் குறை தரும். தேவை இல்லாமல் விரையம் செய்கிறது. கோபம் அதிகரிப்பதால் வார்த்தைகள் தாறுமாறாக வந்து, மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவார்கள்.

லக்கினத்திற்கு 3-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும். அதிக அலைச்சலை கொடுக்கும். பயணம் அதிகம் உண்டு. தற்பெருமை பேச வைக்கும். மகாதைரியம் தரும்.

லக்கினத்திற்கு 4-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வாகனம் விஷயத்தில் கவனம் தேவை. வீடு-மனை நிதானமாக அமையும். கல்வி தடை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று சம்மந்தப்பட்ட தொல்லை கொடுக்கும். தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும்.

லக்கினத்திற்கு 5-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், புத்திரபேறு நிதானமாக காலங்கடந்து கொடுக்கும். மனஉலைச்சல் உண்டாகும். நித்திரையை கெடுக்கும். தண்ணீரில் கரைந்த உப்புபோல கையில் உள்ள பணம் கரையும்.

லக்கினத்திற்கு 6-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வீண் விவாதம் உண்டாக்கும். தேவை இல்லா கடன் பெருக செய்யும். ஜாமீன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அடிக்கடி உடலில் நோய் உபாதை உண்டாக்கும். எதிரிகளை உருவாக்கும். கவனமும், நிதானமும் தேவை.

லக்கினத்திற்கு 7-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், திருமணம் வாழ்க்கை சிரமபட்டு நடக்கும். கல்யாணம், காலங்கடந்து நடக்கும். நண்பர்களால் விரையங்கள் உண்டு. அரசாங்க விஷயத்தில் கவனம் தேவை. கூட்டுதொழில் நஷ்டத்தை கொடுக்கும்.

லக்கினத்திற்கு 8-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், கண்டங்கள் போல் நோய் நொடி கொடுக்கும். ஆனால் ஆயுளுக்கு பயமில்லை. வழக்கு வீண் விவாதங்கள் உண்டாக்கும். எச்சரிக்கை தேவை. மறைமுக தொல்லைகள் வரும்.

லக்கினத்திற்கு 9-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சொத்து விஷயத்தில் பிரச்சினை உருவாக்கும். சொத்து வாங்கும் விஷயத்தில் வில்லங்கம் உண்டாக்கும். மேல் படிப்பு சற்று தடைசெய்யும். தந்தைக்கு உடல்நலம் பாதிக்கச் செய்யும்.

லக்கினத்திற்கு 10-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், தொழில் உத்தியோகத்தில் தேவை இல்லா பிரச்சினை உண்டாக்கும். முன்னேற்றத்தை சற்று தாமதப்படுத்தும். வாக்கு பலிதம் கொடுக்கும்.

லக்கினத்திற்கு 11-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், ஆடம்பர செலவு செய்ய வைக்கும். உங்கள் முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிக்க வைக்கும். சதா சிந்தனையை தூண்டும். தேவை இல்லா நண்பர்களால் விரையம் உண்டாக்கும். அயல்நாடு விஷயத்தால் செலவு வைக்கும்.

லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும். செலவுகள், விஷம் போல ஏறும். பக்தி அதிகரிக்க செய்யும். நன்மைகள் செய்தாலும், தீமைகள் வந்தடையும். மனச்சஞ்சலம் உண்டாகும்.

சரி, இந்த சூரியன்-சுக்கிரன் இணைவதால் நன்மை செய்ய வில்லை – லாபம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் தீமையை உண்டாக்குகிற இந்த கிரகதோஷத்தை தடுக்க முடியுமா? என்றால் முடியும்.

மோதிர விரலில் பச்சைகல் எமரால்டு (Emerald) அல்லது  சாதாரண பச்சை கல் இருந்தாலும் பரவாயில்லை, அதை வெள்ளியில் Open Setting  செய்து அணிந்து கொண்டால், பிரச்னைகள் சற்று குறையும். பிரதி ஞாயிறுதோறும், கிரக வழிபாட்டில் சூரியனுக்கு முக்கியதுவம் தந்து அர்ச்சனை-ஆராதனை போன்ற சூரியனுக்குரிய பரிகாரங்கள் செய்தால் நன்மை தேடி வரும்.  அதுபோல, பெயர் எண்ணை பிறந்த தேதிக்கு ஏற்ப அமைத்துக் கொண்டால் துன்பங்கள் தூசுபோல பறக்கும். நல்ல வாழ்க்கை அமையும். வாழ்த்துக்கள்.!

First Published on: 04.05.2012 | Time: 08.01 AM

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

More Astrology Articles in English

More Astrology Articles in Tamil

Send your Feedback to: editor@bhakthiplanet.com

For Astrology consultation Click Here

© 2012-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech