Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

வளம் தரும் கரிவரதராஜப்பெருமாள்

Written by Niranjana NIRANJHANA

கரிவரதராஜப்பெருமாள் கோயில், ஆறகழூர் – சேலம் மாவட்டம்.

ஒருவருக்கு பண வசதி வந்துவிட்டால் பழைய நிலையை மறந்து புதிய வாழ்க்கைகேற்ப மாறுவார்கள். “நான் உனக்கு நிறைய உதவிகள் செய்தேன்” என்று சிலர் அந்த நபர்களிடம் சொன்னால், “உண்மைதான்” என்று மனம் ஒப்புக்கொண்டாலும் வாய் ஒப்புகொள்ளாது.

இந்த மனநிலையில்தான் துரியோதனனும் இருந்தான்.

“நன்றி மறக்க கூடாது என்று என் மனம் சொன்னாலும், என் செயல்கள் நன்றி மறந்தவனாகவே அமைந்துவிடுகிறது” என்று வருந்தினானாம் துரியோதனன்.

மனம் ஒரு நிலையில் இருந்து சிந்திக்க விடுவது இல்லை. அது நன்மையாக இருந்தாலும் சரி, கெடுதலாக இருந்தாலும் சரி. போகி பண்டிகையன்று பழையதை கொளுத்துவது போல, ஒருவர் தம் முன்னேற்றத்திற்கு யார் காரணம் என்பதையே மறந்து, “எல்லாம் நானே நானே” என்று பகவானையே மறந்து பேசினால் அநியாயம் அல்லவா?

தெய்வம் இருக்கிறது என்பவர், “எல்லாம் என் Power” என்று சொல்ல மாட்டார்.

கடவுளை நம்புகிற ஆத்திகன் கடவுளை பெயரை உச்சரிக்கின்றான்.

கடவுளை மறுத்து திட்டுகிற நாத்திகனும் கடவுள் பெயரைதான் உச்சரிக்கின்றான்.

இருந்த பொருளைதான் இல்லை என்போம்  

இருந்த பொருளைதான் இல்லை என்போம். இல்லாத ஒரு பொருளை இல்லை என்று சொல்வோமா? அல்லது அதை பற்றிதான் பேசுவோமா? கடவுள் இல்லை இல்லை என்று சொல்லும்போதுதான், இதற்கு முன் இருந்ததோ, இருந்திருக்கலாமோ, இருக்கிறதோ என்று குழப்பம் உண்டாகும். தெய்வம் இருக்கிறது என தீர்மானித்துவிட்டால் எந்த மன குழப்பமும் உண்டாகாது. இறைவனை உயர்த்தி பேசுவது அவன் தந்த வாயால்தான். அவனை திட்டி பேசுவதும் அவன் தந்த வாயால்தான். அது இறைவனுக்கு தெரிந்ததால்தான் திட்டுகிறவனை பற்றி கண்டுகொள்வதில்லை. பிஞ்சு குழந்தை எட்டி உதைத்தால் அதன் தாய்-தந்தைக்கு கோபம் வருமா?

சரி நாம் இப்போது கரிவரதராஜப்பெருமாள் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ராஜராஜன் ஆட்சிகாலத்தில் வறட்சி ஏன்? 

Manamakkal Malaiபல நூற்றாண்டுகளுக்கு முனபு இந்த பகுதியை ராஜராஜ வாண கோவரையன் என்கிற அரசர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஆட்சி காலத்தில் நாடு வறட்சி இல்லாமல் செல்வசெழிப்பாக இருந்தது. இதனால் அரசரும்  நாட்டு மக்களும் இறைவழிபாட்டை மறந்தார்கள்.

இறைவழிபாடு எங்கே குறைகிறதோ அங்கே அநீதி தலைவிரித்தாடும். நேர்மை குறையும். அரசருக்கே மதிப்பு போய்விடும். அநீதி வளர்ந்தால் பூமிதாய் அமைதியாக இருப்பாளா? நிச்சயம் இல்லை. தன்னுடைய கோபத்தை இயற்கை சீற்றத்தில் காட்டுவாள்.

அப்படிதான் ஏற்பட்டது மன்னர் இந்த அரசர் ஆட்சியிலும். இறைவழிபாடு குறைந்ததால் நாட்டில் அநீதிகள் ஏற்பட்டது. மழை இல்லாமல் போனதால் வறட்சி ஏற்பட்டது வறுமையும் அழையா விருந்தாளியாக ஒட்டிக்கொண்டது. சுபிக்ஷமாக இருந்த நாடு பசி, பட்டினி என்று ஆனது. மனம் வருந்தினார் அரசர்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, நம் நாட்டின் வறச்சிக்கு காரணம் தெய்வ வழிபாடு குறைந்ததால் இருக்குமோ? என்று எண்ணினார் அரசர்.

ஒருநாள் இரவு அரசரின் கனவில் பெருமாள் தோன்றி, “என்னைBhakthi Planet மறந்தீர்கள் கஷ்டபடுகிறீர்கள். இனியாவது வணங்குங்கள். நீங்கள் என்னை வணங்கினால் பாலைவனமும் சோலைவனமாக மாறும்.” என்று ஆசி வழங்கினார் பெருமாள்.

மறுநாள் தன்னுடைய கனவை மந்திரிகளிடம் சொன்ன அரசர், உடனே ஆலயங்களில் சிறப்பாக பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்தார். அத்துடன் வழிபாடு நின்றுவிட்ட ஆலயங்களிலும் வழிபாடுக்கு ஏற்பாடு செய்தார் மன்னர்.

அரசர் எந்த வழியோ மக்கள் அவ்வழி என்பது போல மக்களும் தெய்வத்தை வணங்க தொடங்கினார்கள்.  இதன் பயனால் நாட்டில் மழை வளம் உண்டானது. வறட்சி நீங்கியது. இதனால் பெருமாளுக்கு ஆலயம் எழுப்பி  கரிவரதராஜப் பெருமாள் என்று பெயர் வைத்தார் அரசர். அத்துடன்  ஸ்ரீதேவி, பூதேவியையும் பிரதிஷ்டை செய்தார்.

கரிவரதராஜப் பெருமாள் எதிரே கமலவல்லி தாயார் இருக்கிறார். தாயார் சன்னதி முன்பு உள்ள நாகதேவி, தன்னை வணங்கும் பக்தர்களின் நாகதோஷத்தை தீர்க்க பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறாள்.

“வாழ வழி தெரியவில்லை, கண்னை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது” என்ற மனம் வருந்துபவர்கள் ஒரு முறையாவது கரிவரதராஜப் பெருமாளை தரிசித்தால் இருளான வாழ்க்கை பாதையில் கரிவரதராஜப் பெருமாள் நல் வழிகாட்டுவார். மனித உருவத்திலும் தன் பக்தர்களை காக்க வருவார்.

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 28 2013. Filed under Headlines, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech