Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

உலக மகளிர் தினம்




 நிரஞ்சனா 

நியூயார்க் நகரில் ஆடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தார்கள். இதற்கு காரணம் – ஏதோ சிறை கைதிகளை அடைத்து வைப்பது போல் வெளியே செல்லும் வழியை மூடியதால் இந்த கொடுர சம்பவம் அரங்கேறியது.  இதன் பிறகுதான் பெண்களே தங்கள் பாதுகாப்புக்காக போராடினார்கள். மார்ச் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பபட்டது.  அந்த நாளைதான் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். “நாட்டுக்கு சும்மா கிடைக்கலே  சுதந்திரம்“ என்பது போல், பெண்களுக்கும் சும்மா கிடைக்கவில்லை இந்த தினம். கடுமையாக போராடி பல உயிர் தியாகத்திற்கு பிறகு, பல அவமானத்திற்கு பிறகு கிடைத்த இந்த வைர தினத்தை போற்றுவோம்.

பெண்களுக்கு ஆண்கள் எதிரானவர்களா?

பெண்களுக்கு ஆண்கள் எதிரியாக இருந்த காலம் போய், சில நல்ல உள்ளம் படைத்த ஆண்கள், பெண்களுக்காக போராடினார்கள். அது  1911-ம் ஆண்டு. ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு பெண்களுக்கும் வேலை வாய்ப்பில் சமஉரிமை, அரசியலில் சமஉரிமை அளிக்க வேண்டும் எனப் போராடினர். இதனால் ஆண்கள், பெண்களின் நலனுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை பெண்களு்ம் உணர்தார்கள்.

இப்படி பெண்கள் சுதந்திரமாகவும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கும் இருந்ததால் பெண்களால் பல துறைகளில் சாதிக்க முடிகிறது.  பெண்களின் சாதனை முயற்சிகளுக்கு ஊக்கமாக அவர்களுடைய தந்தை, சகோதரர், நண்பர்களும், சில பெண்களுக்கு கணவரின் உற்சாக வார்த்தைகளாலும் சாதிக்க முடிகிறது. சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

செல்லம்மாள்

மகாகவி பாரதியிடம் அவருடைய மனைவி செல்லம்மாள் தினமும், இன்று சமைக்க துவரம் பருப்பு இல்லை. அரிசி இல்லை என்று சொல்வார். இதை கேட்ட மகாகவி, “தினமும் இல்லை இல்லை என்று சொல்லாதே” என்றார். மகாகவியின் மனைவிக்கு பேச தெரியாதா என்ன? “அரிசி டப்பா காலியாக இருக்கிறது. “பருப்பு டப்பா காலியாக இருக்கிறது“ என்பாராம் செல்லம்மா. இதை கேட்ட மகாகவி ஆச்சரியம் அடைந்தார். பெண்களுக்கும் நகைச்சுவை உணர்வோடு பேசும் திறமை இருக்கிறது.  அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார். ஒரு பெண் முன்னேறினால் அவளின் குடும்பமும் முன்னேறுகிறது என்பதை உணர்ந்தார். பெண் விடுதலைக்காக போராடினார்.

 

பெண்களின் சுதந்திரத்தை கண்டு பெண்களே பயப்படும் நிலை 

அன்று பெண் சுதந்திரத்திற்காக போராடிய ஆண்கள் எதிர்பார்த்த பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு, அதிகாரம் போன்றவை இன்று பெண்களுக்கு ஒரளவு கிடைத்துவிட்டது.  அதனை நல்லமுறையில் பயன்படுத்தி ஆணுக்கு நிகராக நின்று பெண்களும் தங்கள் குடும்பத்தை முன்னேற்றுகிறார்கள்.

அதே சமயம் தங்கள் குடும்பத்தை முன்னேற்றக்கூடிய நல்ல சந்தர்ப்பங்களை தவறாக பயன்படுத்தும் சில பெண்களும் இருப்பதை மறுக்க முடியாது. இதனால் சில ஆண்களே தங்களுக்கு பாதுகாப்பு சங்கம் உருவாக்கி கொள்ளும் நிலையில் இருப்பதை பார்க்கிறோம். ஒரு பெண்ணுக்கு நம்பிக்கையோடு  சமுதாயமும் அவளின் குடும்பமும் தருகிற சுதந்திரத்தை சில பெண்ணே துஷ்பிரயோகம் செய்கிறபோது, அவளின் எதிர்காலத்தை மட்டும் அது பாதிப்பதில்லை. பெண் சமுதாயத்தையே அது பாதிக்கிறது. இதில் பெண்களே இன்று பெண்களை கண்டு அஞ்சுகிற நிலையும் இருக்கிறது. பெண்கள் மத்தியிலேயே இது கசப்பான மனநிலையை ஏற்படுத்துகிறது. 

தன் மகளுக்கு தருகிற சுதந்திரம் எதில்போய் முடியுமோ? என்று அந்த பெண்ணின் தாயே பயப்படுகிற மனநிலையில் இருந்தால் அது நல்லதா என்றும் பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆனால் ஒன்றை மட்டும் யாரும் மறந்துவிடக்கூடாது –

எந்த குடும்பத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அன்பாக நடத்தப்படுகிறார்களோ அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த தலைமுறையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

lick here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

Posted by on Mar 8 2012. Filed under நீங்களும் ஜெயிக்கலாம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »